உங்களுக்கு வந்தது போலியான வேலை வாய்ப்பு கடிதமா.. எப்படிக் கண்டறிவது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய உலகில் பிறரை ஏமாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் தந்திரமாக வேலை செய்கிறார்கள், அதிலும் வேலை வாய்ப்பு அளிப்பதாகக் கூறிவிட்டுப் பணத்தினைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்வது என்பது அதிகமாகியுள்ளது.

 

படித்த படிப்பிற்கு வேலை இல்லாமல், பணம் கொடுத்தாவது வேலை வாங்கிவிட சேண்டும் என்று இருப்பவர்கள் தான் இவர்கள் இலக்காக வைத்துள்ளனர். எனவே வேலை தேடும் போது இளைஞர்கள் எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறார். எப்படி இந்த மோசடிகளைக் கண்டறிவது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

ஒருபோதும் பணம் கட்டாதீர்கள்

ஒருபோதும் பணம் கட்டாதீர்கள்

மதிப்புமிக்க ஒரு நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கும் போது பணம் கேட்கமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்க. உங்களுக்கு வேலைக் கிடைத்துவிட்டது, ஆனால் அதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்று கடிதத்தினைப் பெற்றால் அப்போதே நீங்கள் புரிந்துகொள்ளலாம் இது ஒரு மோசடி கும்பல் என்று.

கூகுள் பயன்படுத்துங்கள்

கூகுள் பயன்படுத்துங்கள்

உலகின் தலை சிறந்த தேடுதளமான கூகுளை பயன்படுத்துங்கள். நீங்கள் கடிதம் பெற்றுள்ள நிறுவனத்தினைக் குறித்துக் கூகுளில் தேடுங்கள். நிறுவனத்தின் பெயரை உள்ளிட்ட பிறகும் சரியான விவரங்கள் கிடைக்கவில்லை என்றால் விண்ணப்பிக்க வேண்டாம். நிறுவனத்தின் பெயருடன் மோசடி என்ற வார்த்தையினையும் உள்ளிட்டுத் தேடினால் அது குறித்த மோசடி தகவல்கள் இருந்தாலும் பெற முடியும்.

நேர்முகத் தேர்வு
 

நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு என்பது முறையானதாக இருக்க வேண்டும். தொலைப்பேசி மூலமான அழைப்பினை விட முகத்துக்கு நேரான நேர்காணல் தான் சிறந்தது. மோசடியாளர்கள் நெறிமுறையற்ற வழியில் நேர்முகத் தேர்வினை நடத்துவார்கள், அதில் ரிஸ்க் அதிகம்.

வேலை குறித்த விவரங்கள்

வேலை குறித்த விவரங்கள்

வேலை, சம்பளம் குறித்த விவரங்கள் சரியாகக் குறிப்பிடவில்லை என்றால் கமிஷன் ஏதேனும் அளிக்க வேண்டுமா அல்லது சம்பளத்தில் ஏதேனும் பிடித்தம் செய்யப்படுமா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். கடிதத்தில் சம்பளம் குறித்த விவரங்கள் விளக்கமாக இருக்க வேண்டும். ஒருவேலைச் சம்பளம் குறித்த விவரங்களை மறைத்துப் பேசினாலும் உஷாராக இருங்கள்.

உஷார்

உஷார்

நீங்கள் செல்ல இருக்கும் வேலை சட்டப்பூர்வமானதா என்று சரிபார்க்க வேண்டும். மேலும் நிறுவனமானது உங்களைப் பற்றிய இரகசிய தகவல்களைக் கேட்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும். உங்களைக் குறித்த எந்த ஒரு இரகசிய தகவலை வழங்கும் முன்பும் https // என்ற எழுத்துக்கள் கீழ் இணையதளம் திறக்கப்படுகிறதா என்றும் ஆராயவும்.

போலியான வேலை வாய்ப்பு

போலியான வேலை வாய்ப்பு

இணையதளம் மூலமாக ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும் முன்பு உஷாராக இருக்க வேண்டும் போலியான வேலை வாய்ப்பு அறிவிப்புகள் எப்போதும் பணத்தினைப் பெறும் நோக்கத்தில் தான் இருக்கும். இங்குக் கூறியுள்ளதை எல்லாம் பின்பற்றிச் சரியான வேலையினைத் தேடி கண்டுபிடிக்கவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to determine if a job offer is scam

How to determine if a job offer is scam
Story first published: Monday, February 12, 2018, 17:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X