பில்கேட்ஸ்-க்கு 12 வருஷம் வேணும்.. எனக்கு ஒரு வருஷம் போதும்..!

Written By: Valliappan N
Subscribe to GoodReturns Tamil

இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிப்பது மிக பெரிய குதிரைக் கொம்பாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணங்கள் என்னவென்று பார்த்தால் முதலீடு செய்ய போதிய பணம் இல்லாதது, போட்டி, பொறாமை, பெரும் முதலாளிகளின் வர்த்தக அழுத்தம் என கூறி கொண்டே போகலாம். இதை அனைத்தும் தாண்டி ஒருவன் முன்னேறினால் தான் அவன் வெற்றி பெற்றதாக இந்த உலகம் அவனை ஏற்றுக் கொள்ளும்.

இதை செய்வதற்கு மிக கூர்மையான புத்தி, சிந்தித்து செயல்படுத்துதல், போட்டி நிறுவனங்களுடைய பொருளின் தரத்தினை வைத்து எதிர்கொள்ளுதல் மற்றும் எதையும் தாங்கும் மனபக்குவம் எல்லாம் ஒன்று சேர்ந்தால் தான் பில்லியனர் என்ற இலக்கை அடைய முடியும்.

அப்படி இந்த குணங்களை வைத்து மிக குறுகிய காலத்திலேயே பில்லியன் டாலரை சம்பாதித்தவர்கள் பற்றிதான் பார்ப்போம். அட பில்கேட்ஸை விட ஒருவர் வேகமாக பில்லியன் டாலர் பணத்தை சம்பாதித்துள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஜான் டி ராக்கர்பெல்லேர்

ஜான் டி ராக்கர்பெல்லேர் பில்லியனர் ஆக எடுத்து கொண்ட கால அளவு 25 வருடங்கள். இதைச் சாதிக்க காரணமாக இருந்தது இவர் உருவாக்கிய ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனம் தான். இதை ஆரம்பித்த சில வருடங்களிலேயே அமெரிக்காவில் பல எண்ணெய் வளங்களை இவர் வசம் ஆக்கினார். 1890-களில் அமரிக்காவின் 90% எண்ணெய் வளங்கள் இவர் கட்டுப்பாட்டில் வந்தது. இவரின் மொத்த சொத்து மதிப்பு 345 பில்லியன் டாலர் என மதிப்பிடப்படுகிறது.

சேர்ஜீ பிரின் மற்றும் லாரி பேஜ்

கூகிள் நிறுவனத்தை உருவாக்கியவர்களுக்கு பில்லியன் டாலரை சம்பாரிக்க 8 வருடங்கள் தேவை பட்டது. இவர்களின் பள்ளி பருவத்தின் ப்ராஜெக்ட் தான் இன்றை கூகிள் தேடு பொறி. ஆரம்ப கட்டத்தில் கூகுளை எக்ஸ்சைட் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு 1.6 மில்லியன் டாலருக்கு விற்று விடலாம் என சேர்ஜீ பிரின் மற்றும் லாரி பேஜ் முடிவு செய்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் அது தட்டி போக அதில் இருந்து குறுகிய காலத்திலேயே கூகிள் நிறுவனம் இவர்களை பில்லியனர் ஆக உயர்த்த உதவியது.

சீயான் பார்க்கர்

பில்லியனர் ஆக இவருக்கு 6.5 வருடங்கள் ஆனது. இவர்தான் பேஸ்புக்கின் முதல் தலைவர். இவர் நாப்ஸ்டர் மற்றும் பிளாக்சோ நிறுவனங்களின் துணை நிறுவனர், அந்த இரு நிறுவனங்களில் ஒன்று மூடப்பட்டது. இன்னொன்றில் இருந்து சீயான் பார்க்கர் வெளியே அனுப்ப பட்டார். இதை தொடர்ந்தே பேஸ்புக்கில் தனது 24 வது வயதில் இணைந்தார்.

ஜெப் பிஸோஸ்

தற்போதைய உலகின் மிக பெரிய பணக்காரர் ஆன ஜெப் பிஸோஸ் பில்லியன் டாலரை தன் வசமாக்க எடுத்து கொண்டது 4.5 வருடங்கள். இவர் நியூயார்க்-இல் அதிக சம்பளம் அளிக்கும் நிறுவனத்தை விட்டு வெளியேறி அமேசான்-ஐ தொடங்கினர். தனது 31 வது வயதில் பெற்றோரிடம் இருந்து 3,00,000 டாலரை வாங்கி அமேசானை துவங்கினர். இது ஆரம்பக்காலத்தில் ஒரு புத்தகம் விற்கும் நிறுவனம் மட்டும் தான். இன்று அதன் வளர்ச்சி மிக பெரியது, இதில் கிடைக்காத பொருட்கள் என்று சொல்லவே முடியாது அளவிற்கு வளர்ந்துள்ளது. ஆரம்பக்காலத்தில் இவர் பெற்றோர் கொடுத்து 3,000,000 டாலர்
இன்று 12 பில்லியன் டாலராக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மார்க் ஜூக்கர்பேர்க்

இவர் நான்கே வருடத்தில் பில்லியன் டாலர் இலக்கைத் தொட்டார். 2004-ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனத்தை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தொடங்கினர். முதல் நாளிலேயே 1,500 நபர்கள் பேஸ்புக்கீழ் இணைத்தனர். இன்று 200 கோடிக்கும் அதிமான மக்கள் பேஸ்புக்-ஐ உபயோகப்படுத்த துவங்கினர். அது மட்டும் இல்லாமல் வாட்ஸ்-ஆப் நிறுவனத்தையும் இவர் வசம் ஆகிவிட்டார்.

பியேர் ஓமிதார்

ஈபே நிறுவனத்தின் தலைவரான பியேர் ஓமிதார் பில்லியன் டாலர் அடைய 3 வருடங்கள் தேவைப்பட்டது. 1995-ஆம் ஆண்டு ஒரு பகுதிநேர ப்ராஜெக்ட்டாக தான் ஈபே-வை ஆரம்பித்தார். சில மாதங்களில் பணம் சேர அவர் வேலை பார்த்த நிறுவனத்தை விட்டு வெளியேறி ஈபே மீது முழு கவனத்தையும் திருப்பினார். மூன்றே வருடத்தில் ஈபே நிறுவனத்தின் மூலம் இவர் பில்லியன் டாலர் சம்பாதித்துவிட்டார்.

அன்ட்ருவ் மசோன்

பில்லியன் டாலர் சம்பாதிக்க இவருக்கு வெறும் 2.5 வருடம் தான் தேவைப் பட்டது. இவர் குரூப்பான் நிறுவனத்தின் தலைவர். இது ஒரு ஈகாம்மர்ஸ் நிறுவனம். உலகின் மிக வேகமாக வளரும் நிறுவனங்களின் குரூப்பானும் ஒன்று. ஆரம்பித்த ஏழு மாதங்களில் லாபத்தை எட்டியது, 2.5 வருடத்தில் பில்லியன் டாலர் இலக்கை எட்டியது.

கேரி விண்ணிக்

கேரி விண்ணிக் வெறும் 1.5 வருடங்களிலேயே பில்லியன் டாலரை எட்டினார். இவர் குளோபல் கிராஸ்ஸிங் என்ற நிறுவனத்தை உருவாக்கினார், இது ஒரு பைபர் ஆப்டிக் கேபிள் நிறுவனம். ஏடி & டி, மைக்ரோசாப்ட் என பல முன்னணி கார்பரேட்களும் குளோபல் கிராஸ்ஸிங் மூலமாக தன் தனது ஆசியா வாடிக்கையாளர்களை அணுகினர். ஆனால் நான்கு வருடங்களுக்குப் பிறகு ஒரு வங்கி மோசடி வழக்கில் சிக்கி 335 மில்லியன் டாலரை பங்குதாரர்களுக்கு தாரைவார்க்க நேரிட்டது.

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ் தனது முதல் பில்லியன் டாலரை அடைய எடுத்துக் கொண்ட கால அளவு 12 வருடங்கள். தனது 15 வயதிலேயே 20,000 டாலர்களை தான் சொந்தமாக உருவாக்கிய மென்பொருள் மூலம் சம்பாதித்தார். 1975-ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் துவங்கினர் அதில் இருந்து 8 வருடத்தில் மைக்ரோசாப்ட் இயங்குதளம் தான் உலகில் உள்ள 30% கணினிகளில் பயன்படுத்தப்பட்டது. தன்னுடைய 30-வது வயதில் பில்லியன் டாலர் இலக்கை எட்டினார்.

ஜே வால்கர்

இவர் தன் ஒரே வருடத்தில் பில்லியன் டாலர் அடைந்து உலகையே வியப்பில் ஆழ்த்தியவர். பிரைஸ்லைன் நிறுவனத்தை இவர் உருவாக்கினார், இதற்கு மூலதனம் இவர் முன்னதாக நிர்வகித்த சய்நப்ஸ் எனும் பைனான்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் இருந்து தான் கிடைத்தது. பிரைஸ்லைன் ஒரு இணையதள டிக்கெட் புக்கிங் சேவை நிறுவனம். 1998-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிரைஸ்லைன் முதல் நான்கு மாதத்திலேயே 40,000 டிக்கெட்களை விற்றது. அதற்கு அடுத்த ஆண்டே பில்லியன் டாலர் குறிக்கோளை அடைந்தது இந்த நிறுவனம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

World's Fastest Self Made Billionaires

World's Fastest Self Made Billionaires
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns