ரிஷி சுனக் வந்தது புதிய பிரச்சனை.. முக்கிய அமைச்சர் ராஜினாமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரிட்டன் பொருளாதாரம் மோசமான நிலைக்குச் சென்று வரும் நிலையில், பணவீக்க உயர்வால் அந்நாட்டு மக்கள் தவித்து வரும் நிலையில் பிரிட்டன் பிரதமராக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் புதிய பிரச்சனையை எதிர்கொண்டு உள்ளார்.

ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டின் பிரதமராகப் பதவியேற்றிய நாளில் இருந்து எதிர்க்கட்சிகளின் அழுத்தமும், எதிர்ப்பும் மிகவும் அதிகமாக உள்ளது.

லேபர் கட்சி ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டின் பிரதமராக வருவதற்கு முன்பே பொதுத் தேர்தல் கேட்ட நிலையில் தற்போது ரிஷி சுனக் நிர்வாகக் குழுவில் ஏற்படும் தடுமாற்றங்கள் எதிர் கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.

ரிஷி சுனக் - மோடி முக்கிய பேச்சுவார்த்தை.. இந்தியா-பிரிட்டன் உறவு மேம்படுமா? ரிஷி சுனக் - மோடி முக்கிய பேச்சுவார்த்தை.. இந்தியா-பிரிட்டன் உறவு மேம்படுமா?

ரிஷி சுனக்

ரிஷி சுனக்

பிரிட்டன் நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் புதன்கிழமை அவரது நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவர் முக்கியமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ள வேளையிலேயே அமைச்சரவையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது ரிஷி சுனக்-ன் நிர்வாகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

சர் கவின் வில்லியம்சன்

சர் கவின் வில்லியம்சன்

பிரிட்டன் அமைச்சகத்தில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்த சர் கவின் வில்லியம்சன், தனது சக கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர் மற்றும் அரசு ஊழியர்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார். இதுகுறித்த விசாரணை நடந்து வரும் நிலையிலேயே தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

ராஜினாமா-வுக்கு ஒப்புதல்

ராஜினாமா-வுக்கு ஒப்புதல்

இந்த நிலையில் சர் கவின் வில்லியம்சனின் ராஜினாமா கடிதத்தைப் பெரும் சோகத்துடன் ஏற்றுக்கொள்வதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். மேலும் சர் கவின் வில்லியம்சனின் தனிப்பட்ட ஆதரவு மற்றும் விசுவாசத்திற்கும் நன்றி எனவும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கன்சர்வேடிவ் அரசுக்கும், கட்சிக்குமான அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது என்றும் ரிஷி சுனக் புகழ்ந்துள்ளார்.

லேபர் கட்சி

லேபர் கட்சி

ஆனால் எதிர்க்கட்சியான லேபர் கட்சி இதை ரிஷி சுனக்-ன் மோசமான தீர்ப்பு மற்றும் மோசமான தலைமைக்கான அடையாளம் என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும் லேபர் கட்சியின் தலைவர் சர் கீர் ஸ்டார்மர் ஒவ்வொரு வாரமும் நடக்கும் பிரதமர் கேள்வி நேரத்தில் இதுகுறித்த கேள்விகளை முன்வைக்க உள்ளதாகத் தெரிகிறது.

போரிஸ் ஜான்சான்

போரிஸ் ஜான்சான்

போரிஸ் ஜான்சான் பிரிட்டன் நாட்டின் அதிபராக இருக்கும் போதே அவருடைய நிர்வாகக் குழு பல்வேறு விதிமுறை மீறல்கள், தவறுகளைச் செய்ய நிலையில், குறிப்பாக முன்னால் அமைச்சர் கிறிஸ் பின்சர் குடிபோதையில் இரண்டு ஆண்களைத் தவறான இடத்தில் தொட்டதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்குச் சரியான நடவடிக்கை எடுக்காமல் இருந்தார்.

சரக்கு பார்ட்டி

சரக்கு பார்ட்டி

இது மட்டும் அல்லாமல் கொரோனா தொற்றுக் காலத்தில் பிரிட்டன் முழுவதும் லாக்டவுனில் மூழ்கியிருக்கும் போது போரிஸ் ஜான்சன் மற்றும் அவருடைய சகாக்கள் (அதில் அப்போதைய பிரிட்டன் நிதியமைச்சரான ரிஷி சுனக்-ம் அடக்கம்) பிரதமர் வீட்டில் சரக்கு பார்ட்டி வைத்தது நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை உடன் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் பெற்ற அமைச்சர்களின் ரிஷி சுனக்-ம் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர் கவின் வில்லியம்சன் குற்றச்சாட்டு

சர் கவின் வில்லியம்சன் குற்றச்சாட்டு

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாகப் பிரிட்டன் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சர் கவின் வில்லியம்சன் கொடுமைப்படுத்துதல் அதாவது bullying குற்றச்சாட்டுக்கு இன்று ரிஷி சுனக் முடிவு எடுத்துள்ளார். இதேபோன்ற ஒரு சம்பவம் தான் ஜூலை மாதம் நடந்தது, இதன் பின்பு தான் போரிஸ் ஜான்சான் தலைமையிலான நிர்வாகம் கவிந்தது.

பிரிட்டன்

பிரிட்டன்

இந்தப் பிரச்சனைக்கு மத்தியில் ரிஷி சுனக் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான பணிகள் தொய்வு அடைந்துள்ளது. பிரிட்டன் நாட்டில் பணவீக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் அந்நாட்டின் மத்திய வங்கியான பேங்க ஆப் இங்கிலாந்து தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 3 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

UK PM Rishi Sunak in trouble; UK minister Sir Gavin Williamson resigns amid bullying allegations

UK PM Rishi Sunak in trouble; UK minister Sir Gavin Williamson resigns amid bullying allegations
Story first published: Wednesday, November 9, 2022, 17:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X