கோல் இந்தியா பங்கை வாங்கி வச்சிருக்கீங்களா.. காத்திருக்கும் சர்பிரைஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, உலகின் முன்னணி கோல் உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருக்கலாம். இது இடைக்கால டிவிடெண்டாக நடப்பு ஆண்டில் 15 ரூபாயாக அறிவித்துள்ளது.

கோல் இந்தியா பங்கின் விலையானது தற்போது டிஸ்கவுண்ட் விலையில் வர்த்தகமாகி வருகின்றது.

நிஃப்டியில் 10 ஆண்டு சராசரி விலையில் காணப்படுகிறது. தற்போது மலிவு விலையில் இருப்பதாலும், இடைக்கால டிவிடெண்டும் அறிவித்தால், இது இந்த பங்கு விலையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக நாடுகளுக்கு போட்டியாக இந்தியா மாறும்.. எப்படி தெரியுமா.. மார்கன் ஸ்டான்லி அறிக்கையை பாருங்க! உலக நாடுகளுக்கு போட்டியாக இந்தியா மாறும்.. எப்படி தெரியுமா.. மார்கன் ஸ்டான்லி அறிக்கையை பாருங்க!

இடைக்கால டிவிடெண்ட்

இடைக்கால டிவிடெண்ட்

கோல் இந்தியா ஒரு பங்குக்கு இடைக்கால டிவிடெண்டாக 15 ரூபாயாக அறிவித்துள்ளது. இதன் முக மதிப்பு 10 ரூபாயாகவும் உள்ளது. நிறுவனம் ரெக்கார்டு தேதியாக நவம்பர் 16-ஐ நிர்ணயம் செய்துள்ளது. ஆக தகுதி வாய்ந்த பங்குதாரர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

ரெக்கார்ட் தேதி என்றால் என்ன?

ரெக்கார்ட் தேதி என்றால் என்ன?

நவம்பர் 15 அன்று கோல் இந்தியா பங்குகள் எக்ஸ் டிவிடெண்ட் ஆகும். எக்ஸ் டிவிடெண்ட் தேதி என்பது டிவிடெண்ட் ரெக்கார்டு தேதியாக அறிவிக்கப்பட்டுள்ள தேதிக்கு முந்தைய நாள் ஆகும்.

ரெக்கார்ட் தேதி என்பது கட்-ஆஃப் தேதி என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு நிறுவனம் வழங்க இருக்கும் டிவிடெண்ட் விநியோகத்திற்கு தகுதியான பங்குதாரர்களின் பட்டியலை, இறுதி செய்யும் ஒரு குறிப்பிட்ட நாள் தான் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

நிகரலாபம்

நிகரலாபம்

கோல் இந்தியா நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகரலாபம் கடந்த ஆண்டினை காட்டிலும் 106% அதிகரித்து, 6043.55 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 2936.91 கோடி ரூபாயாக இருந்தது.

இதனை ப்ளூம்பெர்க் நிபுணர்கள் 5550 கோடி ரூபாயாக மதிப்பிட்டுள்ளனர்.

வரிக்கு பிந்தைய லாபம்

வரிக்கு பிந்தைய லாபம்

வரிக்கு பிந்தைய லாபமானது கடந்த காலாண்டினை காட்டிலும் 32% சரிவினைக் கண்டு, 8832.86 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழு ஒரு பங்குக்கு 15 ரூபாய் டிவிடெண்டினை அறிவித்தது.

 ஒருங்கிணைந்த வருவாய் விகிதம்

ஒருங்கிணைந்த வருவாய் விகிதம்


நிலக்கரி ஜாம்பவான இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் விகிதம் செயல்பாட்டின் மூலம், 29,838 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 23,291 கோடி ரூபாயாக இருந்தது.

இதன் மூலம் வரிக்கு முந்தைய லாபம் செப்டம்பர் காலாண்டில் 111% அதிகரித்து, 7687 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 3643 கோடி ரூபாயாக இருந்தது.

மொத்த செலவினம்

மொத்த செலவினம்

கோல் இந்தியாவின் மொத்த செலவினங்கள் இரண்டாவது காலாண்டில் 23,770 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 20,424.52 கோடி ரூபாயாக இருந்தது.

இந்தியாவின் மொத்த கோல் உற்பத்தியில் 80% பங்கு வகிக்கிறது. இந்த காலகட்டத்தில் 5% எரிபொருளை ஏற்றுமதி செய்து அந்த விற்பனையில் அதிக சராசரி விலையை ஈட்டியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலக்கரியின் தேவை

நிலக்கரியின் தேவை


நாட்டின் மின்சார உற்பத்தியில் சுமார் 70% நிலக்கரியின் தேவை உள்ளது. தொற்று நோய்க்கு பின்னர் தொழிற்துறை வளர்ச்சியானது மேம்பட்டு வருகின்றது. கடுமையான வெப்பத்தினல் ஏசியின் தேவை அதிகரித்துள்ளது. நிலக்கரி ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது.

இன்றைய பங்கு விலை?

இன்றைய பங்கு விலை?

என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 1.42% அதிகரித்து, 249.55 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் உச்ச விலை 251.35 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 246.75 ரூபாயாகவும் உள்ளது.

இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 1.42% அதிகரித்து, 249.50 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 251.30 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 246.80 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 251.30 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 139.20 ரூபாயாகவும் உள்ளது. இன்றைய உச்ச விலையும், 52 வார உச்ச விலையும் ஒன்றாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coal India announced an interim dividend of Rs 15 per share

Coal India has declared an interim dividend of Rs 15 per share. Its face value is Rs 10. The company has fixed November 16 as the record date. Coal India shares are ex-dividend on November 15
Story first published: Tuesday, November 8, 2022, 22:48 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X