கலால் வரிக்கும் விற்பனை வரிக்கும் என்ன வித்தியாசம்???

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வரி தொகை செலுத்துதல் என்பது இந்திய அரசாங்கத்தால் இந்திய பிரஜைகள் மீது விதிக்கப்படும் நிதி சார்ந்த வரிவிதிப்பாகும். நிதியை பெறுக்கி நாட்டின் பொருளாதாரத்தை செயல்பட வைக்கவே இந்த வரி விதிப்பு. சட்டத்தை பொறுத்து வரி செலுத்துதல் கட்டாயமாகும். எவ்வளவு வரித்தொகை வசூலிக்க வேண்டும் என்பதை தனிப்பட்ட நபருடைய வருமானத்தின் அடிப்படையில் அரசாங்கம் முடிவெடுக்கும்.

இந்தியாவில் சொத்து வரி, வருமான வரி, சுங்கச்சாவடி வரி, கலால் வரி, விற்பனை வரி மற்றும் சுங்க வரி என பல வகையான வரிகள் உள்ளது.

கலால் வரி மற்றும் விற்பனை வரிக்கு இடையேயான அடிப்படை வேறுபாட்டையும் அவைகளை யார் கட்டுவார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்.

கலால் வரி என்றால் என்ன?

நம் நாட்டிற்குள் தயாரிக்கப்பட்டு உருவாக்கப்படும் பொருட்கள் உற்பத்தியின் மீது விதிக்கப்படும் வரி தான் கலால் வரி எனப்படும் எக்சைஸ் ட்யூட்டி. தயாரிக்கப்பட்ட நிலையில் உள்ள பொருட்கள் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் போது, பொருளின் தயாரிப்பாளரால் இது செலுத்தப்படும். இருப்பினும் சுங்க வரிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. சுங்க வரி என்பது வெளிநாட்டில் தயாரிக்கப்படும் பொருளை நம் நாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கட்டவது.

கலால் வரிக்கும் விற்பனை வரிக்கும் என்ன வித்தியாசம்???

விலக்கு அளிக்கப்பட்டுள்ள சில பொருட்களை தவிர அனைத்து பொருட்களின் மீதும் கலால் வரி வசூலிக்கப்படும். இந்தியாவில் மூன்று வகையான மத்திய கலால் வரிகள் விதிக்கப்படுகிறது அவை: அடிப்படை கலால் வரி, கூடுதல் கலால் வரி, சிறப்பு கலால் வரி.

விற்பனை வரி என்றால் என்ன?

விற்பனை வரி என்பது பொருளை வாங்கும் வாடிக்கையாளரால் கட்டப்படும் வரியாகும். நாம் ஒரு பொருளை வாங்குவதற்கு கட்டப்படும் தொகை இரண்டு பாகங்களாக பிரிக்கப்படும்: ஒன்று பொருளின் விலை, மற்றொன்று அந்த பொருளின் மீது விதிக்கப்பட்டுள்ள வரி. அதனால் நாம் ஒரு பொருளை வாங்கும் போது இந்த இரண்டு தொகையையும் தெரிந்தோ தெரியாமலோ சேர்த்து தான் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

கலால் வரிக்கும் விற்பனை வரிக்கும் என்ன வித்தியாசம்???

ஒரு மாநிலத்திற்குள் நடைபெறும் கொள்முதல் மற்றும் விற்பனையின் மீது விற்பனை வரி வசூலிக்கப்படும். ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு அளவில் விற்பனை வரியை வசூல் செய்வார்கள். அதுவே ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு விற்பனை மற்றும் கொள்முதல் நடக்கையில் மத்திய விற்பனை வரி வசூலிக்கப்படும்.

GST சட்டம் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டால் விற்பனை வரி மற்றும் சுங்க வரி உட்பட பல வரிகளை நெறிப்படுத்தும். நாடாழுமன்ற குளிர்கால தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படலாம். இது GDP-யை மேம்படுத்தி நாட்டிலுள்ள வரிகளை நெறிப்படுத்தும் என நம்பப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is The Difference Between Excise Duty And Sales Tax?

Tax payment is a financial levy charged to citizens by government in order to raise funds and run the economy of the country. Tax payment is mandatory depending on the law and the amount or charge is decided by the government based on the income of the individual.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X