முகப்பு  »  Calculators  »  ஈஎம்ஐ கால்குலேட்டர்

ஈஎம்ஐ கால்குலேட்டர்

சுருக்கமாக ஈ.எம்.ஐ என்று அழைக்கப்படும் சரிசம மாதாந்திர தவணை முறையில், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்டஅளவு பணத்தை வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்கு உங்கள் கடன் தொகையை முழுமையாகக் கட்டி முடிக்கும் வரைசெலுத்த வேண்டும். நீங்கள் திருப்பி செலுத்த வேண்டிய அசல் தொகையுடன் வட்டியும் சேர்த்தே இந்த ஈஎம்ஐ மூலம்வசூலிக்கப்படும். அசல் மற்றும் வட்டியைச் சேர்த்து உங்களுக்கு விருப்பமான கால அளவிற்கு ஏற்ப சரிசமமாகபிரிக்கப்படும். எவ்வளவு மாதங்கள் என தேர்வு செய்து பிரிக்கிறீர்களோ, அவ்வளவு மாதம் பணத்தை தொடர்ந்து திரும்பசெலுத்த வேண்டும். துவக்கத்தில் வட்டித் தொகை அதிகமாக இருந்தாலும், பணம் செலுத்த செலுத்தக் குறைந்துகொண்டே வரும். வட்டி விகிதத்தை பொறுத்து அசல் தொகையின் மீது எவ்வளவு சதவீதம் வட்டி என நிர்ணயிக்கப்படும். மாதாந்திர தவணைத் தொகையில் மாற்றம் இல்லாமல் இருந்தாலும், அசல் மற்றும் வட்டி பிரிவுகளில் கால அளவைப்பொறுத்து மாற்றங்கள் இருக்கும். ஒவ்வொரு அடுத்த தவணைத் தொகையிலும், அசல் தொகை அதிகரிக்கும் மற்றும்வட்டி குறையும்.

Loan Amount

|
0
|
0
|
0
|
0
|
0
one crore twenty five lakh twenty one thousand

Loan Tenure

MoYr
|
0
|
0
|
0
|
0
|
0

Interest Rate

|
0
|
0
|
0
|
0
|
0
Break-up of Total Payments

ஈ.எம்.ஐ கால்குலேட்டரை பயன்படுத்துவது எப்படி?

வண்ணமயமான வரைபடங்கள் மற்றும் உடனடி முடிவுகளுடன், எளிதில் பயன்படுத்தும் வகையில் உள்ள ஈ.எம்.ஐகால்குலேட்டரை எளிதில் புரிந்துகொள்ள முடியும் மற்றும் விரைவாகச் செயல்பாடுகளை செய்ய முடியும்.

ஈ.எம்.ஐ கால்குலேட்டரில் பின்வரும் தகவல்களை உள்ளிட வேண்டும்.

* நீங்கள் வாங்க விரும்பும் அசல் கடன் தொகை (ரூபாயில்)
*கால அளவு (மாதங்கள் அல்லது ஆண்டுகள்)
*வட்டிவிகிதம் (சதவீதம்)
* முன்கூட்டியே செலுத்தும் ஈ.எம்.ஐ அல்லது முந்தைய ஈ.எம்.ஐ (கார் கடனுக்கு மட்டும்)

கால்குலேட்டரில் உள்ள ஸ்லைடர் மூலம் எண்களை மாற்ற முடியும்.

அதில் குறிப்பிட்டுள்ளதை விட அதிக மதிப்பைஉள்ளிட வேண்டும் எனில், நேரிடையாக அதற்குண்டான பெட்டியில் உள்ளிடலாம். ஸ்லைடரில் மதிப்புகள் மாறியஉடனேயே (நேரிடையாக உள்ளிடும் போது 'tab' பொத்தானை அழுத்தவும்), ஈ.எம்.ஐ கால்குலேட்டர் உங்களின் மாதாந்திரதவணைத் தொகையை மறுகணக்கீடு செய்து காண்பிக்கும்.

அதில் உள்ள வட்ட வரைபடத்தில், மொத்தம் செலுத்த வேண்டிய தொகையில், எவ்வளவு அசல் மற்றும் வட்டி எனப் பகுத்துகாண்பிக்கப்படும். மேலும் கடனுக்காக செலுத்தப்பட்ட மொத்த தொகையில், எவ்வளவு சதவீதம் மொத்த வட்டி மற்றும்அசல் என காண்பிக்கப்படும். தவணை கால அட்டவணையில், கடனுக்கான மொத்த கால அளவில், ஒவ்வொரு ஆண்டும்/மாதமும் எவ்வளவு பணம் செலுத்தப்படும், அதில் வட்டி மற்றும் அசல் எவ்வளவு என்பதை வரைபடத்தில்காண்பிக்கப்படும். ஒவ்வொரு தவணைத் தொகையிலும் ஒரு பகுதி வட்டியாகவும், மற்றவை அசலாகவும்எடுத்துக்கொள்ளப்படும். துவக்கத்தில் தவணைத் தொகையின் பெரும்பகுதி வட்டியாகச் செலுத்தப்படும். காலம் செல்லசெல்ல தவணைத் தொகையில் அசலின் பங்கு அதிகரிக்கும். தவணை கால அட்டவணையில், ஒவ்வொரு ஆண்டும்இடைப்பட்ட காலத்தில் மீதமுள்ள இருப்பு அடுத்த ஆண்டிற்குக் கணக்கிடப்படுவதும் காண்பிக்கப்படும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X