சம்வாட் 2078: கவனிக்க வேண்டிய முக்கிய பங்குகள்.. சென்செக்ஸ், நிஃப்டியின் இலக்கு தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சம்வாட் பங்கு சந்தையில் வணிகம் செய்பவர்களுக்கு தெரிந்திருக்கலாம். தெரியாதவர்கள் இதனை படித்து தெரிந்து கொள்ளுங்கள். இதற்கும் இந்த பதிவிற்கும் என்ன சம்பந்தம் வாருங்கள் பார்க்கலாம்.

சம்வாட் என்பது ஒரு இந்திய பேரரசன் விக்ரமாதித்தன் நிறுவிய ஒரு காலாண்டர் (விக்ரம் சம்வாட்) ஆகும். இந்த காலண்டரில் வரும் சம்வாட்டினை தான் பங்கு சந்தையில் கொண்டாடுகின்றனர். இது தீபாவளி திரு நாள் அன்று கொண்டாடப்படுகின்றது. உதாரணத்திற்கு அட்சய திருதியை அன்று 1 கிராம் தங்கமேனும் வாங்கி விட வேண்டும். அன்று வாங்கினால் வருடம் முழுவதும் பொன் பொருள் சேரும் என்பது ஐதீகம். அதனைபோல தான் இந்திய பங்கு சந்தைகளில் கொண்டாடப்படும் முகூர்த்த வர்த்தக தினமும்.

முதல் நாளே எழுச்சி பெற்ற பங்கு சந்தைகள்.. கவனிக்க வேண்டிய ஆட்டோமொபைல் பங்குகள்..! முதல் நாளே எழுச்சி பெற்ற பங்கு சந்தைகள்.. கவனிக்க வேண்டிய ஆட்டோமொபைல் பங்குகள்..!

சம்வாட் என்பது?

சம்வாட் என்பது?

இதில் சம்வாட் என்பது என்ன என்று கேட்பது புரிகின்றது. பங்கு சந்தையில் ஆரம்ப காலத்தில் அதிக ஆர்வம் காட்டியது குஜராத் மற்றும் ராஜஸ்தான் முதலீட்டாளர்கள் தான். இவர்கள் பயன்படுத்திய ஒரு நிதியாண்டு தான் சம்வாட். இது இன்றும் நேபாளில் மற்றும் இந்தியாவிலும் சில பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றது. இவர்கள் தொடங்கிய ஒரு விஷயம் தான் சம்வாட். அதாவது இந்த விக்ரம் சம்வாட்டில் உள்ள தீபாவளி சமயத்தில் கொண்டாடப்படும், ஒரு சிறப்பு வர்த்தக தினமாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில் வணிகம் செய்து லாபம் பார்த்தால், அந்த வருடம் முழுவதும் லாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நடப்பு ஆண்டில் நல்ல ஏற்றம்

நடப்பு ஆண்டில் நல்ல ஏற்றம்

சம்வாட் 2077ம் ஆண்டில் நிபுணர்கள் சுமாரான லாபம் கிடைக்கலாம் என்று கணித்துள்ளனர். ஆனால் நடப்பு ஆண்டில் இதுவரையில் இந்திய குறியீடுகள் 36 - 37% ஏற்றத்தினைக் கண்டுள்ளன. இது வருவாய் மீட்பு மற்றும் சாதகமான சர்வதேச குறியீட்டுக்கு மத்தியில் ஏற்றம் கண்டுள்ளது. இது பங்குகள் ஏற்றம் காணவும் முக்கிய காரணமாக அமைந்தது.

நிபுணர்களின் கணிப்புகள்

நிபுணர்களின் கணிப்புகள்

ஆனால் தற்போது பல காரணிகளும் மாறிக் கொண்டுள்ளன. குறிப்பாக பணவீக்கம் அதிகரித்துக் கொண்டுள்ளது. இப்படி பல காரணிகளும் சந்தைக்கு எதிராக அமைந்துள்ளன. இந்த நிலையில் சம்வாட் 2078ம் ஆண்டில் உள்நாட்டு பங்குகள் 12 - 20% லாபத்தினை கொடுக்கலாம் என கணித்துள்ளனர். எனினும் சிலர் சந்தையானது சற்று சரியலாம் என கணித்துள்ளனர்.

Array

Array

குறிப்பாக சென்செக்ஸ் 72,000 புள்ளிகளை தொடலாம் என கணித்துள்ளனர். இதே நிஃப்டி 21,500 புள்ளிகளை தொடலாம் என்றும் கணித்துள்ளனர். இதே சரிவினைக் கண்டால் 55,500 புள்ளிகளையும், நிஃப்டி 16,500 புள்ளிகளையும் தொடலாம் என்றும் கணித்துள்ளனர்.

 ரிலிகேர் புரோக்கிங் நிறுவனத்தின் நிபுணர் அஜித் மிஷ்ரா இடி-க்கு அளித்துள்ள அறிக்கையில், சென்செக்ஸ் 71,000 புள்ளிகளையும், நிஃப்டி 21,000 புள்ளிகளையும் தொடலாம் என கணித்துள்ளார்.

சரிவு எதிர்பார்ப்பு

சரிவு எதிர்பார்ப்பு

ஜியோஜித் ஃபைனான்ஷியல் நிறுவனத்தின் தலைவர் சென்செக்ஸ் 55,000 புள்ளிகளையும், நிஃப்டி 16,500 புள்ளிகளையும் தொடலாம் என கணித்துள்ளார்.

சம்வாட் 2077ல் பெஞ்ச் மார்க் குறியீடுகள், வரலாற்றில் முதல் முறையாக 18,000 மற்றும் 62,000 புள்ளிகளை தொட்டுள்ளது. இதே கடந்த 2076 சம்வாட்டில் சென்செக்ஸ் 48,443ல் முடிவடைந்தது, மேலும் கடந்த ஆண்டில் 4,385 புள்ளிகள் அல்லது 11.23% ஏற்றம் கண்டது. இதே 2077ல் சென்செக்ஸ் 62,245 என்ற வரவாற்று உச்சத்தினை தொட்டது. இது முந்தைய தீபாவளியுடன் ஒப்பிடும்போது 18,607 புள்ளிகள் அல்லது 42.6% ஏற்றம் கண்டுள்ளது.

சம்வாட் 2078ல் எதிர்பார்ப்பு

சம்வாட் 2078ல் எதிர்பார்ப்பு

2077 சம்வாட்டில் நிஃப்டி இதுவரை 40% அதிகமான வருமானத்தினைக் கொடுத்துள்ளது. அதே நேரம் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் முறையே 70% மற்றும் 80% வருமானத்துடன் முன்னணியில் உள்ளன.

தற்போது பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ள நிலையில், நிறுவனங்களின் வளர்ச்சி விகிதமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதே அளவிலான வளர்ச்சி விகித்னம் 2078ம் ஆண்டிலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல துறைகளில் வளர்ச்சி

பல துறைகளில் வளர்ச்சி

குறிப்பாக வங்கித் துறை, நிதித்துறை, டெக்னாலஜி, ஹவுஸிங் மற்றும் இன்சூரன்ஸ் துறைகளின் வளர்ச்சி விகிதமானது மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக தற்போது மத்திய வங்கியின் வட்டி விகிதம் குறைவாகவே உள்ளது. அரசின் பல ஊக்க நடவடிக்கைகளும் மேற்கொண்டு சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது.

மற்ற துறைகள் நிலவரம் என்ன?

மற்ற துறைகள் நிலவரம் என்ன?

மின்சாரம், ரயில்வே துறை மற்றும் எண்ணெய் & ஆயில் உள்ளிட்ட துறைகள் நடுத்தர காலத்தில் இருந்து, நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே டிராவல், சுற்றுலா, ஓய்வு மற்றும் ரியல் எஸ்டேட் துறையானது போன்ற பிற துறைகள் மற்றும் சிமெண்ட், பிற கட்டுமானப் பொருட்கள் போன்ற துணை நிறுவனங்களும் சம்வாட் 2078ல் நல்ல ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பங்குகளை வாங்கலாம்

இந்த பங்குகளை வாங்கலாம்

இதற்கிடையில் நிபுணர்கள் ஓ.என்.ஜி.சி, கெயில், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, டிசிஎஸ், எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தினை காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் இந்த பங்குகளை வாங்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex at 72,000! Indices sees double digit upside next samvat 2078

Sensex at 72,000! Indices sees double digit upside next samvat 2078
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X