வங்கி அக்கவுண்ட்யை ஃப்ரீஸ் செய்வதற்கான காரணங்கள்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வங்கி அக்கவுண்ட்யை ஃப்ரீஸ் செய்வதற்கான  காரணங்கள்
அக்கவுண்ட்களை ஃப்ரீஸ் செய்வது என்றால் வங்கி அக்கவுண்ட்டில், மேற்கொண்டு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை, எந்த விதமான ட்ரான்ஸாக்ஷனையும் மேற்கொள்ள முடியாது என்று அர்த்தமாகும். அக்கவுண்ட் ஹோல்டர் முன்னதாக ஏதேனும் செக்குகள் அளித்திருந்தாலும், அனைத்து பேமண்ட்களும், ட்ரான்ஸாக்ஷன்களும் நிறுத்தி வைக்கப்படும்.

ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா, செக்யூரிட்டீஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா(SEBI), வருமான வரி அத்தாரிட்டிகள் மற்றும் நீதிமன்றங்கள் போன்ற ரெகுலேட்டர்களுக்கு வங்கி அக்கவுண்ட்களை ஃப்ரீஸ் செய்வதற்கான உரிமை அளிக்கப்பட்டுள்ளன.

அக்கவுண்ட்கள் எப்போது ஃப்ரீஸ் செய்யப்படுகின்றன என்பதற்கான காரணங்கள் பின்வருமாறு:

1. கட்டி முடிக்காத தனியார் கடன்கள்
2. வரித்தவணைகள்
3. ஒரு நிறுவனம்/தனிப்பட்ட நபர்க்கு பணம் செலுத்தாமல் இருத்தல்
4. அக்கவுண்ட்டில் சந்தேகிக்கும்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுதல்
5. அக்கவுண்ட்டை சட்டத்துக்குப் புறம்பான காரியங்களுக்கு உபயோகித்தல்
6. கறுப்புப்பணத்தை வெள்ளையாக்க முயற்சித்தல்
7. தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்தல்

மிக சமீபத்தில், கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸ், வருமான வரித்துறைக்கு சுமார் 40 கோடி ரூபாய் தவணை கட்டத் தவறியதால், அந்நிறுவனத்தின் அக்கவுண்ட்கள் முடக்கப்பட்டன.

மதிப்பிற்குரிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி, மார்க்கெட் ரெகுலேட்டரான செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (எஸ்இபிஐ), சஹாரா குழுமத்தின் அக்கவுண்ட்களை கூட முடக்கியது.

முடக்கப்பட்ட அக்கவுண்ட்டை அன்ஃப்ரீஸ் செய்ய உங்களுக்கு சாதகமான நீதிமன்ற உத்தரவு இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

வங்கிகள் அக்கவுண்ட்களை ஃப்ரீஸ் செய்ய முடியுமா?

வங்கிகள், ஒரு அக்கவுண்ட்டில் செய்யப்படும் ட்ரான்ஸாக்ஷன்களைப் பற்றி சந்தேகித்தால், அந்த அக்கவுண்ட்டை ஃப்ரீஸ் செய்யக்கூடிய எல்லா அதிகாரமும் அவ்வங்கிகளுக்கு உண்டு. எனினும், அவ்வாறு ஃப்ரீஸ் செய்வதற்கு முன், வங்கிகள் அக்குறிப்பிட்ட அக்கவுண்ட் ஹோல்டருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்ப வேண்டியது அவசியம்.

வழக்கத்துக்கு மாறானதொரு ட்ரான்ஸாக்ஷன், ஆர்பிஐ சட்டதிட்டங்களுக்குப் புறம்பாக, சேவிங்ஸ் அக்கவுண்ட்டில் செய்யப்படும் பிசினஸ் ட்ரான்ஸாக்ஷன்களின் ஒரு பகுதியாகக் கூட இருக்கக்கூடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Various reasons why banks freeze accounts

Freezing of accounts means you will not be able to undertake any transaction in your banbing account until further notice. All payment and transactions will be stopped even cheques issued by the holder earlier.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X