இவை தான் உலகின் விலையுயர்ந்த செல்லப்பிராணிகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது மிகவும் பிடிக்கும். அதுவெல்லாம் தமிழ் நாட்டில் சொல்ல வேண்டியதே இல்லை. பசு, காளை போன்றவற்றைத் தமிழர்கள் போன்று யாராலும் பராமரிக்கவும் மாட்டார்கள்.

கிராமப்புறங்களில் பசு மாடு, காலை, நாட்டு நாய்கள், ஆடுகள் என்றால் நகரத்தில் ஆடம்பரத்திற்காக வெளிநாட்டு நாய்கள், பூனை, எனப் பலவற்றை வளர்க்கின்றனர். இப்படிச் சர்வதே அளவில் விலை உயர்ந்த செல்லப்பிராணிகள் எவை என்ற பட்டியலை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

 மிஸ் மிஸ்ஸி, 1,200,000 அமெரிக்க டாலர்கள்
 

மிஸ் மிஸ்ஸி, 1,200,000 அமெரிக்க டாலர்கள்

மிஸ்ஸி அதிகப் பால் உற்பத்திக்குப் புகழ்பெற்ற ஹோல்ஸ்டன் இன பசுக்களிலிருந்து வந்ததாகும். இருந்தாலும், 2009 ஆம் ஆண்டில் அவளுடைய பால் உற்பத்தியைக் காட்டிலும், அவளுடைய கருமுட்டைக்காக, அதைக் கொண்டு அதே போன்ற இனத்தை அதிகம் உருவாக்கி அதன் மூலம் அதிவேகமாகப் பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்கிற நம்பிக்கையில் 1,200,000 அமெரிக்க டாலர்கள் விலைக்கு ஒரு கனடிய முதலீட்டாளர்களால் அவள் வாங்கப்பட்டாள்.

பச்சைக் குரங்கு 16,000,000 அமெரிக்க டாலர்கள்

பச்சைக் குரங்கு 16,000,000 அமெரிக்க டாலர்கள்

இது 2009 ஆம் ஆண்டில் ஒரு ஏலத்தில் 16,000,000 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்ட ஒரு கலப்பினப் பந்தயக் குதிரை ஆகும். முதல் முறை இந்தப் பச்சைக் குரங்கு பந்தயத்தில் விடப்பட்ட போது, வெறும் 9.8 விநாடிகளில் இது எட்டு மைல்களை ஓடிக் கடந்தது.

திபெத்திய மஸ்திஃப், 150,0000 அமெரிக்க டாலர்கள்

திபெத்திய மஸ்திஃப், 150,0000 அமெரிக்க டாலர்கள்

உலகின் மிகப்பெரிய வகை நாய்களான இவை தொடக்கத்தில் கால்நடைகளைப் பாதுகாப்பதற்காகப் பயிற்சியளிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன. உண்மையான வம்சாவளி திபெத்திய மஸ்திஃப் நாய்கள் மிக அரிதானவை மேலும் 2011 ஆம் ஆண்டில் கடைசித் திபெத்திய மஸ்திஃப் மிகப் பெரிய தொகையான 1.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது.

சர் லான்ஸ்லெட், 155,000 அமெரிக்க டாலர்கள்
 

சர் லான்ஸ்லெட், 155,000 அமெரிக்க டாலர்கள்

இந்த லாப்ரடார் வகை நாயின் விலை மிகவும் அதிகம் ஏனென்றால், இது இயற்கையாகப் பிறந்ததல்ல ஆனால் மரபணு முறைப்படி க்ளோன் செய்யப்பட்டது. சர் லான்ஸ்லெட் என்று பெயரிடப்பட்ட இவன் லாப்ரடார் நாயிடமிருந்து மரபணு முறையில் க்ளோன் செய்யப்பட்டவன் ஆவான். துரதிருஷ்டவசமாகப் புற்றுநோயால் தாக்கப்பட்டு இறந்து விட்டான்.

டீ ப்ராஜ்ஜா குரங்கு, 10,000 அமெரிக்க டாலர்கள்

டீ ப்ராஜ்ஜா குரங்கு, 10,000 அமெரிக்க டாலர்கள்

சிம்பன்சிகளுக்கு அடுத்தபடியாக (50,000 அமெரிக்க டாலர்கள்) டீ ப்ராஜ்ஜா இனக் குரங்குகள் அதிக விலையுயர்ந்த குரங்குகளாகும். இந்த ஆப்பிரிக்கக் குரங்கினங்கள் அதன் நீண்ட வெள்ளைத் தாடி மற்றும் ஆரஞ்சு நிற கிரீடம் போன்ற முடிக்காகவும் பிரசித்தி பெற்றவையாகும்.

ஜன் தன் வங்கி கணக்குகளின் சுயரூபம்..

ஜன் தன் வங்கி கணக்குகளின் சுயரூபம்..

மோடியின் ஜன் தன் வங்கி கணக்குகளின் சுயரூபம்.. மக்கள் அதிர்ச்சி..!

முகேஷ் அம்பானிக்கு நேரடி சவால்..

முகேஷ் அம்பானிக்கு நேரடி சவால்..

முகேஷ் அம்பானிக்கு நேரடி சவால்.. பாபா ராம்தேவ்-இன் புதிய திட்டம்..!

மத்திய அரசின் திட்டம் என்ன..?

மத்திய அரசின் திட்டம் என்ன..?

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மத்திய அரசின் திட்டம் என்ன..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

world's most expensive pet animals

world's most expensive pet animals
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X