ட்ரம்புக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. வல்லரசுக்கே இப்படி ஒரு நிலையா.. பரிதாப நிலையில் அமெரிக்கா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்கா, தற்போது கொரோனாவினை விட மோசமான பிரச்சனையை சந்தித்து வருகிறது எனலாம். அது வேலையின்மை தான்.

 

அமெரிக்காவில் ஒரு புறம் கொரோனாவின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், மறுபுறம் வேலையின்மை அதனை விட மோசமான பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.

அங்கு கிடுகிடுவென உயர்ந்து வரும் கொரோனா தாக்கத்தினை கட்டுப்படுத்த லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வரலாறு காணாத அளவில் மக்கள் தங்களது வேலையினை இழந்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இதற்கு உதாரணம் தான் அமெரிக்காவில் வேலையின்மை குறித்தான பலுனுக்காக மக்கள் விண்ணபித்து வருவது பல லட்சங்களை எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி வந்த நிலையில், அமெரிக்காவில் அதன் ருத்ரதாண்டவம் எடுத்து ஆடி வருகிறது. கிட்டதட்ட 9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கையும், 50 ஆயிரத்தினை தாண்டியுள்ளது.

ஊக்குவிப்பு நடவடிக்கை

ஊக்குவிப்பு நடவடிக்கை

இப்படி வல்லரசு நாட்டுக்கே தண்ணி காட்டி வரும் கொரோனா வைரஸினால், ஏற்கனவே பல பிரச்சனைகளை சந்தித்து வரும் அமெரிக்காவுக்கு, இன்னும் பிரச்சனைகள் இந்த லாக்டவுனால் அதிகரித்து வருகிறது. சொல்லப்போனால் மக்கள் போராட்டங்களில் குதித்து வருகின்றனர். இந்த நிலையில் நலிந்து வரும் பொருளாதாரத்தினை மீட்கவும், மக்களை காப்பாற்றவும் மீண்டும் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

லாக்டவுன் நீட்டிக்க வாய்ப்பு
 

லாக்டவுன் நீட்டிக்க வாய்ப்பு

அந்த நாட்டில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்லும் இந்த நிலையில், மே 1 வரை சமூக விலகல் உள்ளிட்ட தணிப்பு நடவடிக்கைகள் அமலில் உள்ளன. இந்த நிலையில் அதிகரித்து வரும் பலி எண்ணிக்கையும், குறையாது கூடி வரும் கொரோனா வழக்குகளும் மேலும் மே 1 பிறகும், சமூக விலகல் நடவடிக்கையை நீட்டிக்க வாய்ப்புகள் உள்ளது.

ஊக்குவிப்பு நடவடிக்கை

ஊக்குவிப்பு நடவடிக்கை

என்ன இதில் ஒரு நல்ல விஷயம் எனில் பாதிப்பு அதிகரித்து வரும் அதே நேரத்தில், பொருளாதாரம் பெரும் அளவில் சரியாமல் இருக்க அடுத்தடுதத நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் அதிபர் ட்ரம்ப். இந்த நிலையில் அமெரிக்கா 1930க்கு பிறகு எதிர்கொள்ளும் மிகப்பெரிய மந்த நிலை இது தான் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்த எதிர்மறையான வளர்ச்சியினையே கணித்துள்ளனர்.

யாருக்கெல்லாம் நிவாரணம்

யாருக்கெல்லாம் நிவாரணம்

இதற்கிடையில் கிட்டதட்ட 500 பில்லியன் டாலர்களை கொரோனா வைரஸ் செலவினங்களுக்காக காங்கிரஸ் வழங்கியுள்ளது. இது தொழிலாளர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் புதிய நிவாரணத்தினை வழங்கியுள்ளது. இந்த கொரோனா 50 ஆயிரத்திற்கும் மேற்கொண்டோரை பலி கொண்டுள்ளதோடு, 6ல் ஒருவரின் வேலையையும் பறித்துக் கொண்டுள்ளது.

உதவி வேண்டி கோரிக்கை

உதவி வேண்டி கோரிக்கை

இந்த நிலையில் சிறு குறு வணிகங்களுக்கு ஆதரவினை வழங்கும் விதமாக ஊதியம் வாடகை மற்றும் பிற செலவுகளுடன் உதவ ஒரு நிதியினை நிரப்ப ட்ரம்ப் நிர்வாகம் 250 பில்லியன் டாலரினை நிதியினை ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இன்னும் பொருளாதாரம் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தடைவிதித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கர்களை காப்பாற்ற அந்த வெளிநாட்டினர் குடியேற தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Us faces biggest job crisis since great depression, trump faces many problems

America faces biggest job crisis since Depression, Trump may reopen economic stimulus plans soon
Story first published: Friday, April 24, 2020, 11:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X