ஆன்லைனில் இன்சூரன்ஸ் வாங்கும்போது நாம் கவணிக்க வேண்டியவை!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மலர்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், ஒரு பட்டனை க்ளிக் செய்வதன் மூலம் எதையும் சாதித்துக்கொள்ளக் கூடிய ஒரு நிலை உருவாகியுள்ளது. எனவே, ஆன்லைனில் இன்சூரன்ஸை -அது, மோட்டார், உடல்நலம் (Health), வாழ்க்கை (Life) அல்லது வீடு போன்றவற்றுள் எதற்கான இன்சூரன்ஸாகவும் இருக்கட்டும், அதை வாங்குவது முக்கியமான ஒன்று, அதே சமயம் நன்கு அலசி ஆராய்ந்து செயல்படுத்த வேண்டிய ஒரு பணியாகும். மேலும், ஆன்லைன் மூலம் இன்ச்சூரன்ஸ் வங்குவதே, விலைகுறைந்த, எளிதான மற்றும் விரைவான ஆப்ஷனாகக் காணப்படுகிறது.

 

ஆன்லைன் மூலம் ஒரு பாலிஸியில் முதலீடு செய்வதற்கு முன், பின் வரும் 7 முக்கிய யோசனைகளை கருத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம். ஏனெனில், இந்த ஆப்ஷன் மிகச்சிறந்ததாக தோற்றமளித்தாலும், இதில் சில பின்னடைவுகளும் இருக்கவே செய்கின்றன.

கூடுதல் தொகை

கூடுதல் தொகை

ஆன்லைன் இன்சூரன்ஸ் திட்டங்கள் பெரும்பாலும் செட் பேக்கேஜ்களாக வருபவை; எனவே இவற்றை தனி நபர் விருப்பத்திற்கிணங்க மாற்றுதல் இயலாது. கொடிய நோய் தாக்குதலுக்கான காப்பீடு அல்லது விபத்தினால் ஏற்பட்ட ஊனத்துக்கான சலுகைகள் போன்ற ரைடர் ஆப்ஷன்களை இணைக்க விரும்புவது போன்ற பிரத்யேக தேவைகள் ஏதேனும் உங்களுக்கு இருப்பின், அதற்கு நீங்கள் கூடுதல் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.

பிழை வர வாய்ப்பு

பிழை வர வாய்ப்பு

நீங்கள் ஆன்லைனில் இன்சூரன்ஸ் பாலிஸிகளை வாங்கும் முறைக்கு புதியவராக இருப்பின், படிவங்களை நிரப்பும் போதோ அல்லது உங்களுக்கான சரியான பாலிஸியை தேர்வு செய்வதிலோ நீங்கள் தவறு செய்வதற்கு நிறைய வாய்ப்புள்ளது. எனவே இம்முறையைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் மட்டுமே இன்சூரன்ஸை ஆன்லைன் மூலம் தைரியமாக வாங்கலாம்.

ஆன்லைன் தடுமாற்றங்கள்
 

ஆன்லைன் தடுமாற்றங்கள்

நீங்கள் ஆன்லைனில் உபயோகிக்கக்கூடிய வெப்சைட், தவறான தகவல்களைக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்வது மிகவும் முக்கியம். முக்கியமாக, ஒப்பிட்டுப் பார்த்துத் தேர்வு செய்ய அனுமதிக்கும் வெப்சைட்களில் காணப்படும் தகவல்கள் புதிப்பிக்கப்படாமல் இருக்கக்கூடும்; இத்தகைய சைட்கள் உங்களை தவறாக வழிநடத்தாதபடி கவனமாக இருக்க வேண்டும். எந்தவொரு வெப்சைட்டையும் உபயோகிக்கும் முன், அது முறையான வெப்சைட் தானா என்பதையும், அது கோப்புகளை பாதுகாப்பான முறையில் என்கோட் செய்யுமா என்பதையும் உறுதி செய்து கொள்ள, அதன் பாதுகாப்புச் சான்றிதழை சரி பார்ப்பது மிகச் சிறந்த யோசனையாகும்.

ஹெச்டிடிபிஎஸ் (HTTPS)

ஹெச்டிடிபிஎஸ் (HTTPS)

ஹெஸ்டிடிபிஎஸ் என்பதில் உள்ள எஸ், அந்த வெப்சைட் பாதுகாப்பானது என்பதைக் குறிக்கக்கூடியதாகும். நீங்கள் உரிய கட்டணத்தை செலுத்தியுள்ளீர்கள் என்பதற்கு ஆதாரமாக உங்கள் ட்ரான்ஸாக்ஷனை ஒரு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

எவ்வளவு வாங்கலாம்

எவ்வளவு வாங்கலாம்

உங்களுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு இன்சூரன்ஸை மட்டுமே வாங்குங்கள்; பேக்கேஜ் டீல்களில் மயங்கி விடாதீர்கள். வாங்குவதற்கு முன், உங்கள் மனித வாழ்வு மதிப்பு (ஹ்யூமன் லைஃப் வால்யூ - HLV) அல்லது ஹெச்எல்வியை (HLV) கணக்கிட்டு உங்களது தேவையை மதிப்பிடுங்கள்.

ஆன்லைன் கால்குலேட்டர்கள்

ஆன்லைன் கால்குலேட்டர்கள்

தேவையான தகவல்களை நிரப்பியவுடன், எவ்வளவு இன்சூரன்ஸ்களில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்பதை துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்லக்கூடிய ஆன்லைன் கால்குலேட்டர்கள் பல உள்ளன. இவற்றை உபயோகித்து உங்களுக்குத் தேவைப்படக்கூடிய இன்சூரன்ஸ் அளவை அறிந்து கொள்ளலாம்.

பின்னணியை சரிபார்த்தல்

பின்னணியை சரிபார்த்தல்

வெப்சைட் நன்றாக உள்ளது என்பதற்காகவோ அல்லது செய்முறை வேகமாக நிறைவடைந்து விட்டது என்பதற்காகவோ அத்தகைய வெப்சைட்களை தேர்வு செய்வது உசிதமல்ல. முக்கியமாக உங்கள் இன்டெர்நெட் தேடுதலின் போது முதன் முதலில் உங்கள் கணினியில் தோன்றக்கூடிய நிறுவனத்தை உடனே தேர்வு செய்வதை தவிருங்கள். எந்தவொரு நிறுவனத்தை தேர்வு செய்யும் முன்னர், அவற்றின் க்ளெயிம் செட்டில்மெண்ட்டுகள் மற்றும் பின்னணி, இன்சூரன்ஸ் உலகில் அந்நிறுவனத்தின் வரலாறு போன்ற முக்கிய தகவல்களை சரி பாருங்கள். அந்நிறுவனத்தின் கஸ்டமர் சர்வீஸ் மதிப்பீடுகளையும் எடை போடுங்கள்.

பாலிஸியின் அம்சங்களை சரி பாருங்கள்

பாலிஸியின் அம்சங்களை சரி பாருங்கள்

உங்களுக்கு என்ன தேவை என்பது பற்றியும், எந்த நிறுவனத்திலிருந்து நீங்கள் வாங்க விரும்புகிறீர்கள் என்பது பற்றியும் ஒரு முடிவுக்கு வந்த பின், அப்பாலிஸிகளின் ப்ரீமியம் தொகை செலுத்த வேண்டிய தவணைகள், மெச்சூரிட்டி தேதி, ஆதாயங்கள், வருடாந்தர அடிப்படையிலான முதலீடு போன்ற அம்சங்களை சீராய்ந்து பார்த்து இறுதி முடிவை எடுங்கள்.

உங்கள் நகரில் கிடைக்குமா என்பதை ஆராயுங்கள்

உங்கள் நகரில் கிடைக்குமா என்பதை ஆராயுங்கள்

பெரும்பாலான இன்சூரன்ஸ் திட்டங்கள் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே கிடைக்கக்கூடியவை; எனவே உங்களுக்கான இன்சூரன்ஸை தேர்வு செய்யும் முன் அது உங்கள் நகரில் கிடைக்கக்கூடியது தானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

(மந்தமான பொருளாதார வளர்ச்சி இந்திய வங்கிகளை பாதிக்கும்: எஸ்&பி)

ஆலோசனை

ஆலோசனை

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அவர்தம் பாலிஸிகளை நேரடியாக ஆன்லைனில் விற்பனை செய்கின்றன. ஒரு பாலிஸியை வாங்கும் முன் பல்வேறு பாலிஸிகளை ஒப்பிட்டுப் பார்த்து, புத்திசாலித்தனமான முடிவுக்கு வர உங்களுக்கு உதவும் ஏராளமான வெப்சைட்களும் உள்ளன. ஆன்லைனில் இன்சூரன்ஸ் பாலிஸி வாங்கும் முன், மேற்கூறிய யோசனைகளை கருத்தில் கொண்டு, முழுமையாக ஆராய்ந்து பின் நல்ல முடிவை எடுங்கள். இம்முறையைக் கையாள்வதில் நீங்கள் கத்துக்குட்டியாக இருப்பின், ஏஜென்ட் ஒருவரின் உதவியைப் பெறுவதோ அல்லது இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கே நேரடியாகச் செல்வதோ சாலச் சிறந்தது.

(முறையான முதலீட்டு திட்டத்தை (SIP) கையாளுவது எப்படி?)

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Be intelligent when buying insurance online

Buying insurance online, be it motor, health, life or home - is an important and logical step. It is also a cheaper, easier and quicker option.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X