டிசிஎஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வரும் வாரம் முதல் தங்களது காலாண்டு அறிக்கையினை வெளியிட இருப்பதால் முதலீட்டாளர்கள் தங்களது போர்ட்போலியோவை சுருக்கியுள்ளனர்.
எனவே முக்கிய நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கையினை வாசிக்கும் போது மாற்றங்கள் பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இன்றைய நிலை
இன்றைய சந்தை நேரமுடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 0.06 சதவீதம் என 18.88 புள்ளிகள் சரிந்து 33,793 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது. அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 0.01 சதவீதம் 1 புள்ளி உயர்ந்து 10,443.20 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.

துறை சார்ந்த அறிக்கை
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் மெட்டல் நிறுவனப் பங்குகள் 1.47 சதவீதமும், கேப்பிட்டல் கூட்ஸ் துறை பங்க்குகள் 1.22 சதவீதமும், ரியாலிட்டி நிறுவன பங்குகள் 1.21 சதவீதமும், நுகர்வோர் சாதன பங்குகள் 0.98 சதவீதமும் லாபம் அளித்துள்ளன. அதே நேரம் ஆட்டோமொபைல் துறை பங்குகள் 0.26 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன.

லாபம் அளித்த பங்குகள்
அதானி போர்ட்ஸ் (+ 2.78%), எல் அண்ட் டி (+ 2.17%), ஐசிஐசிஐ வங்கி (+ 1.88%), யெஸ் வங்கி (+ 1.33%) மற்றும் கோல் இந்தியா (+ 1.72%).

நட்டம் அளித்த பங்குகள்
டாக்டர் ரெட்டிஸ் (-2.97%), விப்ரோ (-2.73%), ஓஎன்ஜிசி (-1.65%), பஜாஜ் ஆட்டோ (-1.61%) மற்றும் மாருதி (-1.35%).