வாழ்வில் வெற்றி பெறுவதற்கும் லஞ்ச் பிரேக்கிற்கும் என்ன தொடர்பு..?

By Srinivasan P M
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொஞ்சம் அப்படியே உங்கள் பள்ளிக்கூட நாட்களை நோக்கி பிளாஷ் பாக்ல போய் பாருங்கள். பள்ளி செல்லும் நாட்களில் மத்திய உணவு இடைவெளி ஒரு மகிழ்ச்சியான பொழுதாக இருந்தது. அங்கிருந்த உணவகத்தில் வெறும் காய்ந்து போன ரொட்டியோ அல்லது தோசையோ கிடைத்திருந்தாலும் உங்கள் வழக்கமான வகுப்புகளில் இருந்து விடுபட்டு நண்பர்களுடன் உரையாடவாவது நேரம் வாய்த்தது.

இந்த வேலைக்குப் போகும் காலங்களில், மத்திய உணவு இடைவேளை அனைவருக்கும் ஒரு இரண்டாம் பட்சமாகவே உள்ளது. இதற்கான முக்கியத்துவமும் குறைந்துகொண்டே வருவதும் கவலைக்குரிய போக்காக உள்ளது.

யுஎஸ் நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் அமைப்பின் தகவல்கள் படி அங்கு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 42% பேர்கள் மிகவும் அரிதாகவோ அல்லது சில சமயங்களில் மட்டுமே உணவு இடைவேளை எடுத்துக்கொண்டதும் 39% பேர்கள் தங்கள் பணி செய்யும் மேஜையிலேயே உன்னுவதும் தெரிய வந்துள்ளது.

இது ஒரு நல்ல அறிகுறியல்ல. இன்னும் சொல்லப் போனால் திறமைசாலிகள் தங்கள் உணவு இடைவேளையை தங்கள் செயலாற்றலை வளர்த்துக் கொள்ளவே பயன்படுத்துகின்றனர்.

தோல்வி முகம் காண்பவர்கள் இந்த இடைவேளைகளை தவறாகக் கையாண்டு தங்களை தாங்கலே மழுங்கடித்துக் கொள்ளுகிறார்கள்.வெற்றிகரமான மனிதர்கள் தங்கள் உணவு இடைவேளையின் போது பெரும்பாலும் தவிர்க்கும் ஒன்பது செயல்கள் இதோ உங்களுக்காக.

1. வேலை செய்யும் மேஜையிலேயே உண்பது

1. வேலை செய்யும் மேஜையிலேயே உண்பது

இந்த வியாக்கியானங்களைச் செய்துகொண்டிருக்கும் நானே ஒரு பாசாங்குத்தனம் தான் செய்துகொண்டிருக்கிறேன்... சுண்டலைத் தின்றுகொண்டு.

இருந்தாலும் இந்தப் பழக்கத்திலிருந்து சற்று விடுபட்டு வெளியே வருவது ஒரு நல்ல விஷயம்தான். உண்மை என்னவென்றால் இந்தப் பழக்கம் இடைவெளிக்காக நம்மை ஏங்க வைக்கும். மேஜையில் அல்லது உங்கள் டெஸ்கிலேயே உட்கார்ந்து சாப்பிடுவதால் அதிக வேலையைச் செய்ய முடியலாம். ஆனால் அதனை ஈடுபாட்டோடும் நயத்தோடும் செய்ய முடியாது என்பதே உண்மை.

 

2. லன்ச் டைம் முழுவதும் வேலை செய்வது

2. லன்ச் டைம் முழுவதும் வேலை செய்வது

வாழ்வில் வெற்றிகரமாக இருப்பவர்கள் அவ்வப்போது இடைவெளி எடுத்துக் கொள்கிறார்கள்.

உங்கள் உணவு இடைவேளையில் வேலை செய்து அதிக வேலைகளை முடிக்க முடியும். ஆனால் வேலையின் தரம் குறைந்து விடும்.

"மக்கள் தங்கள் சூழலை மாற்றிக் கொள்ளும்போது குறிப்பாக இயற்கையான சூழலுக்கு தங்களை ஆட்படுத்திக்கொள்ளும் போது நுண்ணறிவும் கண்டுபிடிப்புகளும் நிகழும்" என கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உளவியல் நிபுணர் மற்றும் பேராசிரியர் கிம்பர்லி எல்பாஷ் தெரிவிக்கிறார்.

சாப்பிடும்போது அந்த பாழாய்ப்போன மின்னஞ்சலை பார்த்துக்கொண்டிருக்காதீர்கள்.

 

3. உணவு இடைவேளையை மறந்தே விடுவது
 

3. உணவு இடைவேளையை மறந்தே விடுவது

கெட்டிக்காரர்கள் தங்கள் உணவு இடைவேளையை மறப்பதில்லை. தங்களின் தினசரி பணி திட்டமிடுதலில் அதனை ஒரு முக்கிய அங்கமாக ஆக்கி நேரத்தை ஒதுக்குவர்.

4. ஆரோக்கியமற்ற உணவு

4. ஆரோக்கியமற்ற உணவு

துரித உணவுகள் அல்லது பாஸ்ட் புட் என்றாலே எல்லாருக்கும் கொஞ்சம் சபலம் தான். விலை குறைவு சுவையாகவும் இருக்கிறது. அதே வேளையில் விரைவாகவும் செய்யக் கிடைக்கிறது. மதிய உணவு இடைவேளையில் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் அல்லவா? ஆனால் திறமைசாலிகள் வசதியைக் கருதி ஒருபோதும் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கமாட்டார்கள்.

5. வெளியில் உணவு உண்ணக் கண்மூடித்தனமாக செலவு செய்வது

5. வெளியில் உணவு உண்ணக் கண்மூடித்தனமாக செலவு செய்வது

வெளியில் உணவு உண்ணுவது குறிப்பாக நீங்கள் நகரத்தில் வாழும்போது எளிதான விஷயமல்ல செலவு அதிகம் பிடிக்கும். வீட்டில் சமைத்து எடுத்துச் செல்லுங்கள். இது ஆரோக்கியத்தையும் சிக்கனத்தையும் உறுதி செய்யும்.

6. தினமும் தனியாக உணவு உண்ணுவது

6. தினமும் தனியாக உணவு உண்ணுவது

மனிதன் ஒரு சமூக விலங்கு என்பார்கள். நமது படைப்பு பல மணி நேரங்களாக ஒருவருடனும் பேசாமல் இருப்பதற்காக அல்ல. உங்கள் அலுவலகத்தில் உள்ளவர்களோடு தான் பேசவேண்டும் என்பதும் இல்லை. மதிய உணவு வேலையை உங்கள் நண்பரோடு கூட செலவிடலாம்.

7. இடைவெளி எடுத்தும் சாப்பிடாமல் இருப்பது

7. இடைவெளி எடுத்தும் சாப்பிடாமல் இருப்பது

நாள் பூராவும் சாப்பிடாமல் இருப்பது மாலையில் அதிக உணவை உண்ணத் தூண்டும். மதிய உணவு நேரத்தில் பசியில்லாமல் இருந்தால் சிற்றுண்டி அல்லது சிறுந்தீனிகளை உண்ணலாம்.

8. உள்ளேயே முடங்கிக் கிடப்பது (வெளியில் சீதோஷணம் நன்றாக இருந்தாலும்)

8. உள்ளேயே முடங்கிக் கிடப்பது (வெளியில் சீதோஷணம் நன்றாக இருந்தாலும்)

திறமைசாலிகள் சுத்தமான காற்றின் அருமையை உணர்ந்தவர்கள்.

உணவு இடைவேளை வேலைக்கு இடையே சூரிய ஒளியைப் பெற ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். அதனை வீணடிக்காதீர்கள். நீங்கள் வயிறு புடைக்க சாப்பிடாவிட்டாலும் ஒரு சிறிய நடை நடந்துவிட்டு வாருங்கள். குறைந்த பட்சம் வெளியேவாவது வாருங்கள்.

 

9. இரண்டுமணி நேர உணவு இடைவெளியை முயற்சிக்கலாமே?

9. இரண்டுமணி நேர உணவு இடைவெளியை முயற்சிக்கலாமே?

உங்களை நன்றாக வழிநடத்திக்கொள்ள வேலையின் இடையே இடைவெளி வைத்துக்கொள்வது ஒரு சிறந்த வழி. அதற்காக வேலையைப் போட்டுவிட்டு நீண்டநேரம் செலவழிக்கக்கூடாது. இதனை முறைப்படி உங்கள் அதிகாரியிடம் பேசி அனுமதி கிடைத்தால் மட்டுமே செய்யவேண்டும் என்பது முக்கியம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The Things Successful people almost not doing in their lunch break

Lunch was always a pretty great time. The cafeteria might have only served cardboard-flavored pizza, but at least you got a break from classes and the chance to talk to your friends.
Story first published: Monday, September 26, 2016, 10:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X