யாஹூ.காம்-ஐ நீங்களும் வாங்கலாம்..! இனி யாஹூ இல்லை..! விரைவில் பெயரும் மாற்றப்படும்..!

யஹூ நிறுவனத்தை 4.8 பில்லியன் டாலர் விலை கொடுத்து 2016 ஜூலை மாதம் வெரிசான் நிறுவனம் வாங்கியது. வெரிசான் அமெரிக்காவில் கம்பியில்லா தகவல்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமாகும்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இணையம் என்றால் முதலில் யாஹூ என்ற கதை மாறி இன்று கூகுள், ஃபேஸ்புக் போன்றவை வந்து விட்டன. ஒரு காலத்தில் அதாவது 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 125 பில்லியன் டாலர்களாக இருந்து யாஹூவின் சகாப்தம் விரைவில் முடிகின்றது என்றும் அல்டாபா இன்க் என்று பெயர் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

யஹூ நிறுவனத்தை 4.8 பில்லியன் டாலர் விலை கொடுத்து 2016 ஜூலை மாதம் வெரிசோன் நிறுவனம் வாங்கியது. வெரிசோன் அமெரிக்காவில் கம்பியில்லா தகவல்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமாகும்.

மரிசா மேயர் வெளியேற்றப்படலாம்

மரிசா மேயர் வெளியேற்றப்படலாம்

யாஹூ நிறுவனத்தின் 11 பேர் கொண்ட உறுப்பினர் குழுவில் இருந்து மரிசா மேயர் வெளியேற்றப்படலாம் என்றும் இவருடன் சேர்த்து மேலும் 5 இயக்குநர்கள் வெளியேற்றப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

வீழ்ச்சி

வீழ்ச்சி

2012-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இருந்து மரிசா மேயர் வெளியேறி யாஹூ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியை ஏற்றார். நிறுவனத்தின் வளர்ச்சிக்காக இவரது பணிகள் உதவும் என்று எதிர்பார்த்தது மிகப் பெரிய தோல்வியையே சந்தித்தது.

நட்டம்

நட்டம்

2016-ம் ஆண்டு துவக்கத்தில் 4.4 பில்லியன் டாலர்கள் நட்டத்தில் இருந்தது. இதில் மிகப் பெரிய பங்கு டம்பளர் நிறுவனத்தை 2013-ம் ஆண்டு 1.1 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது ஆகும்.

தரவு களவாடல்

தரவு களவாடல்

ஐடி உலகில் மிகப் பெரிய தரவு திருட்டாக பார்க்கப்படுகின்றது யாஹூ நிறுவனத்தின் 2013-ம் ஆண்டு ஒரு பில்லியன் கணக்குகளின் விவரங்கள் களவாடப்பட்டது. அப்போது மேலும் தரவுகள் திருடப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் 2014-ம் ஆண்டு இரண்டு மடங்கு வரை தரவு திருடப்பட்டு இருக்கிறது என்று யாஹூ நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதற்கு அரசுக்கு எதிராக ஹேக்கற்கள் திருட முயன்றதே காரணம் என்று சப்பைகட்டு கட்டியது யாஹூ.

யாஹூவிடம் மிச்ச மீதி என்ன உள்ளது

யாஹூவிடம் மிச்ச மீதி என்ன உள்ளது

சீனாவின் அலிபாபா நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள 41 பில்லியன் டாலரும், யாஹூ ஜப்பானில் உள்ள 35.5 சதவீத பங்கு மட்டும் தான் யாஹூவிடம் உள்ளது.

இந்தச் சொத்துக்களும் ஆல்டபா நிறுவனத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக இருக்கும், மீதம் இருக்கும் யாஹூவின் சொத்துக்கள் அனைத்தும் வெரிசோன் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

 

எதற்காக இந்தப் பெயர் மாற்றம்

எதற்காக இந்தப் பெயர் மாற்றம்

புதிய பெயர் மாற்றத்திற்குக் காரணம் அலிபாபாவும் ஒரு மாற்றமும் தான் என்றும் கூறப்படுகின்றது. இந்த ஆல்பாபா என்ற பெயர் மாற்றத்திற்கு அலிபாபாவின் மாற்றுப் பங்காக அல்டாபா கருதப்படலாம் என்றும் அலிபாபாவில் யாஹூவின் கணிசமான பங்கு இருப்பதும் தான் காரணம் என்றும் கூறப்படுகின்றது.

வெரிசோனுக்கு நன்மை

வெரிசோனுக்கு நன்மை

யாஹூவை வெரிசோன் கைப்பற்றியதன் மூலம் டிஜிட்டல் விளம்பர உலகில் மேலும் அடுத்தக் காட்டத்தை எட்டும். மேலும் யாஹூவின் சொத்துக்களை வெரிசோன் ஏஓல் பிரிவுடன் இணைக்கும் போது மேலும் வளர்ச்சி பெறும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Yahoo as we know is no more; CEO Marissa Mayer to step down

Yahoo as we know is no more; CEO Marissa Mayer to step down
Story first published: Wednesday, January 11, 2017, 18:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X