பலத்த அடி வாங்க போகும் சந்தைகள்.. எதற்கும் எச்சரிக்கையா இருங்க முதலீட்டாளர்களே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில வாரங்களாகவே பெரும் சரிவை கண்டு வரும் சர்வதேச பங்கு சந்தைகள் இன்னும் பலமான சரிவை காண வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அட சர்வதேச பங்கு சந்தை தானே நமக்கென்ன பிரச்சனை என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

கடந்த வெள்ளிக்கிழமையன்றே இந்திய பங்கு சந்தைகள் தாறுமாறான இறக்கத்தை கண்டதோடு, ரூபாயின் மதிப்பும் சுமார் 72.13 ரூபாயாக வீழ்ச்சி கண்டது.

கொரோனாவின் கொடூர தாண்டவம்.. இத்தாலியை வாட்டி வதைக்கும் கொடிய வைரஸ்.. மிஞ்சினதும் போச்சு..!

வீழ்ச்சியடையலாம்

வீழ்ச்சியடையலாம்

ஆக சர்வதேச சந்தைகள் சரியும் பட்சத்தில் அது நிச்சயம் இந்திய சந்தைகளிலும் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது மிக நல்லது. சரி என்ன காரணம் இதுவரை பொருளாதாரம் வீழ்ச்சி காணும் என்று கூறி வந்த ஆய்வாளர்கள் குறிப்பாக சர்வதேச சந்தைகளும் வீழ்ச்சி காணும் என்றும் கூறுகிறார்களே வாருங்கள் பார்க்கலாம்.

வீழ்ச்சியை கணக்கெடுக்கும் சீனா

வீழ்ச்சியை கணக்கெடுக்கும் சீனா

கொரோனா வெடிப்புக்கு பின்பு சீனாவின் உற்பத்தி துறை மற்றும் சேவைத் துறை எவ்வளவு வீழ்ச்சி கண்டுள்ளது என்று கணக்கெடுக்கும் நிகழ்வு, பொருளாதார ஆரோக்கியம் குறித்த ஆய்வறிக்கைகள் அடுத்த வாரத்தில் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் எதிரொலி நிச்சயம் சர்வதேச சந்தைகளிலும் காணப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் சர்வதேச சந்தைகள் பெரும் வீழ்ச்சி காண வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

உற்பத்தி குறைந்து விட்டது

உற்பத்தி குறைந்து விட்டது

பாதிக்கப்பட்ட நாடுகளில் பொருளாதாரத்தினை எவ்வாறு வைரஸ் அழிக்கக்கூடும் என்பதை விளக்கி சில தினங்களுக்கு முன்பு சீனா ஒர் அறிக்கையை வெளியிட்டது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் உற்பத்தி அளவுகள், கடந்த பிப்ரவரியில் மிக குறைந்துள்ளதாக சீனா அந்த நேரத்தில் அறிவித்தது. இந்த நிலையில் இப்படி ஒரு கணக்கெடுப்பு மேலும் வீழ்ச்சியை தான் பிரதிபலிக்கும் என்றும் கூறப்படுகிறது.

படு வீழ்ச்சி கண்ட சந்தைகள்

படு வீழ்ச்சி கண்ட சந்தைகள்

சுமார் 66 நாடுகளில் கொரோனா பரவியுள்ளதால், ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார அதிகாரிகள் வைரஸிலிருந்து வரும் அச்சுறுத்தலின் அளவையும் மிக உயர்த்திக் காட்டினர். இதனால் கடந்த வாரத்திலேயே பல நாடுகளின் பங்கு சந்தைகள் கடுமையாக வீழ்ச்சி கண்டன. அதிலும் 2008 வீழ்ச்சிக்கு பின்னர் சர்வதேச சந்தைகள் 11% வீழ்ச்சியைக் கண்டன.

படு வீழ்ச்சி கண்ட பிஎம்ஐ

படு வீழ்ச்சி கண்ட பிஎம்ஐ

பாரம்பரிய விழாவான சந்திர புத்தாண்டுக்கு பிறகு, தொழில்சாலைகள் மூடப்பட வேண்டிய கட்டாயத்தில், சீனாவின் உத்தியோகபூர்வ கொள்முதல் மேலாளர்களின் குறியீடு (PMI) கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப்ரவரியில் வீழ்ச்சி கண்டதாக சில புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மேலும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி ஆர்டர்களில் கணிசமான அளவு சரிவைக் கண்டதாகவும் அந்த புள்ளிவிவரங்கள் கூறியுள்ளன. மேலும் வளர்ந்து வரும் சேவைத்துறையிலும் இது ஒரு வீழ்ச்சியைக் கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மற்ற பகுதிகளிலும் பாதிக்கப்படலாம்

மற்ற பகுதிகளிலும் பாதிக்கப்படலாம்

கொரோனாவால் சீனாவுக்கு அடுத்து தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள, ஜப்பான், தென் கொரியா உள்ளடக்கிய பல நாடுகள் இதே போன்ற வீழ்ச்சியை காணக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்கனவே இந்த வைரஸ் தாக்கத்தினால் ஐரோப்பாவில் உள்ள தொழில் சாலைகள் வினியோகத்தை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

என்ன செய்ய போகின்றன?

என்ன செய்ய போகின்றன?

மேலும் கிழக்கு ஆசியாவிலும் சில முக்கிய கூறுகள் அணுக நிறுவனங்கள் மிகுந்த சிரமப்படுவதாகவும் கூறப்படுகிறது. எல்லாவற்றையும் விட உலகின் முதன்மை பொருளாதார நாடாக விளங்கும் அமெரிக்காவிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. ஆக மத்திய வங்கிகளும் அரசாங்கங்களும் இந்த கொடிய தொற்றுதலை சமாளிக்க எவ்வளவும் தூரம் தயாராக இருக்கிறார்கள் என்பதை அடுத்த சில நாட்களில் அறிய முடியும். ஆக இதனையும் மூலம் முதலீட்டாளர்கள் கண்கானித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

எவ்வளவு வீழ்ச்சி என்று தெரியாது?

எவ்வளவு வீழ்ச்சி என்று தெரியாது?

ஏற்கனவே சந்தை தாறுமாறாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அதிகபட்ச வரம்புகள் இவ்வளவு தான் என்று சொல்ல முடியாது. அது எங்கு உச்சம் பெற போகிறது என்றும் தெரியாது என்று நியூயார்க்கினை தளமாகக் கொண்ட தனகா கேப்பிட்டலின் முதலீட்டி அதிகாரி கிரஹாம் தனகா கூறியுள்ளார். MSCI கணக்கீட்டின் படி கடந்த வாரம் சந்தைகளில் 5 டிரில்லியன் டாலர்களை முதலீட்டாளார்கள் இழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இன்னும் சந்தைகள் சரியும் பட்சத்தில் அது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கணிக்க முடியாது.

வினியோக சங்கிலி பாதிக்கும்

வினியோக சங்கிலி பாதிக்கும்

இப்படி ஒரு நிலையில் சீனாவின் பெரிய தொழில் சாலைகள் கடந்த வாரத்தின் நடுப்பகுதியில் 85.6% திறனை எட்டியதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சீனாவில் மார்ச் மாதத்தில் முழு உற்பத்தியை மீட்க முடிந்தாலும், அது குறைந்த அளவிலான ஏற்றூமதி ஆர்டர்களை பெறும் அபாயத்தை எதிர்கொள்ளும். ஏனெனில் தொடர்ந்து வினியோக சங்கிலி தடைபடும் என்றும் கூறப்படுகிறது. எப்படியெனில் இந்த முறை சீனாவினை விட்டு ஜப்பான், தென்கொரியா, ஜப்பான் ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது.

ஆள்பற்றாக்குறைய் எதிர்கொள்ளும் தொழில்சாலைகள்

ஆள்பற்றாக்குறைய் எதிர்கொள்ளும் தொழில்சாலைகள்

மேலும் வைரஸ் தொடங்கிய ஹூபே மாகாணத்திற்கு வெளியே 75% ஆலைகளுக்கு அதிகமாகவும், மற்ற இடங்களில் 25 - 50% ஆலைகளும் செயல்படக்கூடும் என்றும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாகாணத்தில் சிக்கித் தவிப்பதாகவும், அவர்கள் தங்களது வேலைகளை கவனிக்க பணிகளுக்கு செல்ல முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

கணிக்க முடியுமா சந்தை நிலவரத்தை

கணிக்க முடியுமா சந்தை நிலவரத்தை

சமீபத்திய நாட்களில் பல கார்ப்பரேட் நிகழ்வுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. பல ரத்து செய்யப்ப்பட்டுள்ளன. பல ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி வருகின்றன. இதனால் ஆய்வாளர்கள் சொல்வது போல் பொருளாதாரம் அடுத்து வரும் காலாண்டிலாவது மீளுமா என்பது சந்தேகமாகத்தான் உள்ளது. இப்படி ஒரு நிலையில் முதலீட்டாளர்கள் பார்வை எங்கே செல்லும், பங்கு சந்தைகள் என்னவாகும் என்பதை கணிக்க முடியாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

World Stock markets expected to fall further as corona virus

Analysts are says World stock markets expected to fall further next week after the first surveys of China’s corona virus outbreak showed factory output has plunged and the country’s service sectors.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X