டிரம்ப்-இன் திடீர் மாற்றம்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் இந்தியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன் நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்புகள் அனைத்தையும் அமெரிக்கர்களுக்கே கொடுக்க வேண்டும் எனப் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்தது போல், ஆட்சி பிடித்த நாள் முதல் H1B விசா, கிரீன்கார்டு ஆகியவற்றை வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வந்தார்.

 

இதன் வரிசையில் H1B விசா வைத்துள்ளவர்களின் மனைவி அல்லது கணவர்களுக்கு வழங்கப்படும் வொர்க் பர்மிட் H4 EAD-ஐ உடனடியாக ரத்துச் செய்யப்படும் என டிரம்ப் அரசு அறிவித்த நிலையில், தற்போது திடீர் மன மாற்றத்தின் காரணமாக இதை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

டிரம்ப்-இன் இந்த முடிவால் இந்தியர்கள் கொண்டாட்டத்தில் திளைத்துள்ளனர்.

வல்லரசு நாடு

வல்லரசு நாடு

என்னதான் அமெரிக்கா வல்லரசு நாடாக இருந்தாலும் அமெரிக்காவில் திறமை வாய்ந்த ஊழியர்கள் (Talent Demand) எண்ணிக்கை மிகவும் மேசமான நிலையில் உள்ளது. இதைப் பிரச்சனையை அமெரிக்கா வெளிநாட்டு ஊழியர்கள் மூலம் இதுநாள் வரையில் தீர்த்து வந்தது.

ஆனால் டிரம்ப் அரசோ இதைச் சற்றும் புரிந்துகொள்ளாமல் வெளிநாட்டவர்களின் வேலைவாய்ப்பு அமெரிக்கர்களுக்குக் கொடுக்க வேண்டும் என அடம்பிடித்து வந்தது.

 17 வருட சரிவில் சீனா.. அமெரிக்கா தான் காரணமா..? 17 வருட சரிவில் சீனா.. அமெரிக்கா தான் காரணமா..?

ஒபாமா அரசு

ஒபாமா அரசு

2015ஆம் ஆண்டு ஒபாமா தலைமையிலான அரசு அமெரிக்காவில் திறன் வாய்ந்த ஊழியர்களின் பற்றாக்குறையைத் தீர்க்கவும், அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் ஒரு முக்கியமான முடிவை எடுத்தது.

ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களின் துணைக்கு அமெரிக்காவில் வேலை செய்யும் உரிமையை ஒபாமா அரசு வழங்கி மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தது.

 

 காரணம்
 

காரணம்

இதற்கு முக்கியக் காரணம் ஹெச்1பி விசா பெற்றவர்களின் கணவன் அல்லது 95 சதவீதம் பேர் அதிகளவிலான கல்வித் திறன் பெற்றுள்ளனர். இவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதன் மூலம் நாட்டில் பல முன்னேற்றங்கள் அடைய முடியும் எனத் திட்டமிட்டு உரிமை வழங்கப்பட்டது.

இதோடு வேலைக்குச் செல்லாமல் வெளிநாட்டவர்கள் வீட்டில் இருப்பதால் நாட்டின் சுமை அதிகரிக்கும் என்பதை உணர்ந்து ஒபாமா அரசு இந்த முடிவை எடுத்தது.

 

டிரம்ப் அரசு

டிரம்ப் அரசு

ஆனால் இன்று ஹெச்1பி விசா மற்றும் வேலைவாய்ப்பு உரிமை வாயிலாகவே பல லட்சம் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். இதனால் அமெரிக்க மக்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்துள்ளது என டிரம்ப் அரசு குற்றம்சாட்டுகிறது.

இதன் எதிரொலியாகவே விசா வழங்குவதில் அதிகளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

 

H4 EAD ரத்து

H4 EAD ரத்து

டிரம்ப் அரசின் கொள்கை காரணமாக 2015இல் ஒபாமா அரசு வெளிநாட்டவர்களுக்கு அறிவித்த H4 EAD ரத்துச் செய்ய 2017இல் திட்டமிடப்பட்டது.

இதனை எதிர்த்துப் பல வழக்குகள் இன்றும் நடைபெற்று வருகிறது. அப்படி ஒரு வழக்கின் விசாரணையின் போது அமெரிக்க அரசு சார்பில் இது 2020 வரையில் நடைமுறைப்படுத்த திட்டமில்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

இந்தியர்கள் கொண்டாட்டம்

இந்தியர்கள் கொண்டாட்டம்

தற்போது விதிக்கப்பட்டு வரும் ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள் ஒரு பக்கம் இருக்க ஹெச்4 விசா கட்டுப்பாடுகள் ஒவ்வொரு இந்தியர்களின் வீட்டிலும் சோகத்தை அளித்து வந்தது.

இதை நடைமுறைப்படுத்த இன்னும் 1 வருடம் ஆகும் என்ற அறிவிப்பின் மூலம் இந்தியர்கள் கொண்டாட்டத்தில் திளைத்துள்ளனர்.

 

1.2 லட்சம் விசா

1.2 லட்சம் விசா

2015 முதல் அமெரிக்க அரசு வழங்கிய 1.2 லட்சம் ஹெச்1 வொர்க் பர்மிட்-களில் 90 சதவீதம் இந்திய பெண்கள் வாங்கியுள்ளனர். இந்த விசா யாருக்கு பயன் அளித்தோ இல்லையோ இந்தியர்களுக்கும், இந்திய பெண்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்பை அமெரிக்காவில் ஏற்படுத்தியது.

இதை ரத்துச் செய்ய டிரம்ப் அரசு முடிவு செய்த போது தான் கண்ணீர் வந்தது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US Ban Work Permits for H1-B Spouses will not Happen this Year

Indian engineers working in the US, the proposed ban on the H4 EAD (employment authorisation document) is unlikely to go through this year. The proposed rule banning spouses of H-1B workers from working in the US is not likely to materialize before 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X