சீனாவின் ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா குழுமத்தின் முன்னாள் தலைவரான ஜாக் மா, அவ்வப்போது எதையாவது கூறிவிட்டு, பின் மாட்டிக் கொண்டு விழிப்பது ஒரு தொடர் கதையே.
ஒரு ஆங்கில ஆசிரியான ஜாக் மா. வெற்றி என்ற சொல்லுக்கு பொருத்தமானவராவர். ஆசிரியாரான இவர், பின்னாளில் பணக்கார பெரிய தொழில் முனைவோராக மாறினார். கடந்த 2016ல் டொனல்டு டிரம்ப் ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்ட பின்பு, அவரை சந்தித்த மிகப்பெரிய சீன தொழிலதிபராவர்.
அது மட்டும் அல்ல குறும்படங்களில் நடித்தவர், பாடல்களையும் பாடியுள்ளார். ஓவியர், இவர் சீனாவின் சிறந்த கலைஞரான ஜெங் பான்ஷியுடன் உருவாக்கிய ஒரு ஓவியம். சோதேபியின் ஏலத்தில் 5.4 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது. ஆக இப்படி ஏராளமான திறமைகளையும், திறனையும் கொண்ட ஜாக் மா இளைஞர்களுக்கு ஒரு முன்னோடி என்றே கூறலாம்.
முகேஷ் அம்பானி வெளியேற்றம்.. உலக டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் பின்னடைவு.. காரணம் இதுதான்..!

என்ன காரணம்
இப்படிப்பட்ட சீனாவின் முன்னணி நிறுவனமான அலிபாபாவின் ஆன்ட் குரூப் ஐபிஓவை சீன அரசு சமீபத்தில் தடை செய்தது. இதனால் இந்த நிறுவனம் பல நெருக்கடிகளை கண்டு வருவதாக ஏற்கனவே ஒரு கட்டுரையில் படித்தோம். சரி உண்மையில் என்ன தான் பிரச்சனை? ஏன் சீனாவின் முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனமான அலிபாபா மீது, சீன அரசின் கவனம் சென்றுள்ளது? வாருங்கள் பார்க்கலாம்.

சீன மக்கள் வெறுப்பு
சீனாவின் செல்லப்பிள்ளை, வெற்றி குழந்தையாக இருந்தவர், தற்போது வில்லான பார்க்கப்படுகிறார். சீனா மக்கள் வெறுக்கும் ஒருவராக மாறிவிட்டாரே ஏன்? அதிலும் ஒரு எழுத்தாளர் அவரை villain, evil capitalist and bloodsucking ghost என்றெல்லாம் வர்ணித்துள்ளார். ஏன் இப்படி எல்லாம் அழைக்கப்படுகிறார் என கேட்டால், அதற்கும் ஒரு எழுத்தாளர் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஜாக் மாவின் அஸ்தஸ்து இழப்பு
சீனா அரசாங்கத்திடம் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் இந்த அஸ்தஸ்து இழப்பு ஏற்பட தொடங்கியுள்ளது. அதிலும் கடந்த வியாழக்கிழமையன்று சீன அதிகாரிகள் விசாரணையத் தொடங்கியுள்ளது இன்னும் பின்னடைவை கொடுத்துள்ளது. கடந்த மாதம் அலிபாபா ஜாக்மா தலைமையில் செயல்படும் நிறுவனமான ஆன்ட் ஐபிஓ வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால் இது ஒழுங்குமுறை ஆணையங்களின் விதிமுறைகளை பூர்த்தி செய்யாததால், இந்த ஐபிஓ தடை செய்யப்பட்டது.

மோனோபாலி கொள்கை
மிகப்பெரிய அளவில் பொது பங்கு வெளியீட்டை செய்ய திட்டமிட்ட இந்த நிறுவனத்தின் மீது, தற்போது மற்றொரு குற்றச்சாட்டையும் சீனா சுமத்தியுள்ளது. அது அலிபாபா மோனோபாலி கொள்கை விதிமுறைகளுக்கு எதிரானது என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மோனோபாலி என்பது அந்த சந்தையில், அந்த நிறுவனத்தினை தவிர வேறு யாரும் போட்டியிட முடியாத சூழலை உருவாக்கும் என்பதாலே, இப்படி ஒரு தக்க நடவடிக்கையை சீன அரசு எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

விவரம் இது தான்
அதாவது நீங்கள் உங்கள் பொருளை அலிபாபா நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்றால், வேறு எந்த நிறுவனத்திற்கு விற்க முடியாது. அப்படியே நீங்கள் வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவேண்டுமேனில் அலிபாபாவிடம் விற்க முடியாது. இது தான் அந்த நிறுவனத்தின் சிக்கலான விதிமுறை. இதனால் தான் சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது.

மற்ற நிறுவனங்கள் பாதிக்கும்
சீன அரசின் இந்த நடவடிக்கைக்கு மற்றொரு முக்கிய காரணமும் உண்டு. அது அலிபாபாவின் கொள்கையை ஏற்றுக் கொண்டால், அலிபாபா வேகமாக வளர்ச்சி காணும். ஆனால் மற்ற நிறுவனங்கள் இதனால் வீழ்ச்சி காணலாம் என்பதும் சீன அரசின் கவலை. இதனை பீபிள் டெய்லி என்கிற சீன அரசாங்க பத்திரிக்கை எழுதியுள்ளது.

இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்
எனினும் இதற்கு அரசியல் ரீதியான ஒரு காரணமும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த அக்டோபரில் ஜாக் மா, சீன வங்கியாளர்கள் இருந்த சபையில் அரசாங்கத்தின் மீதான விமர்சனத்தையும் செய்தார். அதோடு நிதித்துறையில் புதுமைகளை புகுத்தவும், வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் சரியான நிர்வாக அமைப்பு இல்லை என விமர்சனம் செய்துள்ளார்.

எதனால் இந்த நடவடிக்கை
ஆக மேற்கண்ட பிரச்சனைகளுக்கு மத்தியில் தான், மோனோபாலிக்கு எதிரான சட்டம் கடந்த நவம்பர் மாதத்தில் வெளியானது. ஆக இப்படி ஒரு நிலையில் தான் அலிபாபா குழுமத்தின் மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆக உண்மையில் இது அலிபாபா மீது எடுக்கபட்ட நடவடிக்கையா? அல்லது அரசியல் பிரச்சனையான என்பது தெளிவாக தெரியவில்லை.