ஜீரோ-லையபிலிட்டி கார்டுகள் என்றால் என்ன??

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பொதுவாக டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் தொலைந்து போகும் இடர்பாடு அதிகமாக உள்ளது. அப்படியானால் அந்த கார்டை தடை செய்து விட்டு புதிய கார்டு வழங்க உடனடியாக கோரிக்கை எழுப்ப வேண்டும். இவ்வகை பாதுகாப்பற்ற சூழ்நிலையில் ஜீரோ-லையபிலிட்டி கார்டு உங்களுக்கு இதனை சுலபமாக்கி தருகிறது. இந்த வசதியை மாஸ்டர் மற்றும் வீசா என்னும் இரண்டு பண அட்டை நிறுவனமும் அளிக்கிறது. சில நேரம் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் வழங்கும் உள்நாட்டு பண அட்டையான ரூபே கார்ட் வகைகளுக்கும் இந்த வசதி அளிக்கப்படும்.

ஜீரோ-லையபிலிட்டி கார்டுகள் என்றால் என்ன??

ஜீரோ-லையபிலிட்டி கார்டுகளின் செயல்பாடு மற்றும் நன்மைகள்

ஒரு வேளை உங்கள் கார்டு தொலைந்து போய் அதை சட்ட விரோதமாக யாராவது பயன்படுத்தி ஏதாவது வணிகத்தில் ஈடுபட்டிருந்தால், அதனை சுமக்கும் பொறுப்பு உங்களிடம் சேராது. அதாவது இவ்வகை திருட்டு வேலைகளால் நடந்த வணிகங்களுக்கு கார்டை வழங்கிய வங்கி உங்களை அதற்கான பொறுப்பில் சேர்க்காது.

பொருள் வாங்கப்படும் கடை மூலமாக நடக்கும் வணிகம் இந்த திட்டதின் கீழ் அடங்கும். அதே போல் மற்ற இணையதளம் மற்றும் ஏ.டி.எம் செயல்பாடுகளுக்கு பின் எண் தேவைப்படுவதை போல இதற்கு தேவை படாது. இருப்பினும் சில நிபந்தனைகளை நிறைவேற்றினால் தான் இந்த கார்டின் மூலமாக கிடைக்கும் பயன்களை நீங்கள் அடையலாம்:

1. தொலைந்து போன உங்கள் கார்டை வேறு யாராவது பயன்படுத்தி அது உங்களை சாராமல் இருக்க வேண்டுமானால் முதலில் உங்கள் ஜீரோ-லையபிலிட்டி கார்டு கணக்கு வங்கியின் நம்பிக்கையான பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

2. இவ்வாறானா திருட்டு அடிக்கடி நடந்திருக்க கூடாது. அப்போது தான் அதன் பயனை உங்களால் அனுபவிக்க முடியும். கடந்த ஒரு வருடத்தில் அதிகப்படியாக இரண்டு தடவைக்கு மேல் இவ்வகை திருட்டை பற்றிய புகாரை அளித்திருக்க கூடாது.

3. அதே போல் கார்டை பாதுகாக்க உங்களாலான அனைத்து முயற்சியையும் மேற்கொண்டிருக்க வேண்டும்.

இதில் உள்ள மிகப்பெரிய பயன் என்னெவென்றால், இந்த வசதியை கொண்ட டெபிட் அல்லது கிரெடிட் கார்டு திருட்டு போனதை வங்கியில் தெரியப்படுத்தி விட்டால், அந்த கார்டை கொண்டு, எந்த ஒரு வணிகமும் செய்ய முடியாத படி தடை செய்யப்படும். அது ஒரு டெபிட் கார்டு என்றால் அதனை வைத்து வேறு யாராவது திருட்டுத்தனமாக வணிகத்தில் ஈடுபட்டிருந்தால் அப்பணம் மீண்டும் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இந்தியாவில் ஜீரோ-லையபிலிட்டி கார்டு வழங்கும் வங்கிகள்

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஸ்டாண்டர்ட் சார்டெட் வங்கி போன்ற வங்கிகள் ஜீரோ லையபிலிட்டி வசதியை கொண்ட டெபிட் கார்டுகளை வழங்குகிறது. இருப்பினும் திருட்டிற்கான காப்பீட்டு தொகையை வங்கி கட்ட வேண்டியிருப்பதால் இன்னமும் பல வங்கிகள் இந்த சேவையை அளிப்பதில்லை. உங்கள் வங்கி இந்த சேவையை அளிக்காத வரையில் அதன் பயனை உங்களால் அனுபவிக்க முடியாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Zero-liability cards: How are these useful?

Unlike other ordinary debit or credit cards that carry the risk of loss and consequent follow-up in respect of blocking of the card and issuance of a new card.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X