ரூ.86 லட்சத்துக்கு ஏலம் போன ஒபாமாவின் Basket ball jersey.. அப்படி என்ன ஸ்பெஷல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு Basket ball jerseyயின் விலை கிட்டதட்ட 86 லட்சம் ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை தான். முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஓபாமாவுக்கு சொந்தமான Basket ball jersey எண்றும் கூறப்படுகிறது.

 

அவரை நமக்கெல்லாம் ஒரு முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதியாக தெரியும், ஆனால் இவர் கூடைப்பந்து விளையாட்டிலும் மிக ஆர்வமுள்ளவர், வீரர் என்றால் நம்ப முடிகிறதா?

 ரூ.86 லட்சத்துக்கு ஏலம் போன ஒபாமாவின் Basket ball jersey.. அப்படி என்ன ஸ்பெஷல்!

தனது பள்ளிக் காலத்திலேயே, கூடைப்பந்து விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய இவர், அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கூட வெள்ளை மாளிகையில், தனது ஓய்வு நேரத்தில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் பந்து விளையாடுவது வழக்கமாக கொண்டிருந்தவர். மேலும் வெள்ளை மாளிகையில் அவர் இருந்த காலத்தில் ஜனாதிபதி ஊழியர்கள், பிரபலங்கள் அல்லது பிற விருந்தினர்களுடன் விளையாடியதாகக் கூறப்படுகிறது. அந்த அளவுக்கு இந்த விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர்.

அப்படிப்பட்ட அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஓபாமா, ஒரு முறை வெள்ளை மாளிகையில் கூடைப்பந்து விளையாடும் போது சகவீரரின் கைபட்டு, அடிப்பட்டதில் அவருக்கு 12 தையல்கள் கூட போடபட்டதாக, வெள்ளை மாளிகை வட்டாரத்தில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்த அளவுக்கு கூடைப்பந்து விளையாட்டை நேசிக்கும் ஒபாமா, அவரின் சொந்த ஊரில் இருக்கும் போது அவரை தினசரி காலையில் கூடைப்பந்து மைதானத்தில் பார்க்கலாம் என்றும் செய்திகள் பல வெளியாகியுள்ளன.

இப்படிப்பட்ட ஒரு விளையாட்டு ஆர்வலரும் மற்றும் முன்னாள் அதிபருமான ஒபாமாவின் Basket ball jersey 1,20,000 டாலருக்கு (இந்திய ரூபாயில் கிட்டதட்ட 86 லட்சம் ரூபாய் ) Dallas auction house என்ற நிறுவனம் ஏலத்தில் விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த 23 என்ற எண் கொண்ட இந்த ஜெர்சி, 18 வயதான போது ஒபாமாவுக்கு அணிந்திருந்ததாக நம்பப்படுகிறது. அவர் ஹவாயில் உள்ள Punahou high school பள்ளியில் படிக்கும் போது உபயோகப்படுத்தியது என்றும், ஒபாமாவிற்கு மூன்று ஆண்டுகளுக்கு பின்பு படித்த பீட்டர் நோபலிடம் இருந்து இதை பெற்றதாகவும், அந்த ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

மேலும் இந்த பந்து ஏலத்தில் விற்கப்படுவதற்கு முன்பே 1,00,000 டாலர் மதிப்புடையது என்றும் கூறப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் பராக் உசைன் ஒபாமா (Barack Hussein Obama), அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியுமான ஓபாமா, கொலம்பியா பல்கலைக்கழகத்திலிருந்தும் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியிலிருந்தும் பட்டங்களை பெற்றார்.

ஒபாமா தனது அரசியல் உலகிற்கு வருவதற்கு முன்பு சிக்காகோவின் தெற்கு பகுதியில் சமுதாய ஒருங்கிணைப்பாளராகவும் (community organizer) பொதுச் சட்ட வழக்கறிஞராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US former president Barack Obama basketball jersey sells for Rs.86 lakhs

US former president Barack Obama basketball jersey sells for Rs.86 lakhs
Story first published: Tuesday, August 20, 2019, 16:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X