தேக்க நிலையிலும் வளர்ச்சியடைந்த பங்குகள் வழங்கும் லாபம்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த வார இறுதியில் இந்தியாவின் பங்கு வர்த்தகம் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியே அதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.

இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்டிருக்கும் இந்த மோசமான சூழ்நிலையில், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை நிறுத்திவிடலாமா என்ற கேள்வி வரும். அவ்வாறு நிறுத்திவிடக்கூடாது. இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் எந்தந்த நிறுவனங்களின் பங்குகள் நல்ல லாபத்தைத் தரும் என்பதை அறிந்து அந்த பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.

வளர்ச்சியடைந்த பங்குகளில் இருக்கும் கொள்கைகள்
 

வளர்ச்சியடைந்த பங்குகளில் இருக்கும் கொள்கைகள்

வளர்ச்சியடைந்த பங்குகள் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் லாபத்தை வழங்குகின்றன. அதாவது அன்றாடச் சந்தையில் நிகழும் ஏற்ற இறக்கங்கள், பங்கு வர்த்தகத்தைப் பாதித்து வந்தாலும், அவை இந்த பங்குகளைப் பெரிதும் பாதிப்பதில்லை. எனினும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் காரணம் சொத்துக்களைப் பெருக்குவதாகும். வளர்ச்சியடைந்தபங்குகளின் மதிப்பு மிக வேகமாக வளர்கின்றது. வளர்ச்சியடைந்த பங்குகளை வழங்கும் நிறுவனங்கள் வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமான பங்குகளை வெளியிட திட்டமிட்டிருக்கின்றன.

பங்குகளில் உள்ள ஆபத்துகள்

பங்குகளில் உள்ள ஆபத்துகள்

பங்கு வர்த்தகம் என்றாலே ஆபத்துகள் நிறைந்த ஒரு துறையாகும். குறிப்பாக புதிய நிறுவனங்கள் வழங்கும் பங்குகளில் வளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகம் இருந்தாலும், அதை உறுதியாகச் சொல்ல முடியாது. எனவே நன்றாக வளர்ச்சியடைந்த அல்லது நிப்டி அல்லது சென்செக்ஸ் ஆகியவற்றின் கீழ்வரும் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக இருக்கும்.

எனினும் வளர்ச்சியடைந்த பங்குகளின் மதிப்பு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், அவற்றில் ஆபத்துகளும் அதிகம் உள்ளன. வளர்ச்சியடைந்த பங்குகளின் மதிப்பின் வளர்ச்சியை எவ்வாறு உறுதியாகக் கூறமுடியாதோ, அதுபோல் அதிலிருந்து வரும் லாபத்தையும் உறுதியாகக் கூறமுடியாது. ஆனால் எல்லாம் நாம் நினைத்தது போல் நடந்தால், பங்குச் சந்தையில் செய்யும் முதலீடு அதிக லாபத்தை வழங்கும் என்பது மட்டும் உறுதி.

விலையில் உள்ள மாற்றம்

விலையில் உள்ள மாற்றம்

அதிக மூலதனத்தைக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் பங்குகளைவிட, வளர்ச்சியடைந்த பங்குகளின் விலையில் அடிக்கடி மாற்றம் இருக்கும். ஒருசில நேரங்களில் இந்த பங்குகளின் விலை மதிப்பு எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைவாக இருக்கும். எனவே இந்த பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன்பாக, தீவிரமாக ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும். மோசடிகளில் ஈடுபடும் போலி நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

அடுத்தவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள் என்பதற்காக நீங்களும் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம். நீங்களாகவே பங்கு வர்த்தகத்தை ஆராய்ந்து, உணர்ந்து, நம்பிக்கை இருந்தால் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுங்கள்.

நிதி நெருக்கடிகள்
 

நிதி நெருக்கடிகள்

நிதி நெருக்கடிகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதிக நிதி நெருக்கடியை எதிர் கொள்ள ஒருவர் தயாராக இருந்தால் அவர் வளர்ச்சியடைந்த பங்குகளில் முதலீடு செய்யலாம். வளர்சியடைந்த பங்குகளின் மதிப்பு மிக வேகமாக மாறினாலும், அவை எப்போதும் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்று கூறமுடியாது. ஒருவர் சரியான நேரத்தை அறிந்து வளர்ச்சியடைந்த பங்குகளில் முதலீடு செய்தால் அவர் சரியான நேரத்தில் அதிக லாபத்தைப் பெற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How growth stocks can offer good returns in a slowdown?

Of late, the image of Indian markets has been tarnished by series of declines due to weak macros. Weakness in the Indian currency against the US Dollar is breaking the confidence of Foreign Investors in Indian equities.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X