பில் கேட்ஸ் பற்றி நீங்களே கேள்விப்படாத உண்மைகள்..!

By: Meganathan S
Subscribe to GoodReturns Tamil

மைக்ரோசாப்ட் நிறுவனரும், உலகப் பணக்காரர்களில் ஒருவராகவும் இன்று அறியப்படும் பில் கேட்ஸ் தன் இளமைக் காலத்தில் நம்மைப் போன்ற எளிமையாகவே வாழ்ந்து வந்துள்ளார்.

கணினித் துறையில் தவிர்க்க முடியாத தனிப் பெருமையைச் சம்பாதித்துள்ள பில் கேட்ஸ் பலருக்கும் வாழும் இன்ஸ்பிரேஷன் என்றே சொல்லலாம். இத்தகைய பெயர், புகழ், பணம் அவருக்கு மிக எளிதாய் கிடைத்திடவில்லை.

தினசரி வாழ்நாளில் அடுத்த நிமிடம் எப்படி இருக்கும் என யாருக்கும் தெரிந்திராத நிலையில், தன் துறை சார்ந்த வளர்ச்சியை முன்கூடியே கணித்து அதற்கேற்ற திட்டங்களை வகுத்த பில் கேட்ஸ் தன் வாழ்நாளில் சந்தித்து அனுபவித்த, நம்மில் பலருக்கும் தெரிந்திராத சில சுவாரஸ்ய அனுபவங்களை அனுபவிப்போம்.

பில் கேட்ஸ்

ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை முடிக்காமல் பாதியிலேயே நிறுத்திவிட்டு, மைக்ரோசாப்ட் மூலம் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாகியுள்ள பில் கேட்ஸ் தன் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்களைச் சந்தித்துள்ளார். இதுதவிரப் பணியாளர்களுக்குக் கடுமையான மேலாளர், திறமையான முடிவுகளைத் தடாலடியாய் எடுப்பதோடு, சமைப்பதில் அதீத ஆர்வம் காட்டுபவர்.

 

 

சிக் மேக்நெட்

சிறுவயதிலேயே பள்ளியில் நற்பெயர் எடுத்தார் பில் கேட்ஸ். பள்ளி நிர்வாகம் இவரது திறமையைப் பார்த்துக் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தி அட்டவணையை உருவாக்கும் பொறுப்பைப் பில் கேட்ஸ்-இடம் வழங்கியது. நம்மவர் (கேட்ஸ்) வாய்ப்பை நன்கு பயன்படுத்தி வகுப்புகளில் தனக்குப் பிடித்தமானவர்களுடன் (பெரும்பாலும் பெண்கள்) நட்பை வளர்த்துக் கொண்டார்.

ஹார்வேர்டு கல்வி

ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தான் சேர்ந்த பாடங்களை ஆர்வம் செலுத்தாமல், தனக்குப் பிடித்த பாடங்களை மட்டும் கவனித்து வந்தார். எனினும் இறுதி தேர்வில் மட்டும் ஏ கிரேடு எடுக்கப் பில்கேட்ஸ் தவறியதில்லை.

கணித மேதை

ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் 20 வயதான பில் கேட்ஸ் பேன்கேக் சார்ட்டிங் (pancake sorting) எனும் கேள்விக்கு விடை கண்டறிந்தார். பேன்கேக் சார்ட்டிங் கணித பாடத்தில் முப்பது ஆண்டுகளாய்த் தீர்க்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பேன்கேக் சார்ட்டிங் விடையை வருடாந்திர இதழில் அச்சடிக்கப்படும் என்பதைத் தெரிவிக்கப் பேராசிரியர் பில் கேட்ஸ்-ஐ அழைத்தார், எனினும் பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் துவங்கப் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினார்.

 

அதிவேகம், அபராதம்

அதிவேக பயணத்திற்காக மூன்று முறை அபராதம் செலுத்தியுள்ளார் பில் கேட்ஸ், அதுவும் இருமுறை ஒரே போலீஸ் அதிகாரியிடம் சிக்கினார்.

பொதுவாக அல்புக்யூர்க்கில் இருந்து சீயாட்டில் அமைந்துள்ள புதிய இல்லத்திற்குப் போர்ஷ் 911 கார் முலம் அதிவேகமாகச் செல்வார். அதுவும் அல்புர்யூர்க் பாலைவன பகுதிகளில் இவரது வேகம், அசுரத்தனமாய் இருக்கும்.

ஒருமுறை தன் நண்பரிடம் இருந்த போர்ஷ் 928 சூப்பர் காரை வாங்கி வேகமாக வந்து கொண்டிருந்த கேட்ஸ் காரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகப் பார்க் செய்தார். பின் இந்தக் காரை சரி செய்ய ஒருவருடம் ஆனது.

 

கார் நம்பர்

மைக்ரோசாப்ட் ஊழியர்களின் லைசென்ஸ் பிளேட் நம்பர்களை நினைவில் வைத்துக் கொண்டு அவர்கள் அலுவலகத்திற்கு வந்து செல்லும் நேரத்தை பில் கேட்ஸ் கவனிப்பார். ஒரு பேட்டியில், 'அவர்கள் எந்தளவு கடுமையாக உழைத்தனர் என்பதைப் புரிந்து கொள்ளச் சிறிதளவு கவனமாக இருக்க வேண்டியுள்ளது. என அவர் தெரிவித்தார்'.

'ஊழியர்கள் எத்தனை மணிக்கு உள்ளே வருகின்றனர், எப்போது வெளியே செல்கின்றனர் என்பதை, அவர்களின் லைசென்ஸ் பிளேட் பார்த்தே என்னால் கூறிட முடியும், என உங்களுக்குத் தெரியுமா. எனினும் நிறுவனத்தின் அளவு பெரியதாக இதை நான் கைவிடும்படியாகி விட்டது. '

 

மைன்ஸ்வீப்பர்

விண்டோஸ்-இன் பிரபல கேமாக இருந்த மைன்ஸ்வீப்பர் பில் கேட்ஸ் அதிகம் பிடித்தமான கேம் ஆகும், பணியில் அதிகக் கவனம் செலுத்த அவர் அலுவலகக் கணினியில் இருந்து மைன்ஸ்வீப்பர் கேமினை அன்இன்ஸ்டால் செய்திடுவார்.

ஒருமுறை மைக்ரோசாப்ட் ஊழியர் மைன்ஸ்வீப்பர் கோடுகளைக் கேட்ஸ் ஸ்கோரை மிஞ்சும் படி எழுதினார், உடனே கேட்ஸ் இந்த ஊழியருக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார். அதில் 'மனிதர்களை விட இயந்திரங்கள் வேகமாக இருக்க முடியும் என்றால், நம்மால் எப்படி மனித நியாயத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்'.

 

எகனாமி கிளாஸ்

1990களில் மைக்ரோசாப்ட் வளர்ச்சி உச்சத்தில் இருந்த போது, ஊழியர்கள் மற்றும் பில் கேட்ஸ் என அனைவரும் விமானங்களில் பயணித்தனர். பின் 1997-ம் ஆண்டில் பில் கேட்ஸ் தனக்கெனப் பிரத்தியேக ஜெட் விமானத்தை வாங்கினார். இதன் விலை 21 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

'F' வார்த்தை

ஒவ்வொரு விவாதத்திலும் பில் கேட்ஸ் எத்தனை முறை "f**k" என்ற வார்த்தை பயன்படுத்துகிறார் என்பதைக் கவனிக்க ஒருவர் இருந்தார்.

முன்னாள் மைக்ரோசாப்ட் ஊழியரும் ஸ்டாக் ஓவர்ஃப்ளோ நிறுவனருமான ஜோயல் ஸ்போல்ஸ்கி இந்தச் சுவாரஸ்யத்தைத் தனது பிளாக் போஸ்டில் குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் காலத்தில் பில்ஜி ரீவியூஸ் (BillG reviews) வழக்கத்தில் இருந்தது, இங்கு ஒவ்வொரு முக்கிய அம்சமும் பில் கேட்ஸ் மூலம் விமர்சனம் செய்யப்படும். ஒருமுறை இந்தக் கூட்டத்தில் எனது (கோயல்) குழுவில் இடம்பெற்றிருந்தவருடன் கலந்து கொண்டேன். அவர் கூட்டம் முழுக்கப் பில் கேட்ஸ் எத்தனை முறை "f**k" வார்த்தையைப் பயன்படுத்துகிறார் என்பதைக் கவனித்தார்.

 

பாத்திரம் கழுவுதல்

இரவு நேரங்களில் உணவு உண்டதும், பாத்திரங்களை அவரே கழுவிடுவார். 'மற்றவர்கள் தன்னைக் கவனித்துக்கொள்ள விரும்புவர், ஆனால் அதை நானே செய்வது தான் எனக்கு விருப்பம்', என அவர் கூறுவார்.

பத்திரிக்கையாளர், மன்னிப்பு

பேட்டியின் போது ஒருமுறை பில் கேட்ஸ் கழிப்பறையினுள் சென்று, வெளியேற மறுத்தார். பின் பத்திரிக்கையாளர் மன்னிப்பு கோரியதும் வெளியே வந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

unknown things about Microsoft co founder Bill Gates

unknown things about Microsoft co founder Bill Gates
Story first published: Tuesday, July 11, 2017, 8:43 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns