ஆட்டம் காணும் அமெரிக்கா.. வேலையின்மை சலுகை கோரி குவியும் விண்ணப்பங்கள்.. வல்லரசுக்கே இப்படியா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாங்கள் உலகிலேயே மிகப்பெரிய வல்லரசு என்று தங்களது காலரை தூக்கிக் கொண்டு இருந்த அமெரிக்கா தான், இன்று உலகிலேயே கொரோனா கலவரத்திலும் முதலாவதாக திகழ்கிறது.

இன்றைய தேதியில் அங்கு 2,45,442 பேருக்கு மேல் கொரோனாவினால் தாக்கம் அடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 6,098 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் அங்கு கொரோனாவில் கோராப்பிடியில் சிக்கியுள்ளது அமெரிக்க மக்கள் மட்டும் அல்ல, அந்த நாட்டு பொருளாதாரமும் தான்.

அமெரிக்கா லாக்டவுன்

அமெரிக்கா லாக்டவுன்

அமெரிக்காவில் கொரோனாவினால் அந்த நாட்டு தொழில்துறை, நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், என அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் அங்கு பணிபுரியும் ஏராளமானோர் வேலையிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அமெரிக்காவில் வேலையின்மை நலனுக்காக விண்ணப்பிக்கும் எண்ணிக்கையும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.

வேலையின்மை அதிகரிக்கும்

வேலையின்மை அதிகரிக்கும்

மேலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அங்கு இன்னும் வேலையின்மை எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கொரோனாவின் தாக்கத்திலிருந்து அமெரிக்கா மீண்டு வந்தாலும், அதன் பொருளாதாரம் மீண்டு வர சிறிது காலம் ஆகும். ஆக அங்கு பணி நீக்கங்கள் தலை தூக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

அதிகரிக்கும் வேலையின்மை

அதிகரிக்கும் வேலையின்மை

மேற்கூறியவாறு பணி நீக்கமானது தலைதூக்கும் போது அமெரிக்காவின் வேலையின்மை விகிதம் மே மாதத்திற்குள் 13%-ஐ எட்டக்கூடும் ஆய்வாளார்கள் என்று கூறுகின்றனர். இது கடந்த 2008- 2009ல் இருந்த நெருக்கடியின் போது இருந்த அதிக வேலையின்மை விகிதம் 10% ஆகும். கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி, வேலையின்மை விகிதம் 50 ஆண்டுகளில் குறைந்த 3.5% ஆக இருந்தது.
ஆனால் இனி வரும் மாதங்களில் அது எதிர்மறையாகக் கூடும்.அதிலும் வரும் ஏப்ரல் - ஜூன் காலாண்டில், பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி காணலாம் என சில பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். இது கிட்டதட்ட 30% கூட இருக்கலாம் என்றும் கணித்துள்ளனர்.

தகுதியற்றவர்கள்

தகுதியற்றவர்கள்

ஏற்கனவே பணி நீக்கம் காரணமாக நிறுவனத்தின் ஊதியத்தில் பெறாத தொழிலாளர்கள் - கிக் தொழிலாளர்கள், இலவச லான்சர்கள், சுயதொழில் செய்பவர்கள் - தற்போது வேலையின்மை நலன்களுக்கு தகுதியற்றவர்கள் என கூறப்படுகிறது. ஆக அவற்றையும் ஒப்பிடும்போது வேலையின்மை இன்னும் பல மடங்கு அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மாநிலம் வாரியாக அதிகரிப்பு

மாநிலம் வாரியாக அதிகரிப்பு

அமெரிக்காவின் 50 மாநிலங்களில் இருந்தும் வேலையின்மை நன்மைகளுக்கான விண்ணப்பங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் வியாழக்கிழமையன்று வெளியான அறிக்கையில் கடந்த வாரத்திற்கான வேலையின்மை விகிதம் 6.95 மில்லியனாக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது கிட்டதட்ட இரண்டு வாராங்களில் 9.95 மில்லியனாக அதிகரித்துள்ளது.

 அனைத்து பதிவு வலைதளங்களும் ஜாம்

அனைத்து பதிவு வலைதளங்களும் ஜாம்

சமீபத்திய வாரங்களில் வேலைகளை இழந்த பலர், வேலையின்மை உதவிக்கு பதிவு செய்ய முடியவில்லை, ஏனெனில் மாநில வலைத்தளங்களும் தொலைபேசி அமைப்புகளும் விண்ணப்பதாரர்களின் நொறுக்குதலால் ஜாம்மாகி உறைந்து போயுள்ளன. அந்தளவுக்கு மக்களின் வேலையின்மை விகிதமானது விஸ்வரூபம் எடுத்து ஆடி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Us peoples filing for initial unemployment benefits to 6.65 million in its new history

America faces now faces the sharpest rise in unemployment in its history.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X