மோடி அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது - அமெரிக்கா அரசுத்துறை விமர்சனம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு அவர்கள் சொல்வதை போல் நடந்து கொல்வதில்லை, மெதுவாகச் செயல்படுகிறது என்று அமெரிக்க அரசுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

 
மோடி அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது - அமெரிக்கா அரசுத்துறை விமர்சனம்

மோடி அரசு செய்ய முயற்சிக்கும் பொருளாதார சீர்த்திருத்தகளை நாடாளுமன்றத்தில் செயல்படுத்துவதில் இழுபறி ஏற்படுவதால் முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்வதில் தேக்கம் ஏற்படுகிறது.

பொருட்கள் மற்றும் சேவை மசோதாக்களில் என்ன தான் நீண்ட விவாதத்திற்குப்பின் பின் ஏற்றுக்கொண்டாலும், இடம் கையகப்படுத்தும் மசோதா போன்றவற்றை நிறைவேற்ற அவர்களுக்குத் தேவையான ஆதரவு நாடாளுமன்றத்தில் இல்லாமல் தோல்வியையே தழுவியது. அது மட்டும் இல்லாமல் சில வரி சம்மதமான மசோதாக்களிலும் இழுபறியே நீடிக்கிறது.

சுமாரான ஒழுங்குமுறை சூழல், நிச்சயமற்ற வரி கொள்கைகள், உட்கட்டமைப்பு இடர்பாடுகள், உள்ளூர்மயமாக்கல் தேவைகள், சேவைக் கட்டுப்பாடுகள், மின்சாரம் பற்றாக்குறை போன்றவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கிறது.

அதுமட்டும் இல்லாமல், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாகக் காட்டியிருப்பது, பொருளாதார ஆய்வாளர்களிடம் அதிகப்படுத்தப்பட்டுக் காட்டப்பட்டு இருக்கிறதா என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது.

அவ்வாறு அதிகப்படுத்தப்பட்டுக் காட்டியிருந்தாலும், பாதுகாப்பு மற்றும் நேரடி அந்நிய முதலீடு ஆகியவற்றில் 100% அனுமத்துள்ளதை வரவேற்கிறோம்.

பாதுகாப்பு, பார்மா, விமான சேவை போன்றவற்றில் நல்ல சாதகமான முறையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மோடி அந்நிய நேரடி முதலீடு தாராளமயமாக்கல் செய்துள்ளமையால் ஆசியாவின் மூன்றாம் மிகப் பெரிய பொருளாதாரத்தை இந்தியா எட்டும் என்று பாராட்டியுள்ளது

அதேசமயம் தற்போதைய அரசு ஒரு தூய்மையான, கூடுதல் சந்தை சார்ந்த, மேலும் போட்டிகரமான இந்தியாவை உருவாக்க அதன் செயல்பாடுகளில் ஓர் அளவு முன்னேற்றம் கண்டுள்ளது.

2010 மற்றும் 2011 கால கட்டங்களில் மங்கிய நிலையில் இருந்து இந்தியாவின் முதலீடுகள் கட்டுமானம் மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் ஏற்பட்ட சில கொள்கைகளைச் சீரற்ற நிலை 2014 தேர்தலுக்குப் பிறகு நல்ல மாற்றத்தைக் கண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US criticises Narendera Modi on Reforms and GDP data

US criticises Narendera Modi on Reforms and GDP data
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X