ஆப்பிள் நிறுவனம் நஷ்டத்தில் இருக்கிறது, உறக்கச் சொன்ன apple இயக்குநர்

By Gowthaman Mj
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஆம், கன்னாபின்னா கடன். apple நிறுவனத்தின் தினப்படி செலவுகளுக்குக் கூட காசு இல்லை. இன்னும் சில் மாதங்களுக்கு கம்பெனிக்கு நல்ல பூட்டை வாங்கித் தொங்கவிட வேண்டியது தான். இது தான் 1997-ல் இருந்த நிலை.

  உள்ளே வந்த ஜாப்ஸ் முழுமையாக நிலையை புரிந்து கொண்டார். பணம் இல்லை என்றால் நிச்சயம் சங்கு தான் என்பதை உணர்ந்தார். வங்கிகள் ஆப்பிள் என்றாலே தெறித்து ஓடுகின்றன. தனியார் நிறுவனங்கள் தயங்குகின்றன. யாரிடம் கேட்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே.. பில் கேட்ஸ் அழைக்கிறார்.

  ஜாப்ஸின் முதல் வெற்றி

  1997. தன் எதிரி, தன் கண்டுபிடிப்புகளை திருடும் திருடன் என்று தாறுமாறாக அமெரிக்க நீதி மன்றங்களில் வழக்கு தொடுத்திருந்த மைக்ரோசாஃப்ட் உடன் பேச வேண்டி இருந்தது. பேச்சு வார்த்தை சக்சஸ். 150 மில்லியன் டாலர் முதலீடு செய்ய மைக்ரோசாஃப்டை முன் வருகிறது. காலம்... எல்லாம் நேரம்.

  ராஜ தந்திரி பில் கேட்ஸ்:

  எல்லாம் ஓகே, ஆனால் சில கண்டீஷன் என்று இழுக்கிறார் கேட்ஸ். "எங்கள் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், ஆப்பிள் கம்யூட்டர்களில் டீஃபால்ட் பிரவுஸராக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இருக்க வேண்டும், மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸை உங்கள் ஆப்பிள் கம்யூட்டர்களோடு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குக் கொடுக்க வேண்டும். எங்கள் நிறுவனத்தின் மீது நீங்கள் தொடுத்திருக்கும் சில வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்" சம்மதமா என்று கேட்ஸ் கேட்கிறார்.

  தலை வணங்கிய ஆப்பிள்

  "இந்த இரண்டு விஷயத்தால், இவர்கள் நம்மை விட வளர்ந்து வந்து விடுவார்களா...? முதலீடு இருக்கட்டும், எப்படியும் என் அப்ளிகேஷன்களை விட, இவனுடைய அப்ளிகேஷன்கள் சுமார் தான்.. தைரியமாக ஒப்புக் கொள்வோம்" என சம்மதித்தார் ஜாப்ஸ். காசும் வந்தது.

  இனி லைவ் ரிலே

  ஆகஸ்ட் 06, 1997, மேக்வோர்ல்ட் எக்ஸ்போ பாஸ்டன் கூட்டத்தில் சம்பிரதாயங்கள் முடிந்து ஜாப்ஸ் பேச அழைக்கிறார்கள். வீடியோவில் 5.30-ல் இருந்து.

  37 நொடி ஆராவாரம்

  அரங்கம் அதிர்கிறது. கத்தல்கள், கூப்பாடுகள், வாழ்த்துக்கள் விண்ணைப் பிழக்கிறது. பல பேர் அதே இடத்தில் நின்று ஸ்டாண்டிங் ஓவேஷன்களையும் தந்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க கலாச்சாரத்தைப் பொறுத்தவரை 8 - 12 நொடிகள் தான் பாராட்டுக்கள் எல்லாம். இது ஒரு விதமான Etiquette. ஆனால் ஜாப்ஸுக்கு இந்த etiquette எல்லாம் பொருந்தவில்லை.

  யார் இல்லை ஆப்பிளில்

  இன்றைய தேதிக்கு உலகின் தலை சிறந்த அறிவுகள் ஆப்பிளில் வெகு சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள். ஆனால் தவறாக. இதெல்லாம் தெளிவான எதிர்கால திட்டம் இல்லாததால் வரும் பிரச்னைகள்.

  அந்த 3 அட்வைஸ்:

  "Apple has become irrelevant"
  "Apple can't execute anything"
  "Apple's culture is anarchy, you can't manage it" இதை நாம் ஏற்க வேண்டுமா...?

  Apple's culture is anarchy, you can't manage it

  anarchy - ஒரு ஒழுங்கற்ற தன்மை. ஆப்பிளின் சிறந்த மூலைகளுக்கு ஒரு நல்ல ஸ்ட்ராட்டஜியை காத்திருந்து, எதிர் வரும் பிரச்னைகளை சரி செய்து வெற்றி காணத் தெரியவில்லையே தவிர மற்ற எல்லாம் சூப்பர் தான். ஆக இந்த அட்வைஸை என்னால் ஏற்க முடியவில்லை. அரங்கம் மீண்டும் ஆர்பரிக்கிறது.

  என்ன பிரச்னை:

  1997-ல் ஆப்பிள் ஒரு கம்யூட்டர் நிறுவனம், கணிணிகளை தயாரிப்பது, அதற்கான மென்பொருளை தயாரிப்பது மட்டுமே அதன் பணி. இன்று இருப்பது போலவே அன்றும் ஆப்பிள் பொருட்களுக்கு என்று தனி மரியாதை இருந்தது, ஆனால் சந்தை இல்லை.

  மார்ஜின் ஓகே, சேல்ஸ் கம்மி

  ஒரு கம்யூட்டரை விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் ஆனால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்க முடிந்தது. அது மட்டும் இன்றி அப்போது தான், உலக அளவில் கணிணிகள் அறிமுகமாகி கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கி இருந்ததும் ஒரு காரணம்.

  90% விண்டோஸ்

  நம்மவர்களும் அப்பிள், ஆரஞ்சு எல்லாம் வேணாம்யா, பேசாம ஒரு சிஸ்டத்த வாங்கி விண்டோஸ இன்ஸ்டால் பண்ணிடலாம் என்றே ஓடினார். விளைவு மொத்த ஓஎஸ் சந்தையில் 90%க்கு மேல் மைக்ரோசாஃப்டிடம்.

  95% அப்ளிகேஷன்கள் விண்டோஸுக்கே

  ஏன்...? ஒரு சாஃப்ட்வேர் டெவலப்பர் 100 ரூபாய் செலவழித்து விண்டோஸுக்கு கோடிங் எழுதி 90% கம்யூட்டர் யூசர்களைச் சென்றடைவதா...? அல்லது 200 ரூபாய் செலவழித்து ஆப்பிளின் மேக் ஓஎஸ்-க்கு கோடிங் எழுதி வெறும் 10% யூசர்களை சென்றடைவதா என்கிற லாஜிக் தான் பல டெவலெப்பர்களையும் விண்டோஸ் பக்கம் திருப்பியது.

  இது தான் செய்யப் போறேன்

  இயக்குநர் குழுவில் மாற்றம், நமக்கு சரியான துறைகளில் மட்டும் எக்ஸ்ட்ரா கவனம் செலுத்துவது, நம் முக்கிய சொத்துக்களில் கூடுதல் முதலீடு செய்வது, திறமையான பார்ட்னரை தேடிப்பிடிப்பது, புதிய பொருட்களை கண்டுபிடித்து சந்தைப்படுத்துவது.

  இயக்குநர் குழு

  ஒவ்வொரு இயக்குநரையும் அறிமுகப்படுத்திவிட்டு இறுதியாக தானும் இயக்குநர் குழுவில் ஒருவர் என்று சொல்லும் போது மீண்டும் ஒரு18 நொடி சந்தோஷம் பீறிடுகிறது.

  "Apple has become irrelevant"

  ஆப்பிளின் மொத்த சந்தை உலக அளவில் எவ்வளவு தெரியுமா...? 7 சதவிகிதம்.

  சரி இந்த ஏழு சதவிகிதத்தில் எதில் எல்லாம் நாம் முதலிடத்தில் இருக்கிறோம் தெரியுமா...? க்ரியேட்டிவ் கன்டென்ட், டிசைன், எஜிகேஷன், பப்லிசிங், விளம்பரம், க்ராஃபிக் டிசைன்,ப்ரிண்டிங், ப்ரீ ப்ரெஸ்.... இப்படி க்ரியேட்டிவ் ப்ரொஃபெஷனல்கள் அதிகம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்.... ஆப்பிள்.

  அதோடு எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய இன்டர்நெட் வெப்சைட்களில் 64 சதவிகித வலைதளங்கள், ஆப்பிளில் வடிவமைக்கப்பட்டவைகள். “இந்த ரெலவென்ஸ் போதாதா, நாம் உலகத்தை ஆள" என்று முடிக்கும் முன் மீண்டும் கர கோஷம்.... ஆக இந்த அட்வைஸையும் ஏற்க முடியாது. அப்படியே கஸ்டமரை சுட்டிக் காட்டத் தொடங்கினார் ஜாப்ஸ்

  கஸ்டமர் 1

  10 - 15% ஆப்பிள் கம்யூட்டரை வாங்கியது ஒரே ஒரு அப்ளிகேஷனுக்காக. அது அடோப் ஃபோட்டோஷாப். கல்விக்காக பயன்படுத்தப்படும் கம்யூட்டர்களில் 60%க்கு மேல் ஆப்பிள். கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வைத்திரும் கம்ப்யூட்டர்களில் 64% ஆப்பிள். இப்படி ஒட்டுமொத்தமாக கல்வி மற்றும் அது சார்ந்தவர்கள் 2 - 2.5 பில்லியன் டாலர் வரை நமக்கு பிசினஸ் தருகிறார்கள்.

  கஸ்டமர் 2

  20 - 25 மில்லியன் ஆப்பிள் வாடிக்கையாளர்கள் இன்னமும் ஆப்பிள் தான் உலகின் தலைசிறந்த கம்ப்யூட்டர் என நம்புகிறார்கள். ஆனால் ஆப்பிளால் இப்போது உங்களுக்கு சிறப்பாக உதவ முடியவில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். வரும் நாட்களில் இந்த நிலை முழுமையாக மாறும் என்பதை மட்டும் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மோசமான கடந்த காலத்துக்கு ஒரு குட் பை சொல்லுவோம்.

  ஆப்பிளின் சொத்துக்கள்

  நீங்கள் தான் ஆப்பிளின் முதல் சொத்து. அந்த சொத்தை சம்பாதித்துக் கொடுத்த இரண்டு சொத்துக்கள் 1. ஆப்பிள் என்கிற பிராண்ட். 2. மேக் ஓஎஸ். சரி இந்த சொத்துக்களை ஒரு பக்கம் வையுங்கள். உலகின் தலை சிறந்த பிராண்டுகளில் எதெல்லாம் வரும்.... நைக், கோக கோலா, டிஸ்னி... இந்த வரிசையில் ஆப்பிளும் கட்டாயமாக எல்லோர் பட்டியலிலும் இருக்கும். நீங்கள் உலகில் யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். நிச்சயம் டாப் 5 பிராண்டுகளில் ஆப்பிளின் பெயர் நிச்சயம் இருக்கும்.

  சரிவிலும் சாதித்த ஆப்பிள்

  மேக் ஓஎஸ் 8. சமீபத்தில் வெளியான இந்த ஓஎஸ் 1.2 மில்லியன் கஸ்டமர்கள் வாங்கி இன்னும் நாங்கள் ஆப்பிளோடே இருக்கிறோம் என்பதை தெரிவித்திருக்கிறார்கள். இன்னும் இந்த எண்கள் கூடிக் கொண்டே இருக்கின்றன. ஆகையால் இந்த சந்தை கணிப்பு போன்ற மசாலாக்களை எல்லாம் ஒரு ஓரத்தில் எரிந்து விடுங்கள். நாம் செமத்தியான 1.5 பில்லியன் டாலர் சாட்வேர் சந்தையில் இருக்கிறோம். இங்கு நமக்கு ஒரு 20 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருக்கிறார் அவ்வளவு பெரிய இடத்தை நாம் பிடித்திருக்கிறோம். எனவே என்னால் "Apple has become irrelevant" என்பதை ஏற்க முடியாது என்றார். தட்ரா கைய என்று அக்கம் பக்கத்தில் இருந்தவனை எல்லாம் ஆர்பரித்துக் கொண்டு கைவலிக்க வலிக்க தட்டினார்கள்.

  இப்படி... எல்லாம் சூப்பராகத் தான் போய்க் கொண்டிருந்தது. அதிர்ச்சி கொடுக்கும் சில ஸ்லைடுகள் வரத் தொடங்குகின்றன.

   

  முதல் ஸ்லைட்

  "நாம் ஒரு முக்கியமான கூட்டாளியோடு கை கோர்க்க இருக்கிறோம்
  .....
  ....
  ...
  மைரோசாஃப்ட்"

  கூட்டத்தில் பலருக்கு வாய் வரவில்லை. அதெப்படி நம்ம எதிரி கூட சேர்ந்து நாம வியாபாரம் பண்றது, நம்மள முழுசா சொரண்டிடமாட்டானா? சலசலப்பு அடங்குவதற்குள் அடுத்த ஸ்லைட்

   

  இரண்டாவது ஸ்லைட்

  "இனி நம்ம மெகிண்டாஷ் ஓஎஸ்-ல் விண்டோஸின் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் டிஃபால்ட் ப்ரவுஸராக இருக்கும்"
  செத்தேவிட்டார்கள் கூட்டத்தினர்.
  "இருப்பினும் நம்மால் விரும்பிய ப்ரவுஸரை மாற்றிக் கொள்ள முடியும்" என்பதை தெரிவித்த பின் தான் கூட்டத்தில் இருந்து பேசவே ஆரம்பித்தார்கள்.

  அதே ஸ்லைடில்

  "மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் அப்ளிகேஷனை மெகிண்டாஷ் கம்யூட்டரோடு கொடுக்க இருக்கிறோம்" டேய் என்னடா சொல்றாரு இவரு என்கிற ரேஞ்சில் குழம்பிப் போனார்கள். என்ன நடக்கிறது என்றே புரியாமல் தவித்தார்கள் ஆப்பிள் ரசிகர்கள்.

  கடைசி ஸ்லைட்

  "மைக்ரோசாஃப்ட் 150 மில்லியன் டாலர் ஆப்பிளில் முதலீடு செய்திருக்கிறது" பிறகு தான் விஷயம் புரிய வர, டேய் செம ஆளுயா இவன்,
  எதிரி வெச்சே கடயத் தொறந்துட்டான்ல என ஷேர் ஹோல்டர்கள் எல்லாம் வாயைப் பிழந்து கைத் தட்டினார்கள்.

  ஆப்பிள் கூட்டத்தில் பில் கேட்ஸ்

  அநேகமாக முதலும் கடைசியுமாக ஒரு போட்டியாளரின் கூட்டத்தில், எதிரி நிறுவனத்தின் தலை பேசும் சம்பவம் ஆப்பிள் கூட்டத்தில் தான் நடந்திருக்கும். வீடியோ கான்ஃப்ரென்ஸ் மூலமாக பில் கேட்ஸ் அந்த கூட்டத்தில் தங்கள் பங்கு குறித்து பேசினார்.

  மைக்ரோசாஃப்டை ஜெயிக்க ஆப்பிள் வரல

  நாம ஜெயிக்க இந்த உலகமே இருக்கு, அத சாதிக்க சில விஷயங்கள நாம விடணும். அதுல மொத விஷயம் "ஆப்பிள் ஜெயிக்கணும், மைக்ரோசாஃப்ட் தொக்கணும் இல்ல மைக்ரோசாஃப்டை ஆப்பிள் ஜெயிக்கணும்ங்குற எண்ணம்". சரியா என்று சொல்ல, சும்மா தூள் கிளம்பியது ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்.

  இப்படி தன் முன் இருந்த அனைத்து சவால்களையும் பங்குதாரர்களுக்கும், பொது மக்களுக்கும், ப்ரஸ் மற்றும் மீடியாக்களுக்கும் வெட்ட வெளிச்சம் போட்டு பாசிட்டிவ்வாக் காட்டியதால் தான் அன்று ஆப்பிள் மீது மற்றவர்கள் வைத்திருந்த நம்பிக்கை அப்படியே இருந்தது. ஆங்கிலத்தில் restoring the faith என்று சொல்வார்கள். அதை ஜாப்ஸ் முதல் படியிலேயே செய்துவிட்டார். ஆகையினால் நம்பிக்கை இழக்கலாமா என்று இருந்தவர்கள் கூட, இந்த ஆளு ஏதோ செய்யுறான், எப்புடியும் கம்பெனி உருப்புடும் என்று நம்பிக்கையை கூட்டி பணமாக முதலீடு செய்தார்கள்.

  அன்று நம்பிக்கை கொடுத்த, அதே ஜாப்ஸ் தான் ஐபோன் வரை கொடுத்துவிட்டுப் போனார். இன்று ஆப்பிள் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரே வார்த்தை. அப்படி அந்த நிறுவனத்தை வெறி கொண்டு நேச்சித்தவன் 1997 பாஸ்டன் மேக்வோர்ல்ட் எக்ஸோவில் பேசியதைக் காண:

   

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  Yes, apple is in loss, apple company said it loud

  Yes, apple is in loss, apple company said it loud
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?

  Find IFSC

  Get Latest News alerts from Tamil Goodreturns

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more