மத்திய அரசு ஊரக வளர்ச்சிக்காகப் பல முக்கியத் திட்டங்கள் மற்றும் மாற்றங்களைக் கொண்டு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை வர்த்தகம் துவங்கும் முதலே மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்தது மும்பை பங்குச்சந்தை.
ஆனாலும் நேற்று தமிழ் குட்ரிட்டன்ஸ் கணித்ததைப் போலவே இன்று மும்பை பங்குச்சந்தை புதிய உச்சத்தை அடைந்தது.
இன்றைய வர்த்தகம் ஏற்றம் இறக்கமாகவே இருந்தாலும் சென்செக்ஸ் குறியீடு 33,920 புள்ளிகளை அடைந்து புதிய உச்சத்தை அடைந்தது. இதன் தொடர்ச்சியாகக் குஜராத் தேர்தல், மோடி அலை என அனைத்தும் காணாமல் போன காரணத்தால் புதிய முதலீடுகள் பங்குச்சந்தையில் வரவில்லை.
இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 59.36 புள்ளிகள் சரிந்து 33,777.38 புள்ளிகளை அடைந்தது. மேலும் நிஃப்டி குறியீடு 19 புள்ளிகள் சரிந்து 10,444.20 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.