யாரது யாரது அங்கே.. இந்தியா ஆஸ்திரேலியா மேட்ச் பார்க்க வந்த மல்லையா .. கடுப்பான எஸ்பிஐ!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன் : இந்திய வங்கிகளிடம் இருந்து ரூ.9,000 கோடி கடன் பெற்று தப்பிச்சென்ற விஜய் மல்லையா, தற்போது லண்டனில் வசித்து வருகிறார். எப்படா வாய்ப்பு கிடைக்கும் இந்தியாவுக்கு கூட்டி வரலாம் என்று காத்திருக்கும் அரசு ஒரு புறம்.

 

என்னவேணா நடக்கட்டும் என கூறி லண்டனில் நடந்து கொண்டிருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை கண்டு மகிழ வந்திருக்கிறாராம்.

யாரது யாரது அங்கே.. இந்தியா ஆஸ்திரேலியா மேட்ச் பார்க்க வந்த மல்லையா .. கடுப்பான எஸ்பிஐ!

லண்டனில் வாழ்ந்து வரும் வங்கிப் புகழ் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. எனினும் விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை செயலாளர் அனுமதி வழங்கினார்.

எனினும் இதனை எதிர்த்து விஜய் மல்லையா மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தான் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும், உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

விஜய் மல்லையா இந்தப்போட்டியை காண்பதற்கு வந்திருக்கிறார். பத்திரிக்கையாலர்கள் அவரை சூழ, நான் இங்கு கிரிக்கெட் பார்க்கவே வந்தேன் வேகாமாக கூறிவிட்டு மைதானத்துக்குள் வேகமாக எஸ்கேப் ஆகி இருக்கிறார் மனுசன்.

விஜய் மல்லையாவுக்கு கடன் கொடுத்த வங்கிகள் ஒரு புறம் அலறி கொண்டிருக்க, இந்தியாவை விட்டு லண்டனுக்கு ஓடி விட்டதால் சென்றதால் எப்ப இவரை இந்தியா கொண்டு வருவோம் என துடிக்கும் அரசு ஒரு புறம்.

ஆனால் இவர்கள் எல்லோருக்கும் அல்வா கொடுத்துவிட்டு மனுசன் ஜாலியா கிரிகெட் மேட்ச் பார்க்க போயிருக்கிறார். ஆமாப்பு.. இதில் கடுப்பு என்னன்ன? தன் மகன் கூட செல்பி எடுத்து டிவிட்டரில் போட்டிருக்கிறாராம்.

ஏற்கனவே பெற்ற கடனுக்கு மேல், விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக டிவிட்டரில் கருத்து தெரிவித்து வந்தார் மல்லையா.

 

தான் கடன்பெற்ற வங்கிகளுக்கு வட்டியுடன் ரூ. 9 ஆயிரம் கோடி தரவேண்டியுள்ள நிலையில், தன்னுடைய ரூ. 13 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது நியாயமா எனவும் விஜய் மல்லையா கேள்வி எழுப்பி வந்தார்.

இந்த நிலையில் லண்டனிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்தின் உயர் நீதிமன்றம், பிரிட்டனின் மதுபான நிறுவனமான டியாகோவுக்கு (Diageo) செலுத்த வேண்டிய 135 மில்லியன் டாலர்களையும், அதோடு சட்ட ரீதியான செலவுகள் மற்றும் வட்டியுடன் அசலும் சேர்த்து மொத்த தொகையாக $175 மில்லியன் டாலர்களை அடுத்த 28 நாட்களுக்குள் செலுத்த உத்தரவிட்டிருந்தது லண்டன் உயர்நீதி மன்றம். ஆனால் இதற்கு பின் இது குறித்து எந்த அறிவிப்பும் இன்பும் வெளியிடப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது லண்டனிலும் பிரச்சனை எழுந்திருக்கிறது, இனி எந்த நாட்டிற்கு செல்வார் என்றுதான் தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vijay Mallya spotted at India vs Australia World Cup game

indian businessman Vijay Mallya was spotted outside the Oval in London, where India is playing against Australia in its second World Cup 2019 match.
Story first published: Sunday, June 9, 2019, 20:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X