அடேங்கப்பா.. யாருங்க இந்த யூசுப் அலி.. அபு தாபி ராஜ குடும்பமே பணம் கொடுக்குதே.. பெரிய ஆள்தான் போல!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யூசுப் அலியைப் பற்றி பார்க்க வேண்டுமானால், இந்தியாவின் அரபிக் கடலோரம் இருக்கும் கேரளத்தில் இருந்து தான் தொடங்க வேண்டி இருக்கும்.

பொதுவாக மலையாளப் பாடலைப் பாடுவது போல பேசுபவர்கள், திருச்சூர் மலையாளிகள். அந்த மலையாள மாவட்டத்தில் நத்திகா (Nattika) கிராமத்தில் பிறந்தவர் தான் நம் யூசுப் அலி.

சாதாரண வாழ்கை தான். ஆனால் வியாபார குடும்பம். அதே கிராம புறத்திலேயே பள்ளி படிப்பும், பிசினஸ் மேனேஜ்மெண்டில் டிப்ளோமாவும் படித்து முடித்த கையோடு 18 வயதில் 1973-ல் அபுதாபிக்கு டிக்கெட் போட்டுவிட்டார்.

மாமா கடை
 

மாமா கடை

மாமா எம் கே அப்துல்லாவின் வியாபரத்தில் இணைந்து கொண்டார் யூசுப் அலி. மெல்ல இறக்குமதி மற்றும் மொத்த விலை வியாபாரத்தை மேம்படுத்தினார். மெல்ல உணவு மற்றும் உணவு அல்லாத துறைகளிலும் வியாபாரத்தை வளர்த்தார் யூசுப் அலி. வியாபாரம் இன்னொரு பரிமாணத்தைத் தொட்டது.

1980

1980

குளிர்சாதனை வசதிகளைத் தொடங்கினார்கள், இறைச்சி மற்றும் உணவு பதப்படுத்தும் ஆலைகளை நிறுவினார்கள். வியாபாரம் சிறப்பாக வளர்ந்தது. 1980-களில் லூலூ கம்பெனி ஐக்கிய அரபு அமீரகத்தில் கணிசமான மொத்த விலை மற்றும் சில்லறை விலை உணவுச் சந்தையில் ஒரு பெரும் சந்தையை கைப்பற்றி இருந்ததாகச் சொல்கிறது விக்கீபீடியா. பிசினஸ் அறிவை பிராக்டிக்கலாக பெற்றுக் கொண்டு, தனியாக கடை நடத்த தீர்மானித்தார்.

வளைகுடா போர்

வளைகுடா போர்

1990. சதாம் உசேன் உச்சத்தில் இருந்த காலம். சதாம், குவைத்தை ஆக்கிரமிக்க பார்த்ததற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அமெரிக்கா உட்பட பல நாடுகளும் களம் இறங்கி ரத்தக் களறியாக போராடின. இந்த 1990 காலகட்டத்தில் தான் நம் யூசுப் அலி லூலூ சூப்பர் மார்க்கெட்டைத் தொடங்கினார். எல்லோரும் பொட்டி படுக்கைகளைத் தூக்கிக் கொண்டு சொந்த நாட்டுக்கு ஓடிய போது, யூசுப் அலி தன் லூலூ மால் வியாபார வேலைகளை கவனித்தார்.

நல்ல லாபம்
 

நல்ல லாபம்

அதன் பின் போர் முடிந்து, மெல்ல இயல்பு நிலை திரும்பியது. அப்படியே கச்சா எண்ணெய்க்கான தேவையையும் அசுரத் தனமாக அதிகரித்தது. தேவை அதிகரிக்க, அதிகரிக்க, விலையும் ஜோராக அதிகரித்தது. ஐக்கிய அரபு அமீரகம் செல்வத்தில் திளைக்கத் தொடங்கியது. யூசுப் அலியின் வியாபாரமும் பல்கிப் பெருகத் தொடங்கியது.

ரீடெயில்

ரீடெயில்

1990-கள் வரை ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளில் மளிகைக் கடைகளின் முகம், ரீடெயில் வியாபாரமாக வளரத் தொடங்கி இருந்தது. Continent (தற்போது Carrefour) என்கிற கம்பெனி துபாயில் கடை திறந்து ரீடெயில் வியாபாரத்தின் முகத்தையே மாற்றி எழுதிக் கொண்டு இருந்தது.

சரியான நேரம்

சரியான நேரம்

இந்த வியாபார மாற்றத்தை கச்சிதமாக பிடித்துக் கொண்டார் யூசுப் அலி. துபாயில் கடை போடாமல் அபுதாபியில் லூலூ ஹைப்பர் மார்க்கெட் கடை போட்டு தன் வளர்ச்சியை உறுதி செய்து கொண்டார் யூசுப் அலி. அதன் பிறகு கண்ட வளர்ச்சி எல்லாம் அசுரத் தனமானவைகள்.

சாம்ராஜ்ய விரிவாக்கம்

சாம்ராஜ்ய விரிவாக்கம்

2000-ம் ஆண்டில் லூலூ குரூப் இண்டர்நேஷனல் என கம்பெனியை பதிவு செய்தார். இன்று 188 கடைகள் உலகம் முழுக்க கடை திறந்து வைத்து வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார். சுமார் 57,000 பேருக்கு வேலை கொடுத்துக் கொண்டு இருக்கிறார். ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா என உலகின் 4 கண்டங்களில் வியாபாரம் செய்கிறார் யூசுப் அலி.

இந்தியாவின் மிகப் பெரிய கடை

இந்தியாவின் மிகப் பெரிய கடை

கேரளத்தின் கொச்சி நகரத்தில் சுமார் 17 ஏக்கர் பரப்பில் லூலூ இண்டர்நேஷனல் ஷாப்பிங் மால் கட்டி இருக்கிறார். செலவு சுமார் 1,600 கோடி ரூபாய். அது தான் இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு 220+ கடைகள் இருக்கின்றன. வியாபாரம் நடக்கும் நிலப்பரப்பு மட்டும் சுமாராக 6,25,000 சதுர அடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

வியாபாரம் செய்யும் நாடுகள்

வியாபாரம் செய்யும் நாடுகள்

லூலூ சூப்பர் மார்க்கெட், ஹைப்பர் மார்க்கெட் சில்லறை வியாபாரம் எல்லாம் UAE, Oman, Qatar, Kuwait, Yemen, Saudi Arabia, Bahrain, Egypt, Kenya, India... போன்ற பல நாடுகளில் செய்து கொண்டு இருக்கிறார். டிலாய்ட்டி (Deloitte) என்கிற பெரிய கம்பெனி, உலகில் வேகமாக வளரும் சில்லறை வணிக கம்பெனிகளில் லூலூவும் ஒன்று என பட்டியலிட்டு இருப்பதாகச் சொல்வதாகச் செய்திகள் இருக்கின்றன.

மால்கள்

மால்கள்

யூசுப் அலியின் ஹைப்பர் மார்க்கெட் மற்றும் சூப்பர் மார்க்கெட் தான் மத்திய கிழக்கு நாடுகளில் மிக முக்கிய சில்லறை வணிக கம்பெனிகளில் ஒன்று. ஆக இவர் வெறும் ரீடெயில் தாதாவா..? என்றால் இல்லை.

Khalidiyah Mall,

Al Raha Mall,

Al Wahda Mall,

Mushriff Mall,

Madinat Zayed Mall,

Mazyad Mall,

Ramli Mall,

RAK Mall,

Al Foah Mall,

Al Khor Mall,

Riyadh Avenue Mall,

Oman Avenues Mall... என பல ஷாப்பிங் மால்களையும் நடத்திக் கொண்டு இருக்கிறாராம்.

வேறு என்ன

வேறு என்ன

சரி சூப்பர் மார்க்கெட், ஹைப்பர் மார்க்கெட் + மால்கள் வைத்திருக்கிறார் பெரிய ஆள் தாங்க என முடித்துக் கொள்ள முடியாது. சொகுசு ஹோட்டல்கள் இருக்கிறதாம். Twenty14 Holdings என்கிற கம்பெனியைத் தொடங்கி உலகம் முழுக்க, பல நாடுகளில் ஹோட்டல் நடத்திக் கொண்டு இருக்கிறார் என்கிறது ரெட்டிஃப்.காம்.

ஸ்காட்லாந்து யார்ட்

ஸ்காட்லாந்து யார்ட்

1829 - 1890 வரை உலக புகழ்பெற்ற ஸ்காட்லார்ந்து யார்ட் காவலர்களின் தலைமையகமாக இருந்த கட்டடத்தை சுமாராக 170 மில்லியன் டாலருக்கு வாங்கி 5 ஸ்டார் ஹோட்டல் கட்டி விட்டு இருக்கிறார் என்கிற ரெட்டிஃப். ஹயாட் நிறுவனம் அந்த ஹோட்டலை நிர்வகிப்பதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை சொல்கிறது. இப்படி ஏகப்பட்ட ஸ்டார் ஹோட்டல்கள் இவருக்கு இருக்கிறது.

உணவு பதப்படுத்துதல்

உணவு பதப்படுத்துதல்

அது போக இந்தியாவில் உணவு பதப்படுத்தும் ஆலைகள், உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் இறக்குமதி, கன்வென்ஷன் சென்டர்கள் என திருவனந்தபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு, டெல்லி, உத்திரப் பிரதேசம், மும்பை, சென்னை, கொச்சி, திருச்சூர் போன்ற நகரங்களில் வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார்.

வங்கித் துறை

வங்கித் துறை

முடிந்ததா பட்டியல்..? என்றால் இல்லை. இந்த வியாபாரங்கள் எல்லாம் போக, தன் சொந்த மாநிலமான கேரளத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் கத்தோலிக் சிரியன் பேங்க் (Catholic Syrian Bank)-ல் 4.99 % பங்குகளை வாங்கி இருக்கிறார். அதே போல கேரளத்தின் ஃபெடரல் வங்கியிலும் சுமாராக 4.47 % பங்குகளை வாங்கி இருக்கிறார்.

ஃபோர்ப்ஸ் பில்லியனர் பட்டியல்

ஃபோர்ப்ஸ் பில்லியனர் பட்டியல்

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் கணக்குப் படி, நம் யூசுப் அலி, இந்தியாவின் 26-வது பெரிய பணக்காரராக இருக்கிறார். உலக அளவில் இவர் 538-வது இடத்தில் இருக்கிறார். 23 ஏப்ரல் 2020 நிலவரப்படி யூசுப் அலியின் சொத்து மதிப்பு 3.6 பில்லியன் டாலராக இருக்கிறது.

முதலீடு

முதலீடு

இப்போது சொல்லுங்கள், இந்த அளவுக்கு உலகம் முழுக்க சுற்றி சுற்றி வியாபரம் செய்யும் திறமை சாலி, வளைகுடா நாடுகளை விட்டு எல்லோரும் ஓட்டம் எடுத்த போது கூட, தன் வியாபாரத்தின் மீது நம்பிக்கை வைத்து நின்ற யூசுப் அலியின் கம்பெனியில், அபுதாபியின் ராஜ குடும்பம் முதலீடு செய்யாதா என்ன? வாழ்த்துக்கல் யூசுப் அலி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Who is Yusuff Ali actually M A Yusuff Ali

Who is Yusuff ali and what he did to become a billionaire. What are the businesses he own and what are the indian equity investments he have.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more