35,000 நிறுவனங்களுக்குக் கட்டம்கட்டிய மத்திய அரசு.. அடுத்து என்ன நடக்கும்..?!

Written By:
Subscribe to GoodReturns Tamil

மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்திய பின்பு நடந்த பணப் பரிமாற்றங்களில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நடந்த பரிமாற்றங்களை ஆய்வு செய்ய மத்திய அரசு வங்கிகளுக்கு உத்தரிவிட்டது. இதன் அடிப்படையில் வங்கிகள் ஆய்வுகளை மேற்கொண்டது.

56 வங்கிகள்

மத்திய அரசின் உத்தரவை ஏற்று ஆய்வை மேற்கொண்ட 56 வங்கிகள் சுமார் 35,000 நிறுவனங்களுக்குச் சொந்தமான 58,000 வங்கிகளுகளில் முறைகேடான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணப் பரிமாற்றத்தில் மட்டும் சுமார் 17,000 கோடி ரூபாய்க் கைமாறியுள்ளதாக வங்கி தரப்பு தெரிவித்துள்ளது.

 

உதாரணமாக

நவ.8,2016க்கு முன் ஒரு நிறுவன கணக்கில் நெகட்டீவ் பேலன்ஸ் இருந்த நிலையில், பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் தடைக்குப் பின் சுமார் 2,484 கோடி ரூபாய் அளவிலான பணப் பரிமாற்றம் செய்துள்ளது எனப் பெருநிறுவன விவகார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2,134 கணக்கு..

அதேபோல் ஓரே நிறுவனத்தின் பெயரில் சுமார் 2,134 கணக்கு இருப்பதையும் இந்த ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு சுமார் 2.24 லட்ச நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கியுள்ளது. இதன் மூலம் எந்த ஒரு நிறுவனமும் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை விற்பனையோ அல்லது பெயர் மாற்றமோ செய்ய முடியாது.

 

5 கூட்டங்கள்

இத்தகைய முறைகேடான பணப் பரிமாற்றங்கள் செய்துள்ள நிறுவனங்கள் மீது எத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யப் பிரதமர் அலுவலக அதிகாரிகள் முன்னிலையில், வருவாய் துறை செயலாளர் மற்றும் பெருநிறுவன விவகார துறை செயலாளர் ஆலோசனை நடத்தினர்.

இவர்கள் மீதான நடவடிக்கை நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்க அடித்தளமாக அமையும் என நம்பப்படுகிறது.

 

தகவல் பகிர்வு

மேலும் 35,000 நிறுவனங்களின் முழு விபரத்தை மத்திய அரசு, மத்திய நேரடி வரி அமைப்பு, ரிசர்வ் வங்கி, நிதி நுண்ணறிவு பிரிவு ஆகிய அமைப்பிடம் பகிரப்பட்டுள்ளது.

3 லட்ச உயர் அதிகாரிகள்

மேலும் இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களில் தலைவர்களாக இருப்பவர்கள் மார்ச் 2016 உடன் முடிந்த 3 நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கையைச் சரியாக அல்லது முழுமையாக அளிக்கப்படாத சுமார் 3 லட்சம் உயர் அதிகாரிகளின் தகுதியை நீக்கியுள்ளது.

இதில் 3,000 பேர் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைவர்களாகப் பதவிவகிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Government crackdown 35,000 companies

Government crackdown 35,000 companies
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns