அமெரிக்காவில் வோக்ஸ்வாகன் கார் வைத்திருந்தால் 1,000 டாலர் கிப்ட்.. இந்தியாவில் எப்படி..?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெட்ராய்ட்: அமெரிக்காவில் வோக்ஸ்வாகன் நிறுவனம் செய்த மாசு கட்டுப்பாட்டு முறைகேட்டின் மூலம் மக்கள் மத்தியில் இந்நிறுவனத்தின் மீதான மதிப்பு முழுவதும் குறைந்தது.

 

மக்கள் மத்தியில் மீண்டும் நன்மதிப்பைப் பெற வோக்ஸ்வாகன் நிறுவனம் நம் நாட்டு அரசியல்கட்சிகள் வாக்குகளுக்காகக் காசை அளிப்பது போல் நன்மதிப்பிற்காகக் காசை வாரிக் கொட்டியுள்ளது.

4,82,000 வாடிக்கையாளர்

4,82,000 வாடிக்கையாளர்

இதன் காரணமாக மக்களிடம் தங்களது நன்மதிப்பை மீண்டும் பெறும் வகையில் 4,82,000 டீசல் வோக்ஸ்வாகன் மற்றும் ஆடி கார் வாடிக்கையாளர்களுக்கு இந்நிறுவனம் 1,000 டாலர் கிப்ட் கார்ட் மற்றும் வவுச்சர்களை வாரி வழங்கியுள்ளது.

இதற்கான அறிவிப்பை வோக்ஸ்வாகன் நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

சோகத்தில் வோக்ஸ்வாகன்

சோகத்தில் வோக்ஸ்வாகன்

கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்நிறுவன கார் உரிமையாளர்கள் சோகத்தில் இருந்தனர். இந்தத் தவறுக்காக வோக்ஸ்வாகன் நிறுவன உயர் அதிகாரிகள் பலர் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்யதனர்.

40 மடங்கு அதிக மாசு வெளிப்பாடு

40 மடங்கு அதிக மாசு வெளிப்பாடு

மேலும் பாதிப்புகள் உள்ள கார்களில் அரசு அனுமதிக்கப்பட்ட நைட்ரஜன் வாயு வெளியேற்ற அளவுகளை விடவும் 10 முதல் 40 மடங்கு அதிகமாக வாயுவை வெளியேற்றுகிறது.

டெலிவரி செய்யவில்லை
 

டெலிவரி செய்யவில்லை

இந்த மாசு வெளிப்பாடு பிரச்சனையைச் சரிசெய்ய வோக்ஸ்வாகன் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து கார்களைத் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்னமும் ஒரு காரை கூட டெலிவரி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1000 டாலர் பரிசு

1000 டாலர் பரிசு

இந்நிலையில் வோக்ஸ்வாகன் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள தனது 4,82,000 வாடிக்கையாளர்களுக்கு 500 டாலர் மதிப்பிலான விசா கிப்ட் கார்டு மற்றும் 500 டாலர் மதிப்பிலான வோக்ஸ்வாகன் நிறுவன வவுச்சர்களை அளித்துள்ளது. இதனைக் கொண்டு வாடிக்கையாளர் புதிய டையர் அல்லது பிற கார் உபகரணங்களுக்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

அதிரடி சலுகை

அதிரடி சலுகை

மேலும் மாசு வெளிப்பாடு பிரச்சனை முடிந்த உடன் புதிய நிறுவன தயாரிப்புகளுக்கு வோக்ஸ்வாகன் நிறுவனமந் அதிரடியான சலுகைகளை வழங்க உள்ளதாக அமெரிக்க வோக்ஸ்வாகன் சிஇஓ மைக்கெல் ஹார்ன் தெரிவித்தார்.

இந்தியா

இந்தியா

நம் நாட்டில் இதுகுறித்து எந்த ஒரு ஆய்வும் செய்யாமல் மத்திய அரசு தூங்கிக்கொண்டு இருக்கிறது. இதனால் இந்தியாவில் உள்ள வோக்ஸ்வாகன் வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Volkswagen diesel owners to get $ 1,000 in gift cards and vouchers

Owners of 482,000 diesel Volkswagens and Audis in the US are eligible for $ 1,000 in gift cards and vouchers as the automaker strives to placate customers dismayed by an emissions-rigging scandal.
Story first published: Wednesday, November 11, 2015, 16:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X