60 நாட்களில் 300 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய யாஹூ முடிவு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சான் பிரான்சிஸ்கோ: உலகச் சந்தையில் மென்பொருள் மற்றும் தேடல் தளத்தில் முன்னணி நிறுவனமாகத் திகழும் யாஹூ, கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து வர்த்தகம் மற்றும் வருவாய் சரிவை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் நிறுவனத்தின் நிதிநிலையைச் சரி செய்ய யாஹூ நிறுவனத்தில் சுமார் 1,500 ஊழியர்கள் பணிநீக்க செய்யப்படுவதாகப் பிப்ரவரி மாத துவக்கத்தில் இந்நிறுவனம் தெரிவித்தது.

தற்போது இந்தப் பணிநீக்க நடவடிக்கையில் ஏப்ரல் 18ஆம் தேதிக்குள் 300 பேரை நிறுவனத்தை விட்டு வெளியேற்ற யாஹூ திட்டமிட்டுள்ளதாகச் சான் பிரான்சிஸ்கோ பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 18

ஏப்ரல் 18

1,500 ஊழியர்களி பணிநீக்க நடவடிக்கையில் 300 பேரை வருகிற ஏப்ரல் 18ஆம் தேதிக்குள் வெளியேற்ற உள்ளோம் என யாஹூ தெரிவித்துள்ளது.

இதில் யாஹூ தலைமையகமான கலிபோர்னியா சன்னிவேலி, அலுவலகத்தில் 128 ஊழியர்கள், சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் 46 ஊழியர்கள், டாஸ் ஏஞ்சல்ஸ் அலுவலகத்தில் 60 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது யாஹூ.

பர்பாங்க் அலுவலகம்

பர்பாங்க் அலுவலகம்

அதுமட்டும் அல்லாமல் கலிபோர்னியாவில் உள்ள பர்பாங்க் அலுவலகத்தை முழுமையாக மூடவும் யாஹூ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இங்குப் பணியாற்றி வரும் சுமார் 90 ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட உள்ளனர்.

இன்ஜினியரிங் மற்றும் ஆராய்ச்சி

இன்ஜினியரிங் மற்றும் ஆராய்ச்சி

இந்தப் பணிநீக்க நடவடிக்கையில் யாஹூ நிறுவனத்தின் இன்ஜினியரிங் மற்றும் ஆராய்ச்சி பிரிவில் பணிபுரியும் ஊழியர்களும் அதிகளவில் பாதிக்கப்பட உள்ளனர் எனச் சான் பிரான்சிஸ்கோ பத்திரிக்கை தெகரிவித்துள்ளது.

வர்த்தகச் சுருக்கம்

வர்த்தகச் சுருக்கம்

யாஹூ நிறுவனத்தின் வருவாய் மற்றும் வர்த்தக ஸ்திர தன்மையை அதிகரிக்க நஷ்டத்தை அளிக்கும் வர்த்தகப் பிரிவுகளான டிஜிட்டல் மேகசின் பிரவை முழுமையாக மூடத் திட்டமிடப்பட்டுள்ளதாக யாஹூ நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

மேலும் யாஹூவின் காப்புரிமைகள், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சிலவற்றை 1 பில்லியன் முதல் 3 பில்லியன் டாலர் வரை விற்கத் திட்டமிட்டுள்ளார் மேயர்.

 

மரிஸ்ஸா மேயரை

மரிஸ்ஸா மேயரை

யாஹூ நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகேவ சிறப்பாகச் செயல்படவில்லை. இந்நிலையில் யாஹூ நிறுவனத்தின் சிஇஓ-வான மரிஸ்ஸா மேயரை பணிநீக்கம் செய்யுமாறு பங்குதாரர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் 1,800 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள்.

400 மில்லியன் டாலர்

400 மில்லியன் டாலர்

யாஹூ நிறுவனத்தில் செய்யப்படும் இந்தப் பணிநீக்கத்தின் மூலம் வருடத்திற்கு 400 மில்லியன் டாலரைச் சேமிக்க முடியும் என யாஹூ தெரிவித்துள்ளது.

கேம்ஸ், டிவி, மேலும் சில

கேம்ஸ், டிவி, மேலும் சில

மரிஸ்ஸா மேயர் யாஹூ நிறுவன சிஇஓவாகப் பொறுப்பேற்ற பிறகு துவங்கப்பட்ட யாஹூ கேம்ஸ், யாஹூ டிவி, டிஜிட்டல் பத்திரிக்கைகள் ஆகியவைற்றும் விற்பனை செய்யப்பட உள்ளது.

40 நிறுவனங்கள்

40 நிறுவனங்கள்

மரிஸ்ஸா மேயரின் பணிக்காலத்தில் சுமார் 3 பில்லியன் டாலர் செலவில் உலக நாடுகளில் சுமார் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களை வாங்கி நிறுவனத்தை வலிமைப்படுத்தியும், வர்த்தகமும், வருவாயும் உயரவில்லை என்பது தான் வருத்தமான செய்தி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Yahoo to cut more than 300 jobs: Report

Yahoo Inc on Wednesday said it would cut more than 300 jobs by April 18, as part of 1,500 layoffs announced earlier, San Francisco Chronicle reported.
Story first published: Thursday, February 18, 2016, 12:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X