டிராக்சைட்-ஐ பிடித்துக்கொடுத்தால் 10 மில்லியன் டாலர் பரிசு.. அமெரிக்கா அறிவிப்பால் பரபரப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க அரசு வியாழக்கிழமை டிராக்சைட் என்னும் டைபர் கிரைம் அமைப்பை கண்டுபிடித்துக் கொடுத்தாலோ, அல்லது அவர்கள் இருக்கும் இடம் குறித்துத் தகவல்களைக் கொடுத்தாலும் 10 மில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பரிசாகக் கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் ஃஎப்பிஐ வெளியிட்டுள்ள தரவுகள் படி இந்த டிராக்சைட் டைபர் கிரைம் அமைப்பு ரஷ்யாவில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இப்படி டார்க்சைட் அமைப்பு என்ன தவறு செய்துவிட்டது எதற்காக இவர்களின் தலைக்கு 10 மில்லியன் டாலர் அளவிலான தொகை பரிசாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

 Upstox தளத்தில் சைபர் அட்டாக்.. 25 லட்ச வாடிக்கையாளர்கள் தகவல் திருட்டு..! Upstox தளத்தில் சைபர் அட்டாக்.. 25 லட்ச வாடிக்கையாளர்கள் தகவல் திருட்டு..!

 சைபர் அட்டக்

சைபர் அட்டக்

உலகம் முழுவதும் இணையத்தின் பயன்பாடு எந்த அளவிற்கு அதிகரித்துள்ளதோ அந்த அளவிற்கு இணையத்தில் சைபர் அட்டாக் அதிகரித்துள்ளது. சைபர் அட்டக் மூலம் தற்போது பல நிறுவனங்களில் இருக்கும் தரவுகள் திருடப்பட்டுக் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

 கலோனியல் பைன்லைன்

கலோனியல் பைன்லைன்

இந்த வரிசையில் அமெரிக்காவில் மே மாதம் நடந்த கலோனியல் பைன்லைனில் நடந்த சைபர் அட்டாக் மூலம் பல நாட்கள் எரிவாயு தடை செய்யப்பட்டது. இதன் அமெரிக்காவில் எரிவாயு விலை அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் எரிவாயு தட்டுப்பாடும் அதிகரித்தது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி. இந்ச மாபெரும் சைபர் அட்டாக் செய்தது டார்க்சைட் அமைப்பு.

 டார்க்சைட் அமைப்பு

டார்க்சைட் அமைப்பு

டார்க்சைட் அமைப்பு மற்றும் அதன் முக்கிய அதிகாரிகள் குறித்துத் தகவல் கொடுப்பவருக்கு 10 மில்லியன் டாலரும், டார்க்சைட் ரேன்சம்வேரில் தொடர்புடைய யாரேனும் குறித்துத் தகவல் கொடுப்பவருக்கு 5 மில்லியன் டாலர் தொகை அளிக்கப்படுவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

பிட்காயின்

பிட்காயின்

கலோனியல் பைன்லைன் சைபர் அட்டாக்-ல் இருந்து மீட்டு எடுக்க அமெரிக்க அரசு டார்க்சைட் அமைப்புக்கு 5 மில்லியன் டாலர் தொகையைப் பிட்காயின் வாயிலாகக் கொடுத்தது. இந்தப் பிட்காயினைப் பேர் டிரேசிங் மூலம் 2.3 மில்லியன் டாலரை மீட்டு எடுத்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவிற்குத் தற்போது சைபர் அட்டாக்-ல் சிக்கியது மட்டும் அல்லாமல் இந்தப் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் நஷ்ட ஈடு தொகை கொடுத்து Access-ஐ திரும்பப் பெற்று உள்ளது. இது டெக்னாலஜியில் புலி எனக் கருத்தும் அமெரிக்காவுக்குப் பெரும் தோல்வியாக இருப்பது மட்டும் அல்லாமல் டார்க்சைட் அமைப்பு மற்றும் அதைச் சார்ந்தவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது தான் பெரும் கரும்புள்ளியாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

USA State Govt announced $10 million reward for Russian based DarkSide cybercrime group

USA State Govt announced $10 million reward for Russian based DarkSide cybercrime group
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X