டிரம்பின் அதிரடி முடிவு.. யாருக்கு என்ன பிரச்சனை.. இந்தியர்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்கலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இன்று ஹெச் 1பி விசா, எல் -1 விசா குறித்தான விதிமுறைகளில், இன்று கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இது கொரோனாவினால் முடங்கி போயுள்ள அமெரிக்கா பொருளாதாரத்தினையும், அமெரிக்கா மக்களுக்கு மக்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கும் இன்று அதிரடியான முடிவுகளை எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக தீவிரமாக இது குறித்து ஆலோசித்து வரும் டொனால்டு டிரம்ப், குறிப்பாக அமெரிக்காவில் வெளி நாட்டவர்கள் குடியேறுவதை தற்காலிகமாக தடை செய்யவும் திட்டமிட்டு வருவது அறிந்த ஒரு விஷயமே.

பலருக்கு மகிழ்ச்சி

பலருக்கு மகிழ்ச்சி

ஆக இன்றைய அறிக்கையில் இந்த குடியேற்ற தடை பற்றி அறிவிப்புகளும் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்த கட்டுப்பாடுகள் நிறைய பேரை மகிழ்ச்சியடைய செய்யும் என்றும், இது மிகக் குறைவானர்களுக்கு இது மிக மோசமான செய்தியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

வேலையின்மை அதிகரிப்பு

வேலையின்மை அதிகரிப்பு

அவர்களுக்கு இது மோசமான செய்தி தான். அவர்களுக்கு இது ஒரு இறுக்கமான சூழல் தான். நாங்கள் கூட இறுக்கமாக செல்லக்கூடும். கொரோனா பெருந் தொற்று நோயின் காரணமாக பல வணிகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், அதனை தொடர்ந்து அமெரிக்காவில் வேலையின்மை விகிதமானது வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது.

இந்தியர்களுக்கு பாதிப்பு
 

இந்தியர்களுக்கு பாதிப்பு

ஆக நாட்டில் வேலையின்மை விகிதங்களை கையாளும் விதமாக, டிரம்ப் தலைமையிலான அரசு இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆக டிரம்ப் அரசின் இந்த அதிரடி நடவடிக்கையானது, ஆயிரக்கணக்கான ஊழியர்களை பாதிக்கும். அதிலும் அக்டோபர் 1 முதல் அமெரிக்க செல்ல திட்டமிட்டுருந்த பல ஆயிரம் இந்தியர்களை இது பாதிக்கும்.

இந்தியர்கள் 70% பேர்

இந்தியர்கள் 70% பேர்

வருடத்திற்கு சுமார் 85,000 விசாக்களை வழங்கப்பட்டு வரும் நிலையில், அவற்றில் 70 சதவீதம் இந்தியர்களுக்கானது என்பது கவனிக்கதக்கது. ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த நடவடிக்கையானது பிரச்சனையை ஏற்படுத்தாது என்றும் கூறப்படும் நிலையில், அமெரிக்கா சென்று ஐடி நிறுவனங்களில் பணி புரிய நினைக்கும், இந்திய ஐடி ஊழியர்களுக்கு நிச்சயம் இது பெருத்த அடியாகத் தான் இருக்ககும்.

அமெரிக்க நிறுவனங்களுக்கும் பாதிப்பு

அமெரிக்க நிறுவனங்களுக்கும் பாதிப்பு

இந்த அதிரடி நடவடிக்கையானது இந்த ஆண்டு இறுதுவரை நடைமுறையில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒரு வகையில் இந்த நடவடிக்கையானது இந்திய ஊழியர்களை பாதிக்கும் என்றாலும், அமெரிக்கா ஐடி நிறுவனங்களுக்கும், இது பாதிப்பினை ஏற்படுத்தும். இதன் காரணமாக விரைவில் இந்த நடவடிக்கையில் தளர்வுகள் வரலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

வேலையின்மை விகிதம் அதிகரிப்பு

வேலையின்மை விகிதம் அதிகரிப்பு

அமெரிக்கா தொழிலாளர் புள்ளிவிவர பணியகத்தின் சமீபத்திய தகவல்கள் படி, கணினி தொடர்பான தொழில்களில் வேலையின்மை விகிதம் 2020 ஜனவரியில் 3 சதவீதத்திலிருந்து, மே மாதத்தில் 2.5 ஆக குறைந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் மற்ற தொழில்களில் வேலையின்மை விகிதம் 4.1 சதவீதம் முதல் 13.5 சதவீதம் வரை வளர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US president likely to sign to restrict H -1B visa today

America president Donald trump likely to sign to restrict H -1B visa today
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X