ஒரு தங்க காசின் எடை 1,000 கிலோவாம்..! உலகின் மிகப் பெரிய தங்கக் காசை வைத்திருக்கும் ஆஸ்திரேலியா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க், அமெரிக்கா: 1000 கிலோ 10,00,000 கிராம் எடை கொண்ட தங்கத்தால் ஒரு ராட்சச தங்க காசைச் செய்திருக்கிறார்கள் ஆஸ்திரேலியாவின் பெர்த் மின்ட் என்கிற அரசு அமைப்பினர். இந்த தங்க காசின் விட்டம் 80 சென்டி மீட்டர், அடர்த்தி 12 சென்டி மீட்டர். ஒரு பக்கம் ஆஸ்திரேலியாவின் சிவப்பு கங்காரூவும், மறு பக்கம் எலிசபெத் மகாராணியையும் வடித்திருக்கிறார்கள்.

 

இந்த 1000 கிலோ தங்கக் காசை 99.99 சதவிகிதம் தங்கத்தால் செய்திருக்கிறார்களாம். இவ்வளவு பெரிய காசை செய்து, ஆஸ்திரேலியாவின் Australian Kangaroo Gold Bullion Coin Series-களின் விற்பனையை அதிகரிக்க ஒரு மார்க்கெட்டிங் போலத் தான் செய்திருக்கிறார்களாம்.

ஒரு தங்க காசின் எடை 1,000 கிலோவாம்..! உலகின் மிகப் பெரிய தங்கக் காசை வைத்திருக்கும் ஆஸ்திரேலியா..!

உலகிலேயே மிகப் பெரிய தங்க காசு என்கிற பட்டத்தைப் பெற்று, அதை கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் பதிவு செய்திருக்கிறது ஆஸ்திரேலியா. இதற்கு முன் 2007-ம் ஆண்டில் கனடா நாட்டின், ராயல் கனடியன் மிண்ட்-ன் 100 கிலோ தங்கக் காசு தான் உலகின் மிகப் பெரிய தங்கக் காசாக இருந்தது. அதை 2012-ம் ஆண்டே முறியடித்துவிட்டது ஆஸ்திரேலியாவின் இந்த 1000 கிலோ தங்க காசு.

2012-ல் இருந்து உலகின் பல பகுதிகளுக்கும் இந்த 1000 கிலோ தங்கம் பயணித்துக் கொண்டிருக்கிறது. 2014-ம் ஆண்டுகளில் ஆசிய நாடுகளுக்கும் வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த 1000 கிலோ தங்கக் காசு, நியூயார்க் நகரத்தில் முதல் முறையாக மக்கள் பார்வைக்கு வைத்திருக்கிறார்களாம். இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை, நியூ யார்க் நகரத்தில், நியூ யார்க் பங்குச் சந்தை (NYSE - New York Stock Exchange)அலுவலகத்துக்கு வெளியே இந்த ராட்சச தங்கக் காசு மக்கள் பார்வைக்கு இருக்குமாம்.

கிராமுக்கு 3,500 ரூபாய் கணக்கு வைத்துக் கொண்டால்... இந்த 1000 கிலோ அல்லது 10,00,000 கிராம் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும் என ஒரு மனக் கணக்கோ அல்லது பேப்பர் பேனா வைத்துக் கொண்டு ஒரு பள்ளிக் கூட கணக்கோ போட்டுப் பாருங்களேன்..! நெஞ்சு வலி வந்தால் நாங்கள் பொறுப்பல்ல..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

world largest gold coin is in new york stock exchange

world largest gold coin is in New York stock exchange for people display
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X