மோசமான நிலையில் பாகிஸ்தான்.. வறுமை விகிதம் 5% மேல் அதிகரிப்பு.. உலக வங்கி மதிப்பீடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. பொருளாதார ரீதியாக ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள பாகிஸ்தானில், தற்போது வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

 

இது குறித்து உலக வங்கி செய்துள்ள மதிப்பீட்டில், பாகிஸ்தானில் வறுமை விகிதமானது, கடந்த 2020ம் ஆண்டில் 4.4%,ல் இருந்து, 5.4% ஆக அதிகரித்துள்ளதாக மதிப்பிட்டுள்ளது.

37 வருட பிஎம்சி வங்கியை கைப்பற்றும் 3 வருட ஸ்டார்ட்அப் நிறுவனம்.. புதிதாக ரூ.1800 கோடி முதலீடு..! 37 வருட பிஎம்சி வங்கியை கைப்பற்றும் 3 வருட ஸ்டார்ட்அப் நிறுவனம்.. புதிதாக ரூ.1800 கோடி முதலீடு..!

2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழாக தள்ளப்பட்டுள்ளனர்.

வறுமை விகிதம்

வறுமை விகிதம்

குறைந்த நடுத்தர அளவிலான வருமானம் உடைய விகிதத்தினை உடைய மக்களை பயன்படுத்தி செய்யப்பட்ட மதிப்பீட்டின் படி, கடந்த 2020 - 21ம் ஆண்டில் பாகிஸ்தானில் வறுமை விகிதம் 39.3% அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2021 - 22ம் ஆண்டில் இது 39.2% ஆகவும், 2022 -23ம் ஆண்டில் 37.9% ஆக குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

 உயர் நடுத்தர வருமானம் உடைய மக்கள் - வறுமை விகிதம்

உயர் நடுத்தர வருமானம் உடைய மக்கள் - வறுமை விகிதம்

இதே உயர் நடுத்தர வருமானம் உடைய மக்கள் விகிதத்தினை பயன்படுத்தியதன் மூலம், 2020 - 21ம் ஆண்டில் வறுமை விகிதம் 78.4% ஆக இருந்தது. இதே 2021 - 22ம் ஆண்டில் 78.3% ஆகவும், இதே 2022 - 23ம் ஆண்டில் 77.5% ஆக குறையும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

உணவு பாதுகாப்பின்மை
 

உணவு பாதுகாப்பின்மை

இந்த மதிப்பீடுகளின் படி, பாகிஸ்தானில் 40% குடும்பங்கள் பாகிஸ்தானில் மிதமான மற்றும் கடுமையான உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக வங்கி வறுமை விகிதம் அதிகரித்து வருவதாக கூறி வரும் நிலையில், பாகிஸ்தான் அரசு கடந்த 2015 -16ல் 24.3% ஆக இருந்த நிலையில் 2018 - 19ம் ஆண்டில் 21.9% ஆக குறைந்துள்ளது. இது கொரோனா காலம் என்பதால் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜிடிபி சரிவு

ஜிடிபி சரிவு

கடந்த நிதியாண்டில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் பொருளாதார சரிவு காணப்பட்டது. இதன் விளைவாக ஜிடிபி விகிதம் 2020ம் நிதியாண்டில் 1.5% வீழ்ச்சி கண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Array

Array

மேற்கண்ட இந்த கொரோனா காலகட்டத்தில் உழைக்கும் மக்களில் பாதிக்கும் மேல் வேலை இழப்பு அல்லது வருமான இழப்புகளை கண்டுள்ளனர். வேலை வாய்ப்புகளும் கடுமையான சரிவினைக் கண்டுள்ளன. முறைசாரா துறையில் இது பெரும் தாக்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

மெதுவான வளர்ச்சியில் பொருளாதாரம்

மெதுவான வளர்ச்சியில் பொருளாதாரம்

பாகிஸ்தானில் கடந்த இரண்டு தசாப்தங்களாகவே பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியினையே கண்டு வருகின்றது. தனி நபர் வளர்ச்சி விகிதம் வருடத்திற்கு சராசரியாக 2% மட்டுமே உள்ளது. இது தெற்கு ஆசியாவின் சராசரியிலும் பாதியாகும். இதற்கு பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்த முதலீடு மற்றும் ஏற்றுமதியினை நம்பியிருப்பது போன்ற முக்கிய காரணங்களாகும்.

பல துறைகள் பலவீனம்

பல துறைகள் பலவீனம்

ஏழை மக்களை பணியில் அமர்த்தும் விவசாயம் போன்ற துறைகள் மிக பலவீனமாக உள்ளன. இதனால் வறுமை விகிதம் மேற்கோண்டு அதிகரிக்கும் என்று உலக வங்கி கூறுகின்றது. இதற்கிடையில் கடன் விகிதமும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

World Bank estimates poverty in Pakistan rises to over 5% in 2020

World Bank latest updates.. World Bank estimates poverty in Pakistan rises to over 5% in 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X