ரிசர்வ் வங்கி: இந்தியப் பொருளாதாரத்திற்கு அடுத்தடுத்து பிரச்சனை.. FSR அறிக்கை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிசர்வ் வங்கியின் நிதி நிலைத்தன்மை அறிக்கை (FSR) இந்தியப் பொருளாதாரம் மற்றும் சந்தைகளுக்குச் சில முக்கிய மேக்ரோ அபாயங்கள் உள்ளதைக் கண்டறிந்துள்ளது.

 

இந்த மேக்ரோ அபாயங்கள் உலகளாவிய பொருளாதார நிலைமை, உள்நாட்டு நிலைமை மற்றும் சந்தையின் அமைப்பு மற்றும் வங்கி அமைப்பு ஆகியவற்றின் மூலம் உருவாகிறது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 RBI FSR என்றால் என்ன?

RBI FSR என்றால் என்ன?

ரிசர்வ் வங்கி ஒரு வருடத்திற்கு இரண்டு முறை நிதி நிலைத்தன்மை அறிக்கையை (Financial Stability Report - FSR) வெளியிடுகிறது. இது வங்கியின் போக்குகள் மற்றும் முன்னேற்றம் குறித்த ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கை என்பதால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் இந்திய மேக்ரோ சூழலில் FSR அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்நிலையில் FSR-ஆல் அடையாளம் காணப்பட்ட சில முக்கியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக அபாயங்களை இப்போது பார்ப்போம்.

 பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

2021ஆம் ஆண்டும் ஆண்டில், உலகப் பொருளாதாரங்கள் முழுவதும் வளர்ச்சி பாதையில் இருந்தது.

தற்போது பெரிய ஆபத்து என்னவென்றால், கொரோனா பாதித்த ஆண்டின் பேஸ் எபக்ட் அளவு கடந்துவிட்டால், அதற்குப் பின்னான வளர்ச்சி விகிதங்கள் 10-ஆண்டுச் சராசரி வளர்ச்சி விகிதங்களிலோ அல்லது அதற்குக் குறைவாகவே தான் இருக்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, IMF அமைப்பின் கண்காணிப்பின்படி, 2026 ஆம் ஆண்டில் கூடப் பொருளாதார வளர்ச்சி 7.8% அதிகமாகவே இருக்கும் என அறிவித்துள்ளது. இதேவேளையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு நிதிப் பற்றாக்குறை அளவு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

 LIBOR-ல் இருந்து வெளியேற்றம்
 

LIBOR-ல் இருந்து வெளியேற்றம்

இந்தியா, லண்டன் இன்டர்பேங்க் ஆஃபர் ரேட் (LIBOR) ரத்து செய்துவிட்டு மாற்றுக் குறிப்பு விகிதத்தை (alternate reference rate- ARR) நோக்கி நகர்த்துவதற்காக இந்தியா முயற்சி செய்து வருகிறது.

LIBOR அடிப்படையில் தான் தற்போது பல டிரில்லியன் டாலர் அளவிலான பணம் புழக்கத்தில் உள்ளது. இந்த மாற்றத்தைச் சமாளிக்க இந்தியாவில் தற்போது புதிய வரையறைகள் மற்றும் ஹெட்ஜிங் கருவிகள் தேவை. இது இந்தியாவின் அந்நிய செலாவணி கடன்களுக்குப் பெரும் ஆபத்தாக உள்ளது.

 கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

2022 மட்டும் அல்லாமல் இதற்குப் பின்பும் கச்சா எண்ணெய் விலை X-Factor ஆக உள்ளது. எண்ணெய் மற்றும் நிலக்கரி உட்பட அனைத்து வகையான புதை படிவ எரிபொருட்களின் விலை உயர்வு தற்போது மிகப்பெரிய அபாயத்தை நுகர்வோர் சந்தையில் உருவாக்கியுள்ளது.

 கிரிப்டோகரன்சி அபாயங்கள்

கிரிப்டோகரன்சி அபாயங்கள்

கிரிப்டோகரன்சிகளை முறையான வகையில் ஒழுங்குபடுத்த வேண்டும், மேலும் இதை வரைவான முறையில் செயல்படுத்த வேண்டும் என்பதை உலக நாடுகள் உணர்ந்து விரைவாகப் பணியாற்றத் துவங்கியுள்ளது. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளின் அரசுகள் பிரைவேட் கிரிப்டோகரன்சிகள் மூலம் பணமோசடிகளைச் செய்ய முடியும் எனக் கூறும் நிலையில் கிரிப்டோகரன்தி ஆபத்துக் காரணியாகப் பார்க்கப்படுகிறது.

ஆனாலும் கிரிப்டோகரன்சிகளின் பயன்பாடு அதிகளவில் உள்ளது என்பதால், இந்த அபாயத்தைச் சரி செய்யச் சரியான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குவது உலக நாடுகளின் முக்கியக் கடமையாக மாற்றியுள்ளது.

 நிதிப் பற்றாக்குறைக்குப் பிரச்சனை

நிதிப் பற்றாக்குறைக்குப் பிரச்சனை

இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்குத் தலைக்கு மேல் குவிந்துக்கிடக்கும் நிதிப்பற்றாக்குறைக்கு நிதியளிப்பது ஒரு பெரிய சவால்.

2021 மற்றும் 2027 க்கு மத்தியில் மட்டும், மத்திய அரசு செலுத்த வேண்டிய மொத்த தொகையின் அளவு ரூ.250,000 கோடியில் இருந்து ரூ.610,000 கோடியாக உயர்ந்துள்ளது. மத்திய நிதிப்பற்றாக்குறை இலக்கை 2026 ஆம் ஆண்டிலும் 7.8% ஆக உயர்த்தப்படுவதற்கான காரணம் தற்போது விளங்குகிறது.

 முக்கியப் பிரச்சனைகள்

முக்கியப் பிரச்சனைகள்

இந்தியாவில் நுகர்வோர் கடன், மொத்த விலை கடன் ஆகியவை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

கடன் வழங்குவதன் மூலம் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை, ஆனால் பொருளாதார வளர்ச்சி மந்தமாகவும், நிதிப்பற்றாக்குறை அளவு அதிகமாகவும் உள்ளதாதல் நுகர்வோர் கடன், மொத்த விலை கடன் முக்கியப் பிரச்சனையாக விளங்குகிறது.

இதன் மூலம் வாரக் கடன் அளவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI Financial Stability Report: macro risks for Indian economy

RBI Financial Stability Report: macro risks for Indian economy ரிசர்வ் வங்கி: இந்திய பொருளாதாரத்திற்கு அடுத்தடுத்துப் பிரச்சனை.. FSR அறிக்கை..!
Story first published: Monday, January 3, 2022, 14:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X