இந்திய நிறுவனமாக மாற ஆசைப்படும் ஜியோமி..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகிலேயே 5வது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாகத் திகழும் ஜியோமி, இந்திய நிறுவனமாக மாற ஆசைப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சில துவக்க நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்துள்ள ஜியோமி, நாட்டில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், இந்தியாவில் இருந்து பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது.

இதற்காக இந்தியாவில் இந்நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வுக்கூடம், உள்நாட்டு உற்பத்தி தளம் போன்றவற்றை அமைக்கவும் ஆர்வாமாக உள்ளது. இவற்றை 2020ஆம் வருடத்திற்குள் செயல்படுத்தவும் ஜியோமிதிட்டமிட்டுள்ளது.

ஜியோமி

ஜியோமி

2015ஆம் ஆண்டில் ஜியோமி நிறுவனத்தின் முக்கியச் சந்தையாக இந்தியா உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வுக்கூடம், ஸ்மார்ட்ரபோன் உற்பத்தி தளம், டேட்டாசென்டர் ஆகியவற்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகஇயக்குனர் லீ ஜூன் தெரிவித்தார்.

 

லீ ஜூன்

லீ ஜூன்

15 வருடத்திற்குப் பின், இந்தியாவிற்கு ஒரு வார சுற்றுப்பயணமாக வந்துள்ளார் லீ ஜூன் (45). இவருடன் இந்நிறுவனத்தின் துணை தலைவரான பின் லின், இந்தியாவில் முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள், துவக்க நிறுவனங்கள்,வாடிக்கையாளர், சில்லறை வர்த்தகக் கூட்டணி நிறுவனங்களைச் சந்தித்தனர்.

புதிய அறிமுகம்

புதிய அறிமுகம்

இந்தச் சுற்றுப்பயணத்தில் லீ ஜூன் மும்பை மற்றும் டெல்லியில் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்.

மேலும் ஜியோமி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான எம்ஐ-4ஐ ஸ்மார்ட்போனை அவர் வெளியிட்டார். சீனாவிற்கு வெளியேமுதல் முறையாக அறிமுகம் செய்யப்படும் தயாரிப்பு இந்த எம்ஐ-4ஐ.

 

13.5 பில்லியன் டாலர்

13.5 பில்லியன் டாலர்

உலகப் பணக்கார்ரகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இவருக்கு 13.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். இவர் ஜியோமி நிறுவனத்தை 2010ஆம் ஆண்டு துவங்கினார்.

இந் நிறுவனத்தைத் துவங்கி சில ஆண்டுகளில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்த சாம்சாங் நிறுவனத்தை விற்பனையைச் சீனாவில் 60 சதவீதம் வரை குறைத்துள்ளது ஜியோமி தயாரிப்புகள்.

 

ஆப்பிள் தாக்கம்

ஆப்பிள் தாக்கம்

ஜியோமி நிறுவனத்தின் நிறுவனரான லீ ஜூன்-க்கு, ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் மிகவும்பிடித்தவர் மற்றும் வழிகாட்டியாகவும் திகழ்வதாக அவர் கூறியுள்ளர்.

இதன் காரணமாகவே இந்நிறுவனத்தின் தயாரிப்பு அனைத்திலும் ஆப்பிள் நிறுவனத்தின் சாயல் தென்படுகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Xiaomi wants to be an Indian company

Xiaomi, the world's fifth-largest smartphone maker, wants to become an "Indian company" as it looks to invest in a startup, set up an R&D centre, begin local manufacturing and emerge India's No 1 handset player by 2020.
Story first published: Saturday, April 25, 2015, 15:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X