முகப்பு  »  Calculators  »  ஈஎம்ஐ கால்குலேட்டர்  »  Home Loan EMI Calculator

Home Loan EMI Calculator

ஹோம் லோன் அல்லது வீட்டுக்கடன் என்பது, வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடம் இருந்து தனிநபர்கள் குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் கடன் பெற்று அதை மாதாந்திர தவணை தொகையாகத் திரும்பச் செலுத்த வேண்டும். இவ்வகைக் கடனுக்கு அந்தச் சொத்தை உத்திரவாதமாக நிதி நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளும்.

* அந்தச் சொத்துத் தனிப்பட்ட அல்லது வர்த்தக ரீதியானதாக இருக்கலாம்.

*கடன் பெற்றவர் தவணை தொகையைத் திரும்பச் செலுத்த முடியாத போத, கடன் தந்த நிறுவனம் மீதமுள்ள தொகையை வசூலிக்கச் சட்டப்படி அந்தச் சொத்தை விற்கலாம்.

Loan Amount

|
0
|
0
|
0
|
0
|
0
one crore twenty five lakh twenty one thousand

Loan Tenure

MoYr
|
0
|
0
|
0
|
0
|
0

Interest Rate

|
0
|
0
|
0
|
0
|
0
Break-up of Total Payments

குறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற சூப்பரான வாய்ப்பு..!

வாடிக்கையாளர்களின் வங்கியியல் நன்னடத்தைக்கு வங்கிகள் வெகுமதி அளிக்கத் துவங்கிவிட்டன.

பாங்க் ஆப் இந்தியா மற்றும் பாங்க் ஆ பரோடா வங்கிகள் ஏற்கனவே இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில், கடந்த செவ்வாயன்று ஐடிபிஐ வங்கியும் நல்ல வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி வழங்கும் விதமாக, அவர்களின் சிபில்/கிரிடிட் ஸ்கோரை பொறுத்து வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயிக்கப்போவதாக அறிவித்துள்ளன.

பலன்கள் அறுவடை

காரட் மற்றும் குச்சி கொள்கையின் அடிப்படையில் தான் பெரும்பாலான கடன் வட்டிகள் அமைகின்றன. இதில் நல்ல வாடிக்கையாளர்கள் அனைத்துப் பலன்களையும் அறுவடை செய்யலாம். மற்றவர்கள் களைந்தெறியப்படலாம் அல்லது அதிக வட்டி செலுத்த நேரலாம் என்கிறார் சிபில் சி.ஓ.ஓ ஹர்சாலா சான்டோர்கர்.

கடன் பணியகங்கள்

இந்தியாவில் உள்ள நான்கு கடன் பணியகங்களான (credit bureau) சிபில், இக்யூபேக்ஸ், எக்ஸ்பீரியான் மற்றும் சிஆர்ஐஎப் ஹைமார்க், பரவலாக எல்லாவற்றையும் கண்காணித்து, அனைத்து அடிப்படையிலும் ஆராய்ந்து, சரியான நேரத்தில் மின் கட்டணம் செலுத்துனீர்களா என்பது முதல் உங்களுக்குக் கல்லூரி படிக்கும் போது வாங்கித் தந்த இருசக்கர வாகனத்திற்கான தவணையைப் பெற்றோர் சரியாகச் செலுத்தினார்களா என்பது வரை,உங்கள் கடனுக்கான ஸ்கோரை பாதிக்க வைக்கின்றன.

தகவல் தொகுப்புகள்

கடந்த சில வருடங்களாக, வங்கியில்லா நிதி நிறுவனங்களும், சிறு நிதி நிறுவனங்களும் தங்களிடம் கடன் பெறுபவர்களின் தகவல்களைக் கடன் பணியகங்களுக்கு அனுப்புகின்றனர்.

அதனால் கடன் வழங்குபவர் மதிப்பீடு செய்ய ஏராளமான தகவல் தொகுப்புகள் உள்ளன. சிபில் தற்போது டிராயிடம் பேசி கைப்பேசி கட்டண தகவல்கள் மற்றும் பிற நிறுவன கட்டண விவரங்களைப் பெற முயல்வதால், இது மேலும் விரிவடையும்.

மதிப்பீடு


வாடிக்கையாளர் தரவுகளைச் சிபில் மதிப்பிடுவதற்கான ஒட்டுமொத்த காரணம், ஒரு கட்டத்தில் அதைப் பலன்களாக மாற்றுவது தான். பெருநிறுவனங்களின் கடன்கள் எப்போதும் மதிப்பீடு செய்யப்பட்டுப் பாதுகாப்பற்ற கடன், மாற்றக்கூடியவை AAA மற்றும் BB++ தரமதிப்பீடு தரப்படுகிறது. இதன் மூலம் அவர்களின் மதிப்பீடுகளை எளிதில் அறிந்துகொள்ளலாம்.

ஐடிபிஐ வங்கி

ஐடிபிஐ வங்கியை பொறுத்தவரை, சிபில் ஸ்கோர் 700ஐ விட அதிகமாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு 5-15 அடிப்படை புள்ளிகள்( 1 சதவீத புள்ளி= 100 அடிப்படை புள்ளி) மலிவாகக் கடன் வழங்கப்படுகிறது. கடன் நடத்தை மற்றம் திருப்பிச் செலுத்தும் வரலாறை பொறுத்துக் கிரிடிட் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்கும்.ஆகவே அதிக மதிப்பெண் இருந்தால், புதிய கடன் பெறும் வாய்ப்பும் அதிகம்.

பணி என்ன?


வாழ்வில் எப்போதோ செய்ய ஒரு விசயம் பின்னாளில் பாதிக்குமா என்பதைப் பற்றித் தெரியாமலேயே உள்ளனர். இந்தியாவில் தகவல்களைத் திரட்டவும் ஒருங்கிணைக்கவும் பயன்படும் வழிமுறைகள் மிகவும் மலிவானவை. மற்றம் பெரும்பாலான நேரங்களில், நிதி நிறுவனங்களின் தேவைக்கும் அதிகமான கூடுதல் தகவல்களைப் பகிருவதற்கு முன்பாக உங்கள் அனுமதியே தேவைப்படாது.

 இதைச் செய்தால் வீட்டுக் கடனுக்கான ஈ.எம்.ஐ செலுத்துவது ரொம்ப ஈசி..!

வீட்டுக்கடன் வாங்குவது என்பது மிகப்பெரிய பொறுப்பு. உங்கள் கனவு வீட்டை நனவாக்க, சேமிப்பை கரைக்காமல் நன்கு திட்டமிட்டு எடுத்துவைக்கும் சரியான அடி.

ஆனால் இதில் வட்டி கட்டுதல் என்னும் பெரிய சுமையை எப்படிச் சரியாகக் கையாண்டு குறைப்பது என்னும் மிக முக்கியமான விஷயத்தைப் பற்றியே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

ஈ.எம்.ஐ - யை திட்டமிடுதல்

சம்பளம் வரும் தினமாகப் பார்த்து உங்கள் ஈ.எம்.ஐ (மாதாந்திர தவணைத்தொகை) யை செலுத்துவதற்குத் திட்டமிடுங்கள். வீட்டு வாடகை போன்ற பிற நிரந்தர வருமானங்கள் வருகிறது என்றால், அந்தப் பணம் வரும் நாட்களாகப் பார்த்து உங்கள் ஈ.எம்.ஐ செலுத்தும் தேதியை நிர்ணயிக்கலாம்.

இவற்றை நன்கு திட்டமிடாவிட்டால், பணம் செலுத்தும் தேதியில் பணம் இல்லாமல் அவதிப்பட நேரிடும். மேலும் குறைப்பட்ச பணத்தை அவர்களாகவே எடுத்துக்கொள்வர். இது உங்கள் கிரிடிட் ஸ்கோரை கணக்கிடும் போது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். அதேநேரம் சரியான நேரத்தில் பணம் செலுத்துவது கிரிடிட் மதிப்பை உயர்த்தும்.

அதிகப்படியான ஈ.எம்.ஐ-யை செலுத்துவது

நீங்கள் செலுத்தும் தவணைத்தொகையை அதிகரிப்பதன் மூலம், தவணை காலத்தில் சில மாதம்/ஆண்டுகள் குறைக்கலாம். அதற்கேற்றாற் போல் உங்களுக்கு அதிக வருமானம் வரும் வகையில் பங்குகள் அல்லது இதர முதலீடுகளை மேம்படுத்துங்கள்.

மேலும் கடனில் ஒரு பகுதியை உங்களால் இயலும் போது செலுத்தலாம். உதாரணமாக, போனஸ் அல்லது பாலிசி முதிர்வின் மூலம் அதிகப் பணம் கிடைக்கும் போது கடனை முன்கூட்டியே அடைக்கலாம். இதுவும் உங்கள் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தைக் குறைக்கும்.

முதலீடுகளைச் சரியாக மேலாண்மை செய்தல்

கடனைத் திருப்பிச் செலுத்தும் விதமாக உங்களுக்கு நிரந்தரமான பண வருவாய்த் தேவைப்படும்.

உங்களின் சம்பளம் நிரந்தர வருவாயாக இருந்தாலும், அதை மட்டுமே நம்பியிருக்காமல் மற்ற வழிகளில் வருமானம் பெறுவதன் மூலம் கடன்/வட்டியை எளிதில் அடைக்கலாம். கூடுதல் வழியில் வருமானம் என்பது ஈ.எம்.ஐயை மட்டும் அடைப்பதற்கு உதவாமல், கடனைப் பகுதியாக அடைக்க உதவி செய்து சுமையைக் குறைக்கும்.

வங்கியை மாற்றுதல்

கடன் வழங்கும் வங்கிகள், வட்டி விகிதத்தை மாற்றும் கால அளவை வேறுபடுத்திக் காட்ட வெவ்வேறு காலத்தில் வட்டிவிகிதத்தைக் குறைப்பர். வட்டி விகிதம் குறைவாக இருப்பதாகத் தோன்றினால், வேறு வங்கிக்குக் கடனை மாற்றிக்கொள்ளலாம். 'பேலன்ஸ் டிரான்ஸ்வர் ஸ்கீம்' மூலம் வாடிக்கையாளர் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்குச் செலுத்தப்படாத வீட்டுக்கடனுடன் மாற்றிக்கொள்ளலாம்.

ஆனாலும், குறைந்த வட்டி விகிதத்திற்காக அடிக்கடி மாற்றம் செய்யாதீர்கள். ஏனெனில், இப்படி மாற்றம் செய்வதற்குக் கடன் பெறும் அனைத்து வழிமுறைகளையும் மீண்டும் பின்பற்ற வேண்டும். இதற்காகக் குறிப்பிட்ட அளவு கட்டணமும் வசூலிக்கப்படலாம்.

பல்வேறு வங்கிகள் அறிவிக்கும் புதிய திட்டங்களுக்கான வட்டி விகிதங்களைத் தொடர்ந்து கவனிக்கவேண்டும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X