மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை.. வெறும் 20 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடு இருந்தாலும் முதலீட்டாளர்கள் கர்நாடக தேர்தல் முடிவுகளைக் கண்டு அச்சத்துடனே உள்ளனர். கர்நாடக மாநிலத்தில் சனிக்கிழமை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை முடிவுகள் வெளியாகிறது.

இதன் காரணமாக இன்று பங்குச்சந்தையில் முதலீட்டு அளவுகள் அதிகளவில் சரிந்தது. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 20.92 புள்ளிகள் சரிந்து 35,556.71 புள்ளிகளை அடைந்துள்ளது, இதேபோல் நிஃப்டி குறியீடு வெறும் 0.10 புள்ளிகள் உயர்ந்து 10,806.60 புள்ளிகளை எட்டி திங்கட்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.

மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை.. வெறும் 20 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

 

மேலும் இன்று மாலை வெளியாகும் மொத்த விலை பணவீக்கம் பெரிய அளவிலான தாக்கத்தையும் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்தது.

மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் என்டிபிசி 2.51 சதவீதம் வரையில் உயர்ந்ததது, இதைத் தொடர்ந்து டாக்டர் ரெட்டி, இண்டஸ்இந்த் வங்கி, எஸ்பிஐ வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், பவர் கிரிட் ஆகிய நிறுவனங்கள் கணிசமான உயர்வை பதிவு செய்தது. இதனுடன் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex, Nifty close flat ahead of Karnataka election results

Sensex, Nifty close flat ahead of Karnataka election results
Story first published: Monday, May 14, 2018, 16:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?