அமெரிக்காவுக்கு மீண்டும் ஆப்பு வைத்த லண்டன்.. “Marriott international”-க்கு ரூ.850 கோடி அபராதம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன் : ஒரு புறம் அமெரிக்கா மற்ற நாடுகளை எங்களது டேட்டாக்களை திருடுவதாக கூறி வந்த நிலையில், தற்போது அமெரிக்காவுக்கே அது ரீபிட் ஆகி வருகிறது. ஆமாங்க.. அமெரிக்கா வாடிக்கையாளர் தரவைப் பாதுக்காக்க தவறியதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த மேரியட் இண்டர்னேஷனல் நிறுவனத்திற்கு கிட்டதட்ட ரூ.850 கோடி அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

இதில் கவனிக்கபட வேண்டிய விஷயம் என்னவெனில் இது தொடர்ந்து இந்த வாரத்திலேயே முன்மொழியப்பட்ட இரண்டாவது அபராதமாகும்.

அமெரிக்காவுக்கு மீண்டும் ஆப்பு வைத்த லண்டன்.. “Marriott   international”-க்கு ரூ.850 கோடி அபராதம்!

அதிலும் ஐரோப்பாவின் கடுமையான புதிய தனியுரிமை விதிகளின் கீழ் இங்கிலாந்து கட்டுப்பாளர்களால் இந்த வாரம் விதிக்கப்பட்ட இரண்டாவது பிரச்சனை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனரல் டேட்டா ப்ரொடெக்டன் ரெகுலேஷன் (GDPR), இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 30 மில்லியன் ஐரோப்பியர் உட்பட 339 மில்லியன் விருந்தினர் பதிவுகளை அம்பலபடுத்திய மேரியட் தரவு மீறலால் இந்த அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கட்டுப்பாட்டாளர் கூறியுள்ளார்.

அதிலும் ஹேக்கிங் கடந்த 2014லிலேயே தொடங்கியதாகவும், ஆனால் இந்த அத்துமீறல் நடவடிக்கையை கடந்த 2018லியே கண்டுப்பிடிக்கப்பட்டது என்றும் இந்த கட்டுப்பாட்டாளர்காள் கூறுகின்றனர்.

எனினும் இந்த அபாராதம் குறித்து மேரியட் நிறுவனம், கட்டுப்பாட்டாளர்களால் விதிக்கபட்ட இந்த அபாரதம் குறித்து நிறுவனம் மேல் முறையீடு செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதோடு மேரியட் தனது விருந்தினர் தகவல்களின் தனியுரிமை தகவல்கள் மற்றும் பாதுகாப்பை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். மேலும் எங்களது விருந்தினர்கள் எதிர்பார்க்கும் சிறப்பான தரத்தை நாங்கள் பூர்த்து செய்ய தொடர்ந்து கடுமையாக உழைக்கிறோம் என்றும் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்னே சோரான்சன் ஒர் அறிக்கையில் கூறியுள்ளார்.

தரவுகளை சேகரிப்பது, செயலாக்குவது மற்றும் சேமிப்பது ஆகியவை பாதுகாப்பனவே என்பதை உறுதிப்படுத்த ஜி.டி.பி.ஆர் நிறுவனங்களை கட்டாயப்படுத்துகிறது.

அதோடு ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் உள்ளவர்களை பற்றிய தரவை வைத்திருக்கும் அல்லது பயன்படுத்தும் எந்தவொரும் அமைப்பு இது எங்கு அமைந்திருந்தாலும் விதிமுறைக்கு உட்பட்டது என்றும் கூறியுள்ளது.

 

இதையெல்லாவற்றையும் விட இதையெல்லாம் மீறும் நிறுவனங்களுக்கு அவர்களின் ஆண்டு வருவாயில் 4 சதவிகிதம் வரை அபாராதம் விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இது வாரத்தின் இரண்டாவது திருட்டு நடவடிக்கை எனவும், முன்னதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிக்கும் பயனிகளின் தனிப்பட்ட விவரங்களை கணினியின் மூலம் ஹேக்கர்கள் திருடிய குற்றத்திற்காக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கிட்டதட்ட 1571 கோடி ரூபாய் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

இது பயணிகளின் தனிப்பட்ட விவரம் என்பது அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம். அதை திருட்டில் இருந்து பாதுகாக்க தவறும் பட்சத்தில் அதனால் ஏற்படும் சிரமம் என்பது அதைவிட அதிகம் என்பதை சட்டம் தெளிவாக விளக்கியுள்ளது. அந்த சுதந்திரம் பறிபோக காரணமாக இருந்ததை ஒத்துக்கொள்ள முடியாது என்று பிரிட்டிஷ் தகவல் ஆணையர் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

UK proposes another huge data fine for American companies

UK proposes another huge data fine for American companies
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X