சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களை ஓடஓட விரட்டும் 'சியோமி'..!

Written By:
Subscribe to GoodReturns Tamil
தொழில்நுட்ப உலகில் புதுமை செய்ய முனையும் தொழில் முனைவர்கள் அனைவரையும் ஸ்டீவ் ஜாப்ஸ் உடன் ஒப்பிடுவது வழக்கமாகப் போய்விட்டது.

இருந்த போதும் சீனாவின் லேய் ஜுன் (Lei Jun) இந்த ஒப்பிடுதலுக்கு மிகவும் தகுதியானவர் என்றே சொல்ல வேண்டும். ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தி புரட்சி செய்த ஸ்டீவ் ஜாப்ஸ் போலவே விலை குறைவான அதேநேரத்தில் தரமான ஸ்மார்ட்போன்களை தயாரித்து உலக மக்கள் அனைவரையும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தூண்டியவர் லேய் ஜுன்.

சீனாவின் நிகழ்ந்து கொண்டிருக்கும் தகவல் தொழில்நுட்ப புரட்சியைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு மிகப் பெரிய வெற்றியை அடைந்தவர். இவரது சியோமி (xiomi) நிறுவனம் கண்ட வளர்ச்சி ஒவ்வொரு இளம் தொழில்முனைவோருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணம்.

சியோமி

சியோமி நிறுவனம் உலகில் நான்காவது பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனம். இத்தனக்கும் இந்த நிறுவனம் இன்னும் அமெரிக்கா, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இன்னும் தனது விற்பனையைத் தொடங்கவில்லை.

தரம்..?

பொதுவாகவே சீன உற்பத்தி பொருட்களின் தரம் பற்றி மேற்கத்திய நாடுகள் தவறான எண்ணம் கொண்டவை. ஆனால் லேய் ஜுன் தனது சியோமி போன்கள் மூலம் இந்த எண்ணத்தையே அசைத்துப் பார்க்கிறார்.
தன்னை ஸ்டீவ் ஜாப்ஸ் உடன் ஒப்பிடுவதை இவர் மறுக்கிறார். இவரின் சாதனைகளைப் பார்க்கும்போது இவர் யாரையும் பின்பற்றாமல் தன்னுடைய வழியிலேயே செல்வதாகத் தோன்றுகிறது.

யார் இந்த லேய் ஜுன்:

தொழில்நுட்ப உலகில் லேய் ஜுன் 1992 ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்தார். "கிங்சாப்ட் கார்ப்" என்பது அவர் பணிக்கு சேர்ந்த நிறுவனத்தின் பெயர்.

பெய்ஜிங்கில் இருந்த அந்த நிறுவனம் அப்போது மோசமான நிலையின் இருந்தது. லேய் 1998 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்த பின் அந்த நிறுவனத்தின் தலைஎழுத்து மாறத் தொடங்கியது. நிறுவனத்தின் மிகப் பெரிய மாற்றங்களை இவர் ஏற்படுத்தினார்.

 

மிகப்பெரிய மாற்றம்

வோர்ட் பிராசசர்களைத் தயாரித்த இந்த நிறுவனத்தைக் கம்ப்யூட்டர் கேம் மற்றும் கணினி பாதுகாப்பு சம்பந்தப்பட மென்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமாக மாற்றினார்.

சியோமியின் துவக்கம்

2007 ம் ஆண்டு, கிங்சாப்ட் கார்ப் ஹாங்காங் பங்குச்சந்தையில் விற்பனையைத் தொடங்கியபோது அதன் பங்குகள் 100 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையானது.

2010ம் ஆண்டு லேய் ஜுன் கிங்சாப்ட் கார்ப்பிலிருந்து விலகி சியோமி நிறுவனத்தைத் தொடங்கினார்.

 

ஸ்மார்ட்போன் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள்

சியோமி நிறுவனத்தைத் தொடங்கிய பின் கூகிளின் முன்னாள் நிர்வாகியான லேய் பின் உட்படப் பல பங்குதாரர்களுடன் இணைந்து ஸ்மார்ட்போன் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டார்.

சந்தையில் போட்டி

உலகச் சந்தையில் ஸ்மார்ட்போன் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களின் விற்ரனை கொடிகட்டி பறக்கும் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுடன் போட்டி போட சரியான உக்தியை கையாண்டது சியோமி.

புதிய ஐடியா

விற்பனையைப் பொறுத்தவரை ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களை விட மாறுபட்ட முறையில் சியோமி செயல்பட்டது.

அதாவது போன்களைக் கடையில் நேரடியாக விற்காமல் சியோமி நிறுவனம் இணையத்தில் விற்பனையைத் தொடங்கியது. சமூக வலைத்தளங்கள் மூலம் வாடிக்கையாளர்களிடம் பொருட்களை நேரடியாகக் கொண்டு சென்றது.

இதன் மூலம் பெரிய அளவில் செலவு குறைந்தது மட்டுமில்லாமல் சீனாவின் குறிப்பிடத்தக்க அளவில் சந்தை மதிப்பைப் பெற முடிந்தது. 2014ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 46 பில்லியன் டாலர்கள். இந்தக் கணக்கின்படி உலகத்தின் மிகப் பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனம் இதுவே.

 

சியோமியின் எதிர்காலத் திட்டம்

சியோமி ஸ்மார்ட்போன் தயாரிப்பில் புகழ் பெற்று விளங்கினாலும் ஜுன், சியோமி ஸ்மார்ட்போன் நிறுவனம் என்று கருதப்படாமல் இணைய நிறுவனம் என்றே கருதப்பட வேண்டும் என்கிறார்.

ஒரு பேட்டியில் ஜுன், "சியோமி எல்லாருக்கும் பயன் அளிக்கும் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்யும். வாழ்க்கை முறையைச் சிறப்பாக்கும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதே எங்கள் நோக்கம்" என்கிறார். அவர் கூறியது போலவே சீனாவில் இணையம் மற்றும் புது வித தயாரிப்புகளை உருவாக்குவதில் சியோமி முன்னணியில் உள்ளது.

 

சிம்பிள் லாஜிக்

"குறைந்த தயாரிப்புகளை உருவாக்குவதன் மூலம் நாம் அவற்றைச் சிறப்பான முறையில் செய்ய முடியும் என்கிறார். அதே நேரத்தில் குறைந்த தயாரிப்புகளை அதிக அளவில் உருவாக்கும்போது மற்ற நிறுவனங்களின் உதவி தேவைப்படும்" என்கிறார் ஜூன்.

இதனாலேயே சியோமி அதிக அளவில் மற்ற நிறுவனங்களில் முதலீடு செய்து புதிய பொருட்களை உற்பத்தி செய்கிறது.

 

எண்ணத்தை மாற்றியது.

இந்த வழிமுறை சீனப் பொருட்களின் தரம் குறித்த எண்ணத்தை மாற்ற உதவுகிறது. சியோமி தவிர மற்ற சில பொருட்களும் இந்தச் சீனப் பொருட்களின் தரம் குறித்த எண்ணத்தை மாற்றி வருகின்றது.
உதாரணமாக வீ சாட் என்னும் செயலி, வாட்ஸ்சப் போன்ற செயலிகளை விட அதிகச் சேவை வழங்குவதாக உள்ளது. விரைவில் சீனப் பொருட்களைப் பார்த்து மற்ற நாடுகளும் தனது பொருட்களைத் தயாரிக்கும் என்று ஜுன் நம்புகிறார்.

தொடர் விரிவாக்கம்

தற்போது சியோமி அதிகமான பொருட்களைத் தயாரித்து வருகிறது. மி(Mi) ஸ்மார்ட்போன்கள், MIUI கணினி இயக்க அமைப்பு, மி(Mi) ஸ்மார்ட் டிவி, மி(Mi) செட் டாப் பாக்ஸ், மி(Mi) மேக கணினி சேமிப்பு சேவை , மி டாக் தகவல் பகிர்வு செயலி, மி(Mi) பவர் பாங்குகள், மி(Mi) மானிடர்கள் ஆகியவை சியோமியின் சில தயாரிப்புகள்.

புதிய சந்தைகள்

மேலும் சியோமி தற்போது வளர்ந்து வரும் நாடுகளான இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில் மற்றும் இந்தியாவில் கால்பதித்துள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் ஒரே நாளில் அதிகப் போன்களை விற்பனை செய்து சாதனையும் படைத்தது.

ஸ்டீவ் ஜாப்ஸ்

சீனாவின் தொழில்நுட்ப புரட்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் லேய் ஜுன், மிக விரைவில் மேற்கத்திய நாடுகளின் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்களை விட உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்படுவார் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.

ஸ்டீவ் ஜாப்ஸ் இடத்தையும் பிடிக்கலாம்..??

 

வாயை பிளக்க வைத்த இந்தியர்

7 மாதத்தில் 50 பில்லியன் டாலர் சொத்து.. வல்லரசு நாடுகளை வாயை பிளக்க வைத்த இந்தியர்..!


 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Xiaomi: Leading the Chinese Entrepreneurship Revolution

Xiaomi: Leading the Chinese Entrepreneurship Revolution
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns