முகப்பு  »  Calculators  »  ஈஎம்ஐ கால்குலேட்டர்  »  Car Loan EMI Calculator

Car Loan EMI Calculator


தனிநபர் கடனிகளிள் ஒரு வகையில் இந்த வாகனகடனும் அடங்குகிறது. வாகன கடன் மூலம் பைக், கார் என அனைத்து வகையான வாகனங்களையும் வாங்க முடியும். அதிலும் குறிப்பாக நிதி நிறுவனங்கள் கடன் பெறுபவருக்கு வாகனம் வாங்க பணம் தருவர். பின்னர் கடனை பெறுபவர் கடன் மற்றும் வட்டியைச் சேர்த்து மாதாந்திர தவணையாகக் கடனை முழுவதும் முடிக்கும் வரை செலுத்த வேண்டும்.

Loan Amount

|
0
|
0
|
0
|
0
|
0
one crore twenty five lakh twenty one thousand

Loan Tenure

MoYr
|
0
|
0
|
0
|
0
|
0

Interest Rate

|
0
|
0
|
0
|
0
|
0
Break-up of Total Payments

பெரும்பாலும் தனிநபர் கடன்கள் பாதுகாப்பற்றதாக தான் உள்ளன. ஏனெனில் இது முழுவதும் கடன் பெறுபவரின் நம்பகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அடமானம்/உத்திரவாதம் போன்றவை இதில் இல்லை. ஆனால் வாகனக்கடன் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, உத்திரவாதமாக வாகனம் இருப்பதால் இது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. எனவே கடன் பெறுபவர் அதை முறையாகத் திரும்ப செலுத்தத் தவறும் போது, வாகனத்தை ஜப்தி செய்து அதனை விற்று வரும் பணத்தின் மூலம் மீதமுள்ள கடன் அடைக்கப்படும்.

சூப்பர் பைக்கை வாங்க வேண்டுமா? இருக்கவே இருக்கு சூப்பர் பைக் கடன்..!

நீங்கள் ஒரு பைக் ப்ரியரா? ஹார்லே டேவிட்சன், ட்ரம்ப் போன்ற சூப்பர் பைக்குகளை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்று எப்பொழுதாவது கனவு கண்டிருக்கிறீர்களா? சூப்பர் பைக் என்பது உண்மையில், இந்திய மக்கள் பலரும் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள விரும்பும் ஒரு பொருளாக உள்ளது.


இந்தியாவின் தனியார் பிரிவு வங்கியான ஆக்சிஸ் வங்கி, இந்த ஆண்டு ஜூலையில் 500 சிசி மற்றும் அதற்கும் மேலான பைக்குகளுக்கு சூப்பர் பைக் கடன் வழங்கும் திட்டத்தை நிறுவி அறிவித்துள்ளது.

நன்மைகள்

வங்கியின் இந்த கடன் வழங்கும் திட்டம் பைக்கின் விலையில் 95% வரை மதிப்பீட்டு விகிதத்தில் கடன் வழங்கும். இதில் அவர்களுடைய சொந்த எச்என்ஐ வாடிக்கையாளர்களுக்கு உபரி பாகங்களுக்கான சிறப்பு சலுகைகள் மற்றும் திட்டங்களைக் கொண்ட நிதியளிப்பு ஆகியவையும் அடங்கும்.

தகுதி

பின்வரும் நபர்கள் சூப்பர் பைக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதியுடைவர்கள்:

1. சம்பளம் வாங்கும் அல்லது சுய வேலைவாய்ப்பைக் கொண்ட தனிநபர்கள்.

2. கடனுக்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பிய மற்றும் கடன் காலத்தின் இறுதியில் 58 வயதிற்கு அதிகமாக இல்லாத தனிநபர்கள்.

3. கொடுக்கப்பட்டக் குடியிருப்பில் குறைந்தபட்சம் ஒரு வருடமாக குடியிருக்கும் தனிநபர்கள்.

4. குறைந்தபட்சம் 2 வருடங்களாக வேலைப் பார்த்து வருபவர்கள்.

நிதியுதவி கிடைக்குமா?

கடன் வாங்குபவருக்கு வாகனத்தின் சாலை விலையில் 85% வரை கடன் கிடைக்கும். மேலும் அவர் / அவள் விலை விவரப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள உபரி பாகங்களுக்கு 8% வரை கூடுதல் கடனைப் பெறலாம்.தேவைப்படும் ஆவணங்கள் சூப்பர் பைக் கடனை விண்ணப்பிப்பதற்கு வங்கியின் சமீபத்திய மூன்று மாத கணக்கு அறிக்கைக் கட்டாயமாகும். இதைத் தவிர்த்து சம்பளம் வாங்கும் நபர்கள் பின்வரும் ஆவணங்களை முகவரி மற்றும் அடையாளச் சான்றாக சமர்பிக்க வேண்டியது அவசியமாகும்.

ஃபாஸ்போர்ட் ஓட்டுனர் உரிமம் வாக்காளர் அடையாளச் சான்று ஆதார் அட்டை பான்கார்டு வேறு ஏதேனும் ஆவணங்கள் சமீபத்திய சம்பள ரசீது சமீபத்திய படிவம் 16 போதும்.

சுய வேலை செய்பவர்கள்

சுயவேலைவாய்ப்புச் செய்யும் நபர்கள் பின்வரும் ஆவணங்களை சமர்பிக்க வேண்டியது அவசியமாகும். தொலைபேசி கட்டண ரசீது மின்சாரக் கட்டண ரசீது கடை மற்றும் நிறுவனச் சட்டச் சான்றிதழ் எஸ்எஸ்ஐ அல்லது எம்எஸ்எம்ஈ பதிவுச் சான்றிதழ் விற்பனைவரி அல்லது மதிப்புக் கூட்டப்பட்ட வரி சான்றிதழ் தற்போதைய வங்கிக் கணக்கு அறிக்கை சமீபத்திய வருமான வரி தாக்கல்

முழு கடன் தொகையை முன்கூட்டிச் செலுத்துதல்

கடன் பெற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு நீங்கள் எந்த நேரத்திலும் பெயரளவுக் கட்டணத்தில் கடனை முன்கூட்டிச் செலுத்தி விடலாம். கடனை முன்கூட்டிச் செலுத்துவதற்கு பணமாகச் செலுத்துவதை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதை குறிப்பிட வேண்டியது முக்கியமானதாகும். டிடி/எம்சி/காசோலைகள் மட்டுமே வங்கியால் ஏற்றுக் கொள்ளப்படும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X