இந்தியாவில் 53,000 நெருங்கும் கொரோனா பாதிப்பு.. பலனாக வீழ்ச்சி காணும் சென்செக்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் கொரோனா தற்போது வேகமெடுத்திருக்கும் நிலையில் பாதிப்ப்பு எண்ணிக்கையானது கிட்டதட்ட 53 ஆயிரத்தினை நெருங்கியுள்ளது. இதே பலி எண்ணிக்கையானது 1,783 ஆக உயர்ந்துள்ளது.

இப்படி நாளுக்கு நாள் வேகமெடுத்து வரும் கொரோனாவால் முதலீட்டாளர்கள் பயத்த்தில் முதலீடுகளை தவிர்த்து வருகின்றனர் என்றே கூறலாம்.

இந்தியாவில் 53,000 நெருங்கும் கொரோனா பாதிப்பு.. பலனாக வீழ்ச்சி காணும் சென்செக்ஸ்..!

 

மேலும் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து, 76 ரூபாய்க்கும் அருகிலேயே இருந்து வருகிறது. இது ஒரு புறம் எனில் இந்திய பங்கு சந்தையும் தன் பங்குக்கு தொடந்து சரிந்து வருகிறது.

குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 160 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 31,524 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 42 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 9,229 ஆகவும் வர்த்தகமாகியும் வருகிறது.

இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 75.75 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ-யில் உள்ள அனைத்து துறை சார்ந்த குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே அல்லது மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.

இதில் அதானி போர்ட்ஸ், ஹெச்சிஎல் டெக், டாக்டர் ரெட்டி லேப்ஸ், எம் & எம், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்யுஎல், ஒஎன்ஜிசி, கோட்டக் மகேந்திரா, பிரிட்டானியா, பிபிசிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப்லூசர்களாகவும் என் எஸ் இ குறியீட்ட்டில் காணப்படுகிறது.

இதே ஹெச்சிஎல் டெக், ஆக்ஸிஸ் பேங்க், சன் பார்மா, பஜாஜ் பைனான்ஸ், எம் & எம் டாப் கெயினராகவும், ஹெச்யுஎல், ஒஎன்ஜிசி, கோட்டக் மகேந்திரா, பவர் கிரிட் கார்ப், நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகிறது.

ஹெச்சிஎல் டெக் தனது காலாண்டு முடிவில் 3,154 கோடி ரூபாய் லாபம் கண்டுள்ள நிலையில், டிவிடெண்டும் 2 ரூபாய் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த பங்கின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக யெஸ் பேங்க் பங்கின் விலையானது 13.09% அதிகரித்து காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex, nifty again in red, pls check other details here

Sensex fall 160, nifty trade above 9,200
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X