சீனாவுக்கு பொளேர் பதிலடி கொடுத்த இந்தியா! கைகோர்க்கும் அமெரிக்கா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, அமெரிக்கா என்கிற பெயரைச் சொன்னால் எப்படி எல்லா நாடுகளும் ஒரு மாதிரியாக முகம் சுளிப்பார்களோ, அதே போல இப்போது சீனாவின் பெயரைச் சொன்னால் முகம் சுளிக்கிறார்கள்.

 

சீனா, தன் கடுமையான நடவடிக்கைகள் மூலமாக எல்லா விஷயங்களிலும், எல்லா நாடுகளோடும் சண்டைக்குப் போவது தான் அதற்கு முக்கிய காரணம்.

அமெரிக்கா உடன் மட்டுமே மோதிக் கொண்டிருந்த சீனா, இப்போது இந்தியாவையும் ஒரண்டைக்கு இழுத்துக் கொண்டு இருக்கிறது.

ராணுவ வீரர்கள் வீர மரணம்

ராணுவ வீரர்கள் வீர மரணம்

கடந்த மாதம், இந்திய எல்லைகளைப் பாதுகாத்துக் கொண்டிருந்த ராணுவ வீரர்களில் 20 பேர், சீனாவின் தாக்குதலால் வீர மரணம் அடைந்தார்கள். அப்போதில் இருந்தே சீனா மீதான வெறுப்பு இந்தியா முழுக்க ஒரு அலை போல அடிக்கத் தொடங்கிவிட்டது. சீனாவும் எந்த விதமான சமரசத்துக்கும் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் மேலும் குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தது.

இந்தியாவின் மரண அடி

இந்தியாவின் மரண அடி

பொறுத்துப் பார்த்த இந்தியா, சீனாவின் டிக் டாக், ஹலோ, வீ சாட், யூ சி பிரவுசர் போன்ற முக்கியமான 59 அப்ளிகேஷன்களுக்கு, தடை விதித்து சீனாவுக்கு செம அடி கொடுத்தது. சீன அப்ளிகேஷன்கள், முறையான அனுமதி இன்றி, தரவுகளை (Data) சீனாவுக்கு பரிமாற்றம் செய்வதாகவும் சுட்டிக் காட்டியது.

அமெரிக்கா பாராட்டு
 

அமெரிக்கா பாராட்டு

இந்த திடீர் நடவடிக்கையை சீனாவே எதிர்பார்த்திருக்காது போல் இருக்கிறது. 59 அப்ளிகேஷன்களுக்கு தடை விதித்த பின் சீனாவிடம் இருந்து பதிலே வரவில்லை. ஆனால் அமெரிக்கா, இந்த சீன அப்ளிகேஷன் தடையை வரவேற்று இருக்கிறது. அதோடு, சீன அப்ளிகேஷன்கள் மீது இந்தியா விதித்து இருக்கும் தடையால், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு வலு பெறும் எனவும் சொல்லி இருக்கிறது அமெரிக்கா.

அமெரிக்க நடவடிக்கைகள்

அமெரிக்க நடவடிக்கைகள்

அமெரிக்காவும், இந்தியாவின் பாதையில், சீன கம்பெனிகள் மீது சில பெரிய நடவடிக்கைகளை எடுத்து இருப்பதாக ஜி நியூஸ் வலைதளத்தில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. சீன அப்ளிகேஷன்களுக்கு தடை விதிப்பதோடு இந்தியா நின்றுவிடவில்லை. மேலும் சில நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார்களாம். என்ன நடவடிக்கைகள்..?

நடவடிக்கை 1

நடவடிக்கை 1

இந்தியா, இனி எந்த சீன நிறுவனங்களுக்கும், இந்தியாவின் ஹைவே (நெடுஞ்சாலை) ப்ராஜெக்ட்களைக் கொடுக்கப் போவதில்லை என முடிவு செய்து இருக்கிறார்களாம். நேரடியாக வந்தால் தானே ப்ராஜெக்ட் கிடைக்காது என, இந்திய கம்பெனி உடன் கூட்டு சேர்ந்து கொண்டு வந்தால் கூட ப்ராஜெக்ட்கள் வழங்கப்படாதாம்.

நடவடிக்கை 1 தொடர்ச்சி

நடவடிக்கை 1 தொடர்ச்சி

இந்தியாவில் சீன கம்பெனிகள், 2020-ம் ஆண்டு முடிவுக்குள் சுமாராக 1.5 லட்சம் கோடி ரூபாயை இன்ஃப்ராஸ்ரக்சர் துறையில் முதலீடு செய்ய இருந்தது. பல சீன கம்பெனிகள், இந்தியாவை ஒரு நல்ல சந்தையாகப் பார்த்தார்கள். இப்போது அதற்கு எல்லாம் பூட்டு போட்டு இருக்கிறது மத்திய அரசு. இந்தியாவின் இன்ஃப்ராஸ்ரக்சர் திட்டங்கள், சீனாவுக்கு கொடுக்கக் கூடாது என்பதை உறுதி செய்து கொண்டு இருக்கிறது இந்திய அரசு.

நடவடிக்கை 2

நடவடிக்கை 2

அரசு டெலிகாம் நிறுவனமான பி எஸ் என் எல், சீனாவில் இருந்து எந்த வித டெலிகாம் தொடர்பான சாதனங்களை, சீனாவிடம் இருந்தோ, சீன கம்பெனிகளிடம் இருந்தோ வாங்க வேண்டும் என மத்திய அரசு சொன்னது குறிப்பிடத்தக்கது. அதே போல, தனியார் டெலிகாம் நிறுவனங்களிடமும், சீனாவை அதிகம் சார்ந்து இருக்க வேண்டாம் என அரசு வேண்டு கோள் வைத்து இருப்பதும் குறிப்பிடத்தகக்து.

பழைய கதை

பழைய கதை

இந்தியா சீனா கல்வான் பள்ளத்தாக்கு பிரச்சனை வருவதற்கு முன்பே, இந்தியா உடன் எல்லைப் பகுதிகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் இருந்து, இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் கம்பெனிகள் அல்லது தனி நபர்கள், இந்திய அரசாங்கத்திடம் அனுமதி பெற்ற பின்னர் தான் முதலீடு செய்ய முடியும் எனச் சொன்னதும் நினைவு கூறத்தக்கது.

சீனாவின் எண்ணம்

சீனாவின் எண்ணம்

சீனா தான் உலகத்தின் டெக்னாலஜி சூப்பர் பவர் ஆகப் போகிறது என்கிற எண்ணம் இருந்தது. ஆனால் இப்போது, இந்தியா தடை விதித்த 59 சீன அப்ளிகேஷன் மீதான தடையால், சீனாவின் கனவில் ஒரு லாரி மண்ணைக் கொட்டி இருக்கிறது இந்தியா. இனியாவது சீனா, மற்ற நாடுகளோடு நல்ல முறையில் நட்பு பாராட்டினால் சரி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US support india ban on chinese apps and other measures

America support the India's 59 Chinese application ban. Even america followed India's steps and taken some major actions against some Chinese companies.
Story first published: Thursday, July 2, 2020, 11:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X