உக்ரைனை நம்பியிருக்கும் உலக நாடுகள்.. எதற்காக தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையேயான பிரச்சனையால், இன்று உலகின் பல நாடுகளிலும் பணவீக்கம் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. மக்கள் இதனால் பெரும் இன்னல்களை சந்தித்து வருவதை கண்கூடாக காண முடிகிறது.

 

குறிப்பாக இந்தியா போன்றதொரு அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில், விலைவாசி ஏற்றம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் - ரஷ்யா பிரச்சனையால் இவ்வளவு பிரச்சனையா? ஏன் என்ன காரணம்? உண்மையில் இப்பிரச்சனை தான் உலகம் முழுக்க நிலவி வரும் பணவீக்கத்திற்கு காரணமா? உக்ரைனில் இருந்து அப்படி என்ன தான் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மற்ற முக்கிய விவரங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

28 கோடி EPF சந்தாதாரர்களின் தரவுகள் கசிவா.. எச்சரிக்கும் உக்ரைன் சைபர் செக்யூரிட்டி! 28 கோடி EPF சந்தாதாரர்களின் தரவுகள் கசிவா.. எச்சரிக்கும் உக்ரைன் சைபர் செக்யூரிட்டி!

மக்காச்சோளம்

மக்காச்சோளம்

உக்ரைன் மக்காச்சோளம் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நாடாகும். உக்ரைனின் கருப்பு நிற மண் மிக வளம் பொருந்திய மண்ணாக உள்ளது. இது பயிர்கள் செழித்து வளர உதவுகிறது. இதனால் உக்ரைனில் விவசாயம் செழித்து வளருகின்றது. இதனால் உக்ரைனின் விவசாய ஏற்றுமதி மதிப்பு சுமார் 27 பில்லியன் டாலராகும். தற்போது அங்கு ரஷ்யா உக்ரைன் இடையே பிரச்சனை நடந்து வருவதால், உற்பத்தியில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2021- 22ல் மட்டும் உக்ரைன் 30.9 மில்லியன் டன் மக்காச்சோளத்தினை ஏற்றுமதி செய்துள்ளது. மக்காச்சோளம் ஏற்றுமதியில் உக்ரைன் 4வது பெரிய நாடாகும். 2021ல் மட்டும் 5.5 பில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி செய்துள்ளது. இது சர்வதேச ஏற்றிமதியில் 13% ஆகும்.

 சூரிய காந்தி  எண்ணெய்

சூரிய காந்தி எண்ணெய்

உக்ரைனின் மற்றொரு பிரதான பயிர் சூரியகாந்தி. உக்ரைனின் தேசிய மலர் சூரியகாந்தி ஆகும். சர்வதேச அளவில் சூரிய காந்தி எண்ணெய் உற்பத்தியில் உக்ரைன் முதலிடத்தில் உள்ளது. சர்வதேச அளவிலான சப்ளையில் 47% பங்கு வகிக்கிறது. 2021ல் மட்டும் 5. 7 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியினை செய்துள்ளது. தற்போது நிலவி வரும் பிரச்சனையால் ஏற்றுமதி சரிவினைக் கண்டுள்ளது.

சூரிய காந்தி விதைகள்
 

சூரிய காந்தி விதைகள்

உக்ரைன் சூரிய காந்தி விதை ஏற்றுமதியிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நாடாகும். சர்வதேச அளவில் 11வது இடத்தில் உள்ளது. இது எண்ணெய் உற்பத்திக்கு தேவையான மூலதன பொருளாக உள்ளது. இது சில விலங்குகளுக்கு உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது.

ரஷ்யாவும் மக்காச்சோளம், சூரியகாந்தி விதைகள், சூரியகாந்தி எண்ணெய் ஏறுமதியாளராக உள்ளது. எனினும் தற்போது ஏற்றுமதியில் கட்டுபாடு விதித்துள்ளது.

கோதுமை

கோதுமை

உக்ரைன் உலகின் எட்டாவது பெரிய கோதுமை உற்பத்தியாளராகும். இது 6வது பெரிய ஏற்றுமதியாளராகும். சர்வதேச அளவிலான மொத்த ஏற்றுமதியில் 8.5% பங்கு வகிக்கிறது. இதன் மதிப்பு சுமார் 5.1 பில்லியன் டாலராகும். நிலவி வரும் பிரச்சனைக்கு மத்தியில் ஏற்றுமதியில் தடை ஏற்பட்டுள்ளது, இதனால் ஏற்கனவே உலகளவில் கோதுமை விலையானது பெரியளவில் அதிகரித்துள்ளது.

கடுகு(Rapeseed)

கடுகு(Rapeseed)

கடுகு எண்ணெய் தயாரிக்கவும், விலங்குகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் உக்ரைனின் முக்கிய ஏற்றுமதி பொருளாக உள்ளது. கடந்த ஆண்டில் 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்துள்ளது. உக்ரைனில் பிரச்சனைகள் தொடரும்பட்சத்தில், மேற்கோண்டு எண்ணெய் விலை அதிகரிக்க இது காரணமாக அமையலாம்.

பார்லி

பார்லி

பார்லி, உக்ரைனின் மற்றொரு முக்கியமான ஏற்றுமதி பொருளாகும். இது 1.3 பில்லியன் டாலர் மதிப்பிலான பார்லியினை கடந்த ஆண்டில் ஏற்றுமதி செய்துள்ளது. மொத்தத்தில் உக்ரைன் விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பார்லி ஏற்றுமதியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது கம்பு, தினை மற்றும் அரிசி உள்ளிட்ட பிறவற்றையும் உற்பத்தி செய்கிறது. எனினும் இவைகள் பெரியளவில் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை.

இறைச்சி

இறைச்சி

உக்ரைன் முன்னணி இறைச்சி ஏற்றுமதியாளராகவும் உள்ளது. உக்ரைனில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், பல நாடுகளில் இறைச்சி விலையும் அதிகரித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இரு நாடுகளுமே கோழி, பன்றி, இறைச்சி மற்றும் மாட்டிறைச்சியினை ஏற்றுமதி செய்து வருகின்றன. கடந்த 2021ல் 827.8 மில்லியன் டாலர் மதிப்பில் உக்ரைன் ஏற்றுமதி செய்துள்ளது.

கோழி முட்டை

கோழி முட்டை

உக்ரைன் முட்டை உற்பத்தியிலும் முன்னணி நாடாக உள்ளது. 2021ல் நாடு முழுவதும் 3 பில்லியன் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. முட்டை உற்பத்தியில் நிலவி வரும் பற்றாக்குறையை நிரப்ப இந்தியா முயன்று வரும் நிலையில், இது உடனடியாக சாத்தியமில்லை என்றாலும், இந்தியாவில் இருந்தும் முட்டை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

சர்க்கரை

சர்க்கரை

உக்ரைன் உலகின் 14வது பெரிய சர்க்கரை உற்பத்தியாளராகும். இது 2022ல்; 2.2 மில்லியன் உற்பத்தியினை செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தற்போது நிலவி வரும் போர் பதற்றத்தில் மத்தியில் இது குறையலாம். இப்போருக்கு பின்னர் உலகளவில் சர்க்கரை விலையானது கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரும்பு தாது

இரும்பு தாது

உக்ரைன் விவசாய உற்பத்தியில் மட்டும் அல்ல, உலகின் முக்கிய தாதுக்களின் இருப்பிடமாகவும் உள்ளது. குறிப்பாக இரும்புத் தாது ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த ஆண்டில் 6.9 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியினை செய்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா பிரச்சனைக்கு பிறகு இரும்பு தாது விலையானது 16% அதிகரித்தது. எனினும் தற்போது சற்று குறைந்துள்ளது.

இரும்பு

இரும்பு

உக்ரைன் உலகின் 14வது பெரிய இரும்பு உற்பத்தியாளராகும். இது நாட்டின் ஏற்றுமதியில் 18% பங்கு வகிக்கிறது. உக்ரைன் பிரச்சனைக்கு பிறகு அலாய் வீல்களின் விலையானது அதிகரித்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் இவ்விரு நாடுகளும் இணைந்து 43 மில்லியன் டன் ஏற்றுமதியினை ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகின்றன.

நியான்

நியான்

நியான் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் உக்ரைனால்; உலக அளவில் செமி கண்டக்டர் உற்பத்தியிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது சிப் உற்பத்தியில் தேவைப்படும் முக்கியமான ஒன்றாகும். ஏற்கனவே சர்வதேச அளவில் சிப் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், இது இன்னும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது கார் மற்றும் ஸ்மார்ட்போன், மின்சார கார்கள் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.

யுரேனியம்

யுரேனியம்

உக்ரைனில் யுரேனியம் இருப்பும் அதிகம் உள்ளது. இது அணுசக்தியை உருவாக்க பயன்படுகிறது. உலகளவில் 9வது உற்பத்தியாளராகவும் உக்ரைன் உள்ளது. போர் பிரச்சனைக்கு மத்தியில் இதன் சப்ளையிலும் தாக்கம் உள்ளது.இதனால் இதன் விலையும் உச்சம் தொட்டுள்ளது.

டைட்டானியம்

டைட்டானியம்

டைட்டானியம் உலகின் 5வது மிகப்பெரிய உற்பத்தியாளராக உக்ரைன் உள்ளது. லைட்வெயிட் உலோகமான இது விமான உற்பத்தியில் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. அதோடு கார் மற்றும் சிப், விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்ட பலவற்றை தயாரிக்க பயன்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் இதன் தேவை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்ககப்படுகிறது.

இன்னும் என்னவெல்லாம் லிஸ்டில்?

இன்னும் என்னவெல்லாம் லிஸ்டில்?

மேற்கண்ட பொருட்கள் தவிர, பாதரசம் மற்றும் ஷெல் கேஸ் என பலவற்றையும் ஏற்றுமதி செய்கிறது. இது தவிர உக்ரைனில் சமீபத்திய காலமாக ஐடி துறையிலும் சேவை அதிகரித்து வருகின்றது. உக்ரைனில் சுமார் 3 லட்சம் ஐடி ஊழியர்கள் இருக்கலாம். ஐடி ஏற்றுமதியின் மதிப்பு அதன் ஜிடிபியில் 4% பங்கு வகிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are Ukraine's top exports to the world?

What are Ukraine's top exports to the world?/உக்ரைனை நம்பியிருக்கும் உலக நாடுகள்.. எதற்காக தெரியுமா..?
Story first published: Tuesday, August 9, 2022, 15:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X