கால் சென்டர் நிறுவனங்களுக்கு நெருக்கடி.. அமெரிக்காவில் புதிய மசோதா தாக்கல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெளிநாட்டவர்களுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து பிடுங்கி வரும் அமெரிக்க அரசு தற்போது கூடுதலாகக் கால் சென்டர் வேலைவாய்ப்புகளுக்கும் நெருக்கடி அளிக்கத் துவங்கியுள்ளது.

ஏற்கனவே ஹெச்1பி விசா, குறைந்தபட்ச சம்பளத்தில் செய்துள்ள உயர்வு ஆகிய இந்திய ஐடித்துறையை மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா கூடுதல் அதிர்ச்சியை அளித்துள்ளது.

புதிய மசோதா

புதிய மசோதா

ஒகையோ (Ohio) மாகாணத்தைச் சேர்ந்த செனட்டர் ஷெர்ராடு பிரவுன் தாக்கல் செய்யதுள்ள மசோதாவில், கால் சென்டர் வேலைவாய்ப்புகளை அவுட்சோர்ஸ் செய்யும் நிறுவனங்களின் பட்டியலை சேகரித்து, அந்த நிறுவனங்கள் உள்நாட்டிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பெடரல் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும்.

இதன் மூலம் பெருமளவிலான வேலைவாய்ப்புகள் நாட்டை விட்டு வெளியேறுவது தடுக்க முடியும்.

 

இடத்தைத் தெரிவிக்க வேண்டும்

இடத்தைத் தெரிவிக்க வேண்டும்

வாடிக்கையாளர் சேவையில் அதிகம் இருப்பது கால் சென்டர் வேலைவாய்ப்புகள்.

இந்த மசோதாவில் வாடிக்கையாளர் கால் சென்டர் அதிகாரிகளைத் தொடர்புகொள்ளும் போது அதிகாரியின் தான் இருக்கும் உண்மையான இடத்தைத் தெரிவிக்க வேண்டும்.

அமெரிக்க நிறுவனத்திற்கு இந்திய நிறுவனம் வாடிக்கையாளர் சேவை அளித்தால், வாடிக்கையாளர் அதிகாரியின் இருப்பிடத்தைக் கேட்கும் போது அவர் கண்டிப்பாக இந்தியா என்ற சொல்ல வேண்டும். ஆனால் இப்போது கால் சென்டர் நிறுவனங்கள் அமெரிக்கா என்றே சொல்லி வருகிறது.

 

 அழைப்பு மாற்றம்..

அழைப்பு மாற்றம்..

மேலும் வாடிக்கையாளர் அமெரிக்கச் சேவை தளத்திற்கு அழைப்பை மாற்ற சொன்னால் எவ்விதமான மறுப்புமின்றிக் கால்களை மாற்ற வேண்டும் எனவும் இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒகையோ

ஒகையோ

இப்பகுதியில் இருந்த பல நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறி தனது வேலைவாய்ப்புகளை ரெனிசோ, மெக்சிகோ அல்லது வூஹான் மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்துவிட்டு அமெரிக்க வர்த்தகம் மற்றும் வரி சலுகையை மட்டும் அனுபவித்து வருகிறது என ஷெர்ராடு பிரவுன் தெரிவித்துள்ளார்.

கால் சென்டர் வேலைவாய்ப்புகள்

கால் சென்டர் வேலைவாய்ப்புகள்

பிற துறைகளைக் காட்டிலும் கால் சென்டர் வர்த்தகத்தில் வேலைவாய்ப்புகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் செய்வது மிகவும் எளிதான காரியமாக உள்ளது. இதனால் அமெரிக்காவின் பல பகுதிகளில் ஏராளமாக இருந்த கால் சென்டர்கள் தற்போது நிறுவனத்தை வெறும் நிர்வாக அலுவலகமாக வைத்துக்கொண்டு வேலைவாய்ப்புகளை இந்தியா மற்றும் மெக்டிகோ நாடுகளுக்கு அளித்து வருகிறது.

முக்கிய இடம்

முக்கிய இடம்

உலகளவில் இருக்கும் கால் சென்டர் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை அவுட்சோர்சிங் செய்ய ஏதுவாக இருக்கும் நாடுகள் என்றால் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை தான்.

இந்தியா

இந்தியா

கடந்த சில வருடமாக இந்தியாவில் இருந்த பல லட்ச கால் சென்டர் வேலைவாய்ப்புகள் தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சென்று வருகிறது. இதனால் இந்தியாவில் தற்போது கால் சென்டர் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அதிகளவில் குறைந்து வருகிறது.

படையெடுப்பு

படையெடுப்பு

இந்த நிலையை முன்கூட்டியே உணர்ந்த இந்திய நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், டெக் மஹிந்திரா, விப்ரோ, ஹெச்சிஎல் ஆகியவை பிபிஓ சேவைக்காகழே பிரத்தியேகமான முதலீட்டு மற்றும் ஊழியர்களுடன் பிலிப்பைன்ஸ் நாட்டில் வர்த்தகம் செய்து வருகிறது.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

<strong>இந்திய ஐடி ஊழியர்களுக்கு நெருக்கடி.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர்..!</strong>இந்திய ஐடி ஊழியர்களுக்கு நெருக்கடி.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US senator introduces bill aimed at protecting call centre jobs

US senator introduces bill aimed at protecting call centre jobs
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X