அமெரிக்காவின் 40 வருட உச்ச பணவீக்க அளவுகளும், வட்டி உயர்வு எதிரொலிகளும் ஆசிய சந்தையில் மந்தமான வர்த்தகத்தை உருவாக்கியுள்ளது. இதோடு ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான பேச்சுவார்த்தையில் எவ்விதமான தீர்வும் எட்டப்படாத நிலையில் உக்ரைன் நாட்டின் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து முன்னேறி வருகிறது.
மேலும் கச்சா எண்ணெய் விலை, உணவு பொருட்களின் விலை, உற்பத்தி துறைக்கான பல்வேறு மூலப்பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டு உள்ளதால் உலக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
இதன் வாயிலாக இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் துவங்கினாலும், சில மணி நேரத்திலேயே சரிவை தழுவியது.
Mar 11, 2022 3:56 PM
சென்செக்ஸ் குறியீடு 85.91 புள்ளிகள் உயர்ந்து 55,550.30 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 11, 2022 3:56 PM
நிஃப்டி குறியீடு 35.65 புள்ளிகள் உயர்ந்து 16,630.45 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 11, 2022 3:56 PM
நிஃப்டி ஆயில் கேஸ் குறியீடு 0.7 சதவீதம் உயர்வு
Mar 11, 2022 3:55 PM
ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்கான EOI சமர்ப்பிக்க மார்ச் 25 வரையில் நீட்டிப்பு
Mar 11, 2022 3:55 PM
நிஃப்டி ஆட்டோமொபைல் குறியீடு 0.40 சதவீதம் சரிவு
Mar 11, 2022 3:55 PM
ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரி நீரஜ் பஸ்ரூ ராஜினாமா
Mar 11, 2022 3:55 PM
டிசம்பர் காலாண்டில் எல்ஐசி 234.9 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது
Mar 11, 2022 2:18 PM
சென்செக்ஸ் குறியீடு 77.06 புள்ளிகள் உயர்ந்து 55,542.05 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 11, 2022 2:18 PM
நிஃப்டி குறியீடு 27.65 புள்ளிகள் உயர்ந்து 16,622.55 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 11, 2022 2:17 PM
ஹெச்டிஎப்சி லைப் பங்குகள் 1 சதவீதம் சரிவு
Mar 11, 2022 2:17 PM
ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் பங்குகள் 2 சதவீதம் சரிவு
Mar 11, 2022 2:17 PM
ஐசிஐசிஐ வங்கி 5 சதவீதம் NARCL நிறுவன பங்குகளை 137.5 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது
Mar 11, 2022 2:17 PM
சீன முதலீடுகள் இந்தியாவுக்கு மாறலாம் - மார்க் மொபியஸ்
Mar 11, 2022 1:06 PM
சென்செக்ஸ் குறியீடு 79.76 புள்ளிகள் உயர்ந்து 55,544.15 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 11, 2022 1:06 PM
நிஃப்டு குறியீடு 14.00 புள்ளிகள் உயர்ந்து 16,608.90 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 11, 2022 1:05 PM
பிப்ரவரி மாதம் வாகன விற்பனை 17.8 சதவீதம் சரிவு
Mar 11, 2022 1:05 PM
கார் விற்பனை 6 சதவீதம் சரிவு
Mar 11, 2022 1:05 PM
Colgate-Palmolive இந்தியாவின் புதிய சிஇஓ- நிர்வாகத் தலைவராகப் பிரபா நரசிம்மன் நியமனம்
Mar 11, 2022 1:05 PM
Colgate-Palmolive பங்குகள் 2 சதவீதம் உயர்வு
Mar 11, 2022 1:05 PM
Blinkit நிறுவனத்திற்குச் சோமேட்டோ நிறுவனம் சுமார் 100 மில்லியன் டாலர் அளவிலான கடனை அளிக்க முடிவு
Mar 11, 2022 1:05 PM
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள Blinkit நிறுவனத்தில் கடன் கொடுக்கும் காரணத்தால் சோமேட்டோ பங்குகள் 2.2 சதவீதம் சரிவு
Mar 11, 2022 1:04 PM
குஜராத் கேஸ் RLNG விலையை உயர்த்த உள்ளதாக அறிவிப்பு
Mar 11, 2022 1:04 PM
சிப்லா பங்குகள் 4.96 சதவீதம் உயர்வு
Mar 11, 2022 1:04 PM
அமெரிக்காவின் கிரேட் ஹைய்ட்ஸ் இன்க் நிறுவனப் பங்குகளை வாங்க டைட்டன் ஒப்பந்தம்
Mar 11, 2022 11:13 AM
சென்செக்ஸ் குறியீடு 86.55 புள்ளிகள் உயர்ந்து 55,550.94 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 11, 2022 11:13 AM
நிஃப்டி குறியீடு 19.90 புள்ளிகள் உயர்ந்து 16,614.80 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 11, 2022 11:12 AM
CDSL பங்குகள் 6 சதவீதம் வரையில் உயர்வு
Mar 11, 2022 11:12 AM
ஆட்டோமொபைல் பங்குகள் அதிகப்படியான சரிவை பதிவு செய்துள்ளது
Mar 11, 2022 11:12 AM
டாடா மோட்டார்ஸ் பங்குகள் 1.54 சதவீதம் சரிவு
Mar 11, 2022 11:12 AM
சன் பார்மா பங்குகள் 2.33 சதவீதம் உயர்வு
Mar 11, 2022 11:12 AM
மாருதி சுசூகி 1.25 சதவீதம் சரிவு
Mar 11, 2022 11:07 AM
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 76.32 ஆக சரிந்துள்ளது
Mar 11, 2022 11:07 AM
மீடியா, உலோகம், ரியல் எஸ்டேட் துறை பங்குகளில் அதிகப்படியான முதலீடு
Mar 11, 2022 11:06 AM
14 வருட உச்ச விலையில் இருந்து கச்சா எண்ணெய் சரிவு
Mar 11, 2022 11:06 AM
உக்ரைன் நாட்டிற்காக 13.6 பில்லியன் டாலர் உதவி தொகை அளிக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
Mar 11, 2022 11:06 AM
அமெரிக்கச் சந்தையில் எஸ் அண்ட் பி 500, டாவ் ஜோன்ஸ், நாஸ்டாக் காம்போசிஸ் குறியீடுகள் 1 சதவீதம் வரையில் சரிவு
Mar 11, 2022 11:06 AM
ஆசிய சந்தையில் முன்னணி சந்தைகள் அனைத்தும் சரிவு
Mar 10, 2022 4:10 PM
சென்செக்ஸ் குறியீடு 817.06 புள்ளிகள் உயர்ந்து 55,464.39 புள்ளிகளை அடைந்துள்ளது
Mar 10, 2022 4:09 PM
நிஃப்டி குறியீடு 249.55 புள்ளிகள் உயர்ந்து 16,594.90 புள்ளிகள் அடைந்துள்ளது
Mar 10, 2022 2:50 PM
சென்செக்ஸ் குறியீடு 771.61 புள்ளிகள் உயர்ந்து 55,418.94 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 10, 2022 2:49 PM
நிஃப்டி குறியீடு 226.30 புள்ளிகள் உயர்ந்து 16,571.65 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 10, 2022 2:49 PM
ஐரோப்பிய பங்குகள் சரிவுடன் துவங்கியது
Mar 10, 2022 2:49 PM
ஆசிய, அமெரிக்க சந்தையில் உயர்வுடன் துவங்கினாலும் ஐரோப்பிய சந்தை சரிவு
Mar 10, 2022 2:49 PM
பிரிட்டன் FTSE 0.7 சதவீதம் சரிவு
Mar 10, 2022 2:49 PM
பிரான்ஸ் CAC குறியீடு 1.2 சதவீதம் சரிவு
Mar 10, 2022 2:49 PM
ஜெர்மனி DAX குறியீடு 1.2 சதவீதம் சரிவு
Mar 10, 2022 2:48 PM
எஸ் அண்டி பி பியூச்சர்ஸ் 0.6 சதவீதம் சரிவு
Mar 10, 2022 2:48 PM
கச்சா எண்ணெய் விலை இன்று மிகப்பெரிய சரிவை பதிவு செய்துள்ளது
Mar 10, 2022 2:47 PM
பிட்காயின் விலை 6.6 சதவீதம் வரையில் சரிந்து 39,172.75 டாலராக உள்ளது
Mar 10, 2022 2:47 PM
எதிரியம் 5.1 சதவீதம் சரிந்து 2,588.09 டாலராக சரிவு
Mar 10, 2022 2:47 PM
4400 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை BGR எனர்ஜி கைப்பற்றியுள்ளது
Mar 10, 2022 2:47 PM
5.5 லட்சம் டன் சர்க்கரைக்கான ஆர்டரை இந்திய சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது
Mar 10, 2022 2:46 PM
கச்சா எண்ணெய் விலை விரைவில் 100 டாலர் வரையில் சரியலாம் என பல கணிப்புகள் வெளியாகியுள்ளது
Mar 10, 2022 2:35 PM
வெறும் 650 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. டெக் மஹிந்திரா பங்குகள் சரிவு..!
Mar 10, 2022 1:13 PM
சென்செக்ஸ் குறியீடு 1004.31 புள்ளிகள் உயர்ந்து 55,651.64 புள்ளிகளை எட்டியது
Mar 10, 2022 1:13 PM
நிஃப்டி குறியீடு 294.55 புள்ளிகள் உயர்ந்து 16644.20 புள்ளிகள் எட்டியது
Mar 10, 2022 1:13 PM
பங்குச்சந்தையை 5 மாநில தேர்தல் முடிவுகளை விடவும் ரஷ்ய - உக்ரைன் போர் பதற்றம் தான் அதிகம் பாதிக்கிறது - ஜிவி கிரி
Mar 10, 2022 1:13 PM
பியூச்சர் ரீடைல் நிறுவனத்திற்கு 342 பெரிய கடைகளுக்கும், 493 சிறிய பார்மெட் கடைகளுக்கும் ஒப்பந்த முறிவு நோட்டீஸ் வந்துள்ளது
Mar 10, 2022 1:12 PM
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 835 பியூச்சர் ரீடைல் கடைகளை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது
Mar 10, 2022 1:12 PM
835 கடைகளில் இருந்து தான் பியூச்சர் ரீடைல் சுமார் 55-65 சதவீத வருமானத்தை பெறுகிறது
Mar 10, 2022 1:12 PM
நிஃப்டி வங்கித்துறை குறியீடு 4 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது
Mar 10, 2022 1:12 PM
பேடிஎம், PB பின்டெக் பங்குகள் 5 சதவீதம் உயர்வு
Mar 10, 2022 11:26 AM
சென்செக்ஸ் குறியீடு 1333.42 புள்ளிகள் உயர்ந்து 55,980.75 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 10, 2022 11:26 AM
நிஃப்டி குறியீடு 379.90 புள்ளிகள் உயர்ந்து 16,725.25 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 10, 2022 11:26 AM
எல் அண்டி பங்குகள் 4 சதவீதம் உயர்வு, புதிய கட்டுமான திட்டத்தைக் கைப்பற்றியதன் எதிரொலி
Mar 10, 2022 11:25 AM
2689 கோடி ரூபாய் மதிப்பிலான கோபோர்ஜ் பங்குகள் கைமாற்றம்
Mar 10, 2022 11:25 AM
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 76.28 ஆக உள்ளது
Mar 10, 2022 11:25 AM
ICRA, GNFC, Swan Energy ஆகிய நிறுவனங்கள் 52 வார உயர்வைத் தொட்டது
Mar 10, 2022 11:25 AM
சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 1590 புள்ளிகள் வரையில் உயர்வு
Mar 10, 2022 11:24 AM
ஆசிய சந்தையில் ஜப்பான், சீனா, ஹாங்காங், தென் கொரியா, சிங்கப்பூர் சந்தைகள் 1.4 முதல் 3.4 சதவீதம் வரையில் உயர்வடைந்தது
Mar 9, 2022 3:43 PM
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1223.24 புள்ளிகள் உயர்ந்து 54,647.33 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 9, 2022 3:43 PM
நிஃப்டி குறியீடு 331.90 புள்ளிகள் உயர்ந்து 16,345.35 புள்ளிகளை உயர்ந்து 16,345.35 புள்ளிகளை எட்டியுள்ளது.
Mar 9, 2022 3:27 PM
ரயில் விகாஸ் நிகாம் மார்ச் 16ஆம் தேதி இடைக்கால ஈவுத்தொகை அளிப்பதாக அறிவித்துள்ளது
Mar 9, 2022 3:27 PM
உக்ரைன் - ரஷ்யா போரின் பாதிப்பு நீண்ட காலம் இருக்கும் - ரகுராம் ராஜன்
Mar 9, 2022 3:27 PM
அரசு சொத்துக்களைப் பணமாக்க National Land Monetisation Corp உருவாக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல்
Mar 9, 2022 3:26 PM
National Land Monetisation Corp உருவாக்க 5000 கோடி ரூபாய் மூலதனத்தில் துவக்கம்
Mar 9, 2022 3:26 PM
ஹிந்துஸ்தான் யூனிலீவரின் பியூட்டி, நல்வாழ்வு, பர்சனல் கேர் பிரிவின் தலைவராக மதுசூதன ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்
Mar 9, 2022 3:26 PM
பிட்காயின் விலை 42000 டாலரை தொட்டது
Mar 9, 2022 3:26 PM
4 நாள் சரிவுக்குப் பின் ஐரோப்பிய சந்தை உயர்வுடன் துவங்கியுள்ளது
Mar 9, 2022 3:26 PM
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 5.4 சதவீதம் வரையில் உயர்ந்து 2350 ரூபாயை தாண்டியுள்ளது
Mar 9, 2022 3:26 PM
ஏசியன் பெயின்ட்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் 5 சதவீதத்திற்கு மேல் உயர்வு
Mar 9, 2022 12:47 PM
சென்செக்ஸ் குறியீடு 870.96 புள்ளிகள் உயர்ந்து 54,295.05 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 9, 2022 12:47 PM
நிஃப்டி குறியீடு 232.90 புள்ளிகள் உயர்ந்து 16,246.35 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 9, 2022 12:46 PM
ஜனவரியில் 11517 கோடி ரூபாயாக இருந்த எஸ்பிஐ முதலீடு பிப்ரவரி மாதத்தில் 11438 கோடி ரூபாயாக சரிவு
Mar 9, 2022 12:46 PM
பிப்ரவரி மாதத்தில் பங்கு சந்தையில் 19,645 கோடி ரூபாய் முதலீடு
Mar 9, 2022 12:46 PM
ரிலையன்ஸ் பங்குகளுக்கு 2350 ரூபாய் டார்கெட் விலை
Mar 9, 2022 12:46 PM
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் மீது அதிகப்படியான முதலீடு
Mar 9, 2022 12:45 PM
மத்திய அரசு NALCO-விடம் இருந்து 283 கோடி ரூபாயும், BPCL-யிடம் இருந்து 575 கோடி ரூபாயும், MSTC-யிடம் இருந்து 30 கோடி ரூபாயும் ஈவுத்தொகையாக பெற்றுள்ளது
Mar 9, 2022 12:45 PM
சாஸ்திரி பவனில் கச்சா எண்ணெய் விலை நிர்ணயம் செய்யும் ஆலோசனை கூட்டம் நடை பெற்று வருகிறது
Mar 9, 2022 11:18 AM
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க சந்தையில் எஸ் அண்ட் பி 500, டாவ் ஜோன்ஸ், நாஸ்டாக் காம்போசிட் ஆகிய 3 முக்கிய குறியீடுகளும் சரிவு
Mar 9, 2022 11:18 AM
கச்சா எண்ணெய் விலை 130 டாலரை தாண்டியது
Mar 9, 2022 11:17 AM
சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 2,050 டாலராக உள்ளது
Mar 9, 2022 11:17 AM
வெளிநாட்டு விமான சேவையை இயக்க மத்திய அரசு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் பங்குகள் 9 சதவீதம் வரையில் உயர்வு
Mar 9, 2022 11:17 AM
2500 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமான திட்டத்தை எல் அண்ட் டி கன்ஸ்ட்ராக்ஷன் கைப்பற்றியுள்ளது
Mar 9, 2022 11:17 AM
ஐடி நிறுவன பங்குகள் தொடர்ந்து உயர்வு
Mar 9, 2022 11:12 AM
சென்செக்ஸ் குறியீடு 515.87 புள்ளிகள் உயர்ந்து 53,939.96 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 9, 2022 11:11 AM
நிஃப்டி குறியீடு 129.35 புள்ளிகள் உயர்ந்து 16,142.80 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 9, 2022 11:11 AM
நிஃப்டி மீடியா குறியீடு 2.1 சதவீதம் உயர்வு
Mar 9, 2022 11:11 AM
நிஃப்டி பார்மா குறியீடு 1.8 சதவீதம் உயர்வு
Mar 9, 2022 11:11 AM
நிஃப்டி ஹெல்த்கேர் குறியீடு 1.8 சதவீதம் உயர்வு
Mar 9, 2022 11:11 AM
நிஃப்டி மெட்டல் குறியீடு 0.4 சதவீதம் சரிவு
Mar 9, 2022 11:11 AM
மார்ச் 8ஆம் தேதி 8143 கோடி ரூபாயை அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையிலிருந்து வெளியேற்றியுள்ளனர்
Mar 9, 2022 11:10 AM
மார்ச் 8ஆம் தேதி 8143 கோடி ரூபாயை அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேற்றியுள்ளனர்
Mar 8, 2022 3:39 PM
சென்செக்ஸ் குறியீடு 581.34 புள்ளிகள் உயர்ந்து 53,424.09 புள்ளிகளை அடைந்துள்ளது
Mar 8, 2022 3:39 PM
நிஃப்டி குறியீடு 150.30 புள்ளிகள் உயர்ந்து 16,013.45 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 8, 2022 3:38 PM
நிஃப்டி மெட்டல் குறியீடு 2 சதவீதம் வரையில் சரிவு
Mar 8, 2022 3:38 PM
NALCO, SAIL மற்றும் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2 சதவீதம் வரையில் சரிவு
Mar 8, 2022 3:38 PM
அதானி போர்ட்ஸ் நிறுவனம் இந்தியன் ஆயில் உடன் ஒப்பந்தம்
Mar 8, 2022 3:38 PM
முந்திரா துறைமுகத்தில் இந்தியன் ஆயில் எண்ணெய் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய அதானி போர்ட்ஸ் உடன் ஒப்பந்தம்
Mar 8, 2022 3:38 PM
5 நாளில் மதர்சன் சுமி பங்குகள் 18 சதவீதம் வரையில் சரிவு
Mar 8, 2022 3:37 PM
சன் பார்மா, டாடா கன்ஸ்யூமர், ஐஓசி பங்குகள் சிறப்பான வளர்ச்சி
Mar 8, 2022 3:37 PM
பிஎஸ்ஈ ரீடைல் குறியீடு 1 சதவீதம் வரையில் உயர்வு
Mar 8, 2022 3:37 PM
ஸ்ரீராம் சிட்டி நிர்வாக குழு இடைக்கால ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு 27 ரூபாய் அறிவித்துள்ளது
Mar 8, 2022 3:36 PM
இந்திரபிரஸ்தா கேஸ் பங்குகள் 9.86 சதவீதம் உயர்வு
Mar 8, 2022 3:36 PM
கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 135 டாலர் வரையில் உயரும் என கோல்மேன் சாச்சஸ் கணிப்பு
Mar 8, 2022 3:36 PM
1 பில்லியன் டாலர் ஐபிஓ வெளியிட ஸ்விக்கி ஜேபி மோர்கன் மற்றும் ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ்-ஐ தேர்வு செய்துள்ளது
Mar 8, 2022 1:21 PM
சென்செக்ஸ் குறியீடு 438.42 புள்ளிகள் சரிந்து 52,404.33 புள்ளிகளை எட்டியது
Mar 8, 2022 1:21 PM
நிஃப்டி குறியீடு 145.25 புள்ளிகள் சரிந்து 15,717.90 புள்ளிகளை எட்டியது
Mar 8, 2022 1:21 PM
2022ல் அமெரிக்க பெடரல் ரிசர்வ் 5 முறை வட்டியை உயர்த்தும் - வெல்ஸ் பார்கோ கேரி அறிவிப்பு
Mar 8, 2022 1:20 PM
ஜூன் 2022க்குள் ஷிப்பிங் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா தனியாகப் பிரிக்கப்படும்
Mar 8, 2022 1:20 PM
கூகுள் கிளவுட் உடன் ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் கூட்டணி
Mar 8, 2022 1:20 PM
ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹீரோமோட்டோ கார்ப் 52 வார சரிவை தொட்டது
Mar 8, 2022 1:20 PM
ரிசர்வ் வங்கி சக்திகாந்த தாஸ் பியூச்சர் போனுக்கான டிஜிட்டல் பேமெண்ட் தளமான 123Pay சேவையை அறிமுகம் செய்தார்
Mar 8, 2022 1:19 PM
ஜெனரலி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பங்குகளை விற்பனை செய்வதற்கு ஃபியூச்சர் எண்டர்பிரைசஸ் நீதிமன்ற அனுமதியைப் பெற்றது
Mar 8, 2022 11:26 AM
சென்செக்ஸ் குறியீடு 203.34 புள்ளிகள் சரிந்து 52,639.41 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 8, 2022 11:26 AM
நிஃப்டி குறியீடு 67.15 புள்ளிகள் சரிந்து 15,796.00 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 8, 2022 11:26 AM
நிஃப்டி மெட்டல் 2 சதவீதம் சரிவு
Mar 8, 2022 11:25 AM
அமெரிக்க டாருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 76.96 என்ற வரலாற்று சரிவை பதிவு செய்தது
Mar 8, 2022 11:25 AM
சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் 400 புள்ளிகள் வரையில் சரிவு
Mar 8, 2022 11:25 AM
ஆசிய சந்தையில் ஜப்பான், சீனா, தென் கொரியா, சிங்கப்பூர் சந்தைகள் சரிவு
Mar 8, 2022 11:25 AM
ஹாங்காங் குறியீடு 0.5 சதவீதம் உயர்வு
Mar 8, 2022 11:25 AM
அதானி போர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து நார்வே வெல்த் பண்ட் நிறுவனம் தனது முதலீட்டை வெளியேற்றத் திட்டம்
Mar 8, 2022 11:25 AM
அதானி போர்ட்ஸ் பங்குகள் 1.71 சதவீதம் உயர்வு
Mar 8, 2022 11:25 AM
பிப்ரவரி மாதம் JSW ஸ்டீல் நிறுவனத்தின் ஸ்டீல் உற்பத்தி கடந்த ஆண்டை விடவும் 21 சதவீதம் உயர்வு
Mar 8, 2022 11:24 AM
டிஷ் டிவி பங்குகள் 6.38 சதவீதம் உயர்வு
Mar 8, 2022 11:24 AM
OPEC அமைப்பு US Shale அதிகாரிகள் உடன் ஆலோசனை
Mar 7, 2022 4:54 PM
நிஃப்டி வங்கி குறியீடு உச்சத்திலிருந்து சுமார் 20 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது
Mar 7, 2022 4:30 PM
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1491.06 புள்ளிகள் சரிந்து 52,842.75 புள்ளிகளை தொட்டது
Mar 7, 2022 4:30 PM
நிஃப்டி குறியீடு 382.20 புள்ளிகள் சரிந்து 15,863.15 புள்ளிகளை அடைந்தது
Mar 7, 2022 4:30 PM
நிஃப்டி வங்கி குறியீடு கடந்த 1 வாரத்தில் 2வது முறையாக ஒரே நாளில் 4 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்துள்ளது
Mar 7, 2022 4:30 PM
BSE-பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு மார்ச் மாதத்தில் இதுவரை ரூ.11 லட்சம் கோடிக்கு மேல் சரிந்துள்ளது
Mar 7, 2022 4:30 PM
BSE பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு திங்கட்கிழமை மட்டும் சுமார் ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் சரிந்துள்ளது
Mar 7, 2022 4:30 PM
நிஃப்டி ரியாலிட்டி, பொதுத்துறை வங்கி அதிகப்படியான மிகவும் சரிவைப் பதிவு செய்தது
Mar 7, 2022 4:29 PM
நிஃப்டி உலோகம், பொதுத்துறை நிறுவன குறியீடுகள் உயர்வு
Mar 7, 2022 4:29 PM
வாலட்டிலிட்டி இன்டெக்ஸ் 5 சதவீதம் அதிகரித்துள்ளது
Mar 7, 2022 4:29 PM
HDFC வங்கி, HDFC, HUL, மற்ற 7 நிஃப்டி பங்குகள் 52 வார சரிவைத் தொட்டன
Mar 7, 2022 4:29 PM
12 நிஃப்டி பங்குகள் 5 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாகச் சரிந்தன
Mar 7, 2022 4:28 PM
கச்சா எண்ணெய் விலை உயர்வு மத்தியில் ஓஎன்ஜிசி பங்கு விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது
Mar 7, 2022 4:27 PM
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் 76.96 ஆகச் சரிவு
Mar 7, 2022 2:05 PM
சென்செக்ஸ் குறியீடு 1573.06 புள்ளிகள் சரிந்து 52,760.75 புள்ளிகளை எட்டியது
Mar 7, 2022 2:05 PM
நிஃப்டி குறியீடு 416.20 புள்ளிகள் சரிந்து 15,829.15 புள்ளிகளை எட்டியது
Mar 7, 2022 2:05 PM
வங்கி பங்குகள் அதிகப்படியான சரிவு
Mar 7, 2022 2:05 PM
ஆக்சிஸ் வங்கி பங்குகள் 6 சதவீதம் வரையில் சரிவு
Mar 7, 2022 2:05 PM
மார்ச் 10ஆம் தேதி ஜின்டால் ஸ்டீல் மற்றும் பவர் இடைக்கால ஈவுத்தொகையை வெளியிடுகிறது
Mar 7, 2022 2:04 PM
நிதியியல் சேவைக்காக பார்தி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி கூட்டணி
Mar 7, 2022 2:04 PM
நுகர்வோர் சந்தை சார்ந்த அனைத்து பங்குகளும் சரிவு
Mar 7, 2022 2:04 PM
டெலிநார் நிறுவனத்தின் திட்டத்தை இன்போசிஸ் கைப்பற்றியது
Mar 7, 2022 2:04 PM
ஐரோப்பிய இயற்கை எரிவாயு 17 சதவீதம் அதிகரித்து வரலாற்று உச்சத்தைப் பெற்றது
Mar 7, 2022 2:03 PM
காலை வர்த்தக சரிவில் இருந்து மும்பை பங்குச்சந்தை கணிசமாக மீண்டுள்ளது
Mar 7, 2022 11:47 AM
பிட்காயின் விலை 38000 டாலருக்கு கீழ் சரிவு
Mar 7, 2022 11:46 AM
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக கிரிப்டோகரன்சி சரிவு
Mar 7, 2022 11:46 AM
கிரிப்டோ சந்தையின் மொத்த மதிப்பு 2 டிரில்லியன் டாலருக்கு கீழ் சரிவு
Mar 7, 2022 11:46 AM
என்எஸ்ஈ கொடுத்த அப்டேட்.. நிப்டி, பேங்க் நிஃப்டி சரிவர இயங்கவில்லை
Mar 7, 2022 11:34 AM
சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் அதிகப்படியாக 1743 புள்ளிகள் வரையில் சரிவுடைந்தது
Mar 7, 2022 11:33 AM
சென்செக்ஸ் குறியீடு 1,267.5 புள்ளிகள் சரிந்து 53,066.31 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 7, 2022 11:33 AM
நிஃப்டு குறியீடு 345.75 புள்ளிகள் சரிந்து 15,899.60 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 7, 2022 11:32 AM
ஞாயிற்றுக்கிழமை என்எஸ்ஈ சித்ரா ராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டார்
Mar 7, 2022 11:31 AM
தங்கம் விலை 19 மாத உயர்வு
Mar 7, 2022 11:31 AM
ஒரு அவுன்ஸ் தங்கம் 2000 டாலரை நோக்கி செல்கிறது
Mar 7, 2022 11:31 AM
கச்சா எண்ணெய் விலை 130 டாலரை தொட்டது
Mar 7, 2022 11:31 AM
பிவிஆர் மற்றும் சினிப்போலீஸ் இணைக்கப் பேச்சுவார்த்தை
Mar 7, 2022 11:31 AM
பார்மா பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
Mar 7, 2022 11:30 AM
GSK பார்மா பங்குகள் 1.65 சதவீதம் உயர்வு
Mar 7, 2022 11:30 AM
டிவிஎஸ் பங்குகள் 7.35 சதவீதம் சரிவு
Mar 7, 2022 11:30 AM
மாருதி சுசூகி பங்குகள் 6.78 சதவீதம் சரிவு
Mar 7, 2022 11:30 AM
கோல் இந்தியா பங்குகள் 1.5 சதவீதம் உயர்வு
Mar 7, 2022 10:57 AM
இந்தியா VIX குறியீடு 8 சதவீதம் உயர்வு
Mar 7, 2022 10:56 AM
ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்டிஎப்சி, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பங்குகள் அதிகளவில் விற்பனை
Mar 7, 2022 10:56 AM
வரலாற்றுச் சரிவில் ரூபாய் மதிப்பு
Mar 7, 2022 10:56 AM
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 76.93 ஆக சரிவு
Mar 7, 2022 10:56 AM
அதிகப்படியான எரிபொருள், உலோக விலை ஆட்டோமொபைல் துறையைப் பாதிக்கும்
Mar 7, 2022 10:56 AM
MCX கச்சா எண்ணெய் குறியீடு அப்பர் சர்கியூட் அளவை தொட்டது
Mar 4, 2022 3:50 PM
சென்செக்ஸ் குறியீடு 768.87 புள்ளிகள் சரிந்து 54,333.81 புள்ளிகளை அடைந்துள்ளது
Mar 4, 2022 3:50 PM
நிஃப்டி குறியீடு 252.70 புள்ளிகள் சரிந்து 16,245.35 புள்ளிகளை அடைந்துள்ளது
Mar 4, 2022 3:28 PM
டாக்டர் ரெட்டி பங்குகள் 2.73 சதவீதம் உயர்வு
Mar 4, 2022 3:28 PM
ஐடிசி பங்குகள் 2.82 சதவீதம் உயர்வு
Mar 4, 2022 3:28 PM
டெக் மஹிந்திரா பங்குகள் 1.64 சதவீதம் உயர்வு
Mar 4, 2022 3:28 PM
டைட்டன் பங்குகள் 5.06 சதவீதம் சரிவு
Mar 4, 2022 3:28 PM
சென்செக்ஸ் குறியீடு 764.24 புள்ளிகள் சரிந்து 54,338.44 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 4, 2022 3:28 PM
நிஃப்டி குறியீடு 261.30 புள்ளிகள் சரிந்து 16,236.75 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 4, 2022 3:16 PM
டிவிஎஸ் மோட்டார்ஸ் பங்குகள் 5 சதவீதம் சரிவு
Mar 4, 2022 3:16 PM
டாடா மோட்டார்ஸ், அசோக் லேலாண்ட், ஹீரோ, மஹிந்திரா நிறுவன பங்குகள் 4 சதவீதம் சரிவு
Mar 4, 2022 3:15 PM
சிப் தட்டுப்பாடு காரணமான நிஸ்ஸான் ஜப்பான் தொழிற்சாலையை 5 நாள் மூடியது
Mar 4, 2022 3:15 PM
சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலை 1.17 சதவீதம் அதிகரித்து 108.9 டாலராக உள்ளது
Mar 4, 2022 3:15 PM
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.75 சதவீதம் அதிகரித்து 111.3 டாலராக உள்ளது
Mar 4, 2022 12:29 PM
ரஷ்யா-வில் அனைத்து விளம்பர வர்த்தகத்தையும் கூகுள் நிறுவனம் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது
Mar 4, 2022 12:29 PM
கூகுள் முதல் முறையாக ஒரு நாட்டில் விளம்பர வர்த்தகத்தை மொத்தமாக தடை செய்துள்ளது
Mar 4, 2022 12:29 PM
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பற்றி தவறான தகவல் கொண்ட தளத்தில் விளம்பரங்கள் காட்டுவதை நிறுத்த ரஷ்ய கட்டுப்பாட்டு அமைப்பு கோரிய நிலையில், கூகுள் மொத்தமாக விளம்பர சேவையை தடை செய்துள்ளது
Mar 4, 2022 12:28 PM
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 76 ஆக சரிவு
Mar 4, 2022 12:28 PM
பிப்ரவரி மாதம் மொத்த கார் விற்பனை 8 சதவீதம் சரிவு
Mar 4, 2022 12:28 PM
ஆட்டோமொபைல் நிறுவன பங்குகள் சரிவு
Mar 4, 2022 12:28 PM
சிட்டி வங்கி தனது கிரெடிட் கார்டு வர்த்தக விற்பனையை அடுத்த வார இறுதிக்குள் முடிக்க உள்ளது
Mar 4, 2022 12:27 PM
சிட்டி வங்கியின் கிரெடிட் கார்டு வர்த்தகத்தைக் கைப்பற்றும் போட்டியில் ஆக்சிஸ் வங்கி முன்னிலை
Mar 4, 2022 12:26 PM
சென்செக்ஸ் குறியீடு 755.65 புள்ளிகள் சரிந்து 54,347.03 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 4, 2022 12:26 PM
நிஃப்டி குறியீடு 226.95 புள்ளிகள் சரிந்து 16,271.10 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 4, 2022 12:06 PM
எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தில் புதிதாக முதலீடு செய்வது அர்த்தமற்றது - தீபன் மேத்தா
Mar 4, 2022 12:06 PM
வோடபோன் ஐடியா 6 சதவீதம் வரையில் சரிவு
Mar 4, 2022 12:06 PM
ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி, எஸ்பிஐ கார்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், அல்ட்ராடெக் பங்குகள் 52 வார சரிவு
Mar 4, 2022 12:05 PM
பேங்க் ஆப் ரஷ்யா வெளிநாட்டு நாணயத்தை மாற்றுவதற்கான கட்டணத்தை 13 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைந்தது
Mar 4, 2022 12:05 PM
கச்சா எண்ணெய் விலை உயர்வால் இண்டிகோ பங்குகள் 4 சதவீதம் வரையில் சரிவு
Mar 4, 2022 12:05 PM
இந்தியாவில் பிப்ரவரி மாத சேவை துறை PMI குறியீடு 51.8 ஆக உயர்ந்துள்ளது
Mar 4, 2022 12:04 PM
ஜென் ஏர்வேஸ்-ன் புதிய சிஇஓ சஞ்சீவ் கபூர்
Mar 4, 2022 12:04 PM
இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் 4 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளனர்
Mar 4, 2022 12:04 PM
ஏர்டெல், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹீரோ மோட்டோ பங்குகள் 52 வார சரிவை எட்டியுள்ளது
Mar 4, 2022 10:34 AM
நிஃப்டி குறியீடு 315.95 புள்ளிகள் சரிந்து 16,182.10 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 4, 2022 10:34 AM
1050.65 புள்ளிகள் சரிந்து 54,052.03 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 4, 2022 10:31 AM
ரூ.14500 கோடி முதலீட்டை ஈர்க்கும் திட்டத்தை அறிவித்த பின்னர் வோடபோன் ஐடியா பங்குகள் 3 சதவீதம் வரையில் சரிவு
Mar 4, 2022 10:31 AM
ஜப்பான் நிக்கி குறியீடு 15 மாத சரிவு
Mar 4, 2022 10:30 AM
ஏப்ரல் 4ஆம் தேதி முதல் அனைத்து ஊழியர்களையும் கூகுள் அலுவலகத்திற்கு அழைத்துள்ளது
Mar 4, 2022 10:10 AM
900 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு
Mar 4, 2022 10:10 AM
சென்செக்ஸ் குறியீடு 820 புள்ளிகள் சரிந்து 54,282.02 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 4, 2022 10:10 AM
டாடா ஸ்டீல் 1.04 சதவீதம் உயர்ந்து 1316.70 ரூபாயாக உள்ளது
Mar 4, 2022 10:09 AM
ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் உக்ரைன் அணுமின் நிலையத்தில் தீ விபத்து
Mar 4, 2022 10:09 AM
உக்ரைன் அணுமின் நிலையம் வெடித்தால் செர்னோபில் அணு உலை விபத்தை விடவும் 10 மடங்கு பெரியதாக இருக்கு
Mar 4, 2022 10:09 AM
உக்ரைன் நாட்டுக்குள் தொடர்ந்து முன்னேறும் ரஷ்ய படைகள்
Mar 3, 2022 4:00 PM
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 366.22 புள்ளிகள் சரிந்து 55,102.68 புள்ளிகளை அடைந்துள்ளது
Mar 3, 2022 4:00 PM
நிஃப்டி குறியீடு 107.90 புள்ளிகள் சரிந்து 16,498.05 புள்ளிகளை அடைந்துள்ளது
Mar 3, 2022 3:59 PM
கச்சா எண்ணெய் விலை தொடர் உயர்வால் இந்திய வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பாக இருக்கும்
Mar 3, 2022 3:59 PM
கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஆட்டோமொபைல் துறை பாதிக்கப்படலாம்
Mar 3, 2022 3:59 PM
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 75.95 ஆக சரிவு
Mar 3, 2022 3:59 PM
இன்றைய வர்த்தகத்தில் 440 நிறுவனங்கள் அப்பர் சர்கியூட் அளவீட்டை தொட்டு உள்ளது
Mar 3, 2022 3:58 PM
வர்த்தக முடிவில் 172 நிறுவனங்கள் லோவர் சர்கியூட் அளவீட்டை தொட்டு உள்ளது
Mar 3, 2022 3:58 PM
இன்று 85 நிறுவனங்கள் 52 வார உயர்வையும், 32 நிறுவனங்கள் 52 வார சரிவையும் தொட்டு உள்ளது
Mar 3, 2022 2:57 PM
சென்செக்ஸ் குறியீடு 223.61 புள்ளிகள் உயர்ந்து 55,245.29 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 3, 2022 2:56 PM
நிஃப்டி குறியீடு 80.55 புள்ளிகள் உயர்ந்து 16,525.40 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 3, 2022 2:56 PM
171 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்டோவ்க்ராப்ட் பங்குகள் விற்பனை
Mar 3, 2022 2:56 PM
இண்டிகோ பெயின்ட்ஸ் ஏப்ரல் மாதத்தில் பெயின்ட் விலையை 4-5 சதவீதம் உயர்த்த முடிவு
Mar 3, 2022 2:56 PM
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 118 டாலருக்கு உயர்வு
Mar 3, 2022 2:56 PM
அக்ரி நெட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் 49.98 சதவீத பங்குகளை நெர்கா கெமிக்கல்ஸ் வாங்குகிறது
Mar 3, 2022 2:55 PM
உலோக நிறுவன பங்குகள் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது
Mar 3, 2022 12:45 PM
சென்செக்ஸ் குறியீடு 129.55 புள்ளிகள் சரிந்து 55,339.35 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 3, 2022 12:45 PM
நிஃப்டி குறியீடு 48.35 புள்ளிகள் சரிந்து 16,557.60 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 3, 2022 12:44 PM
ஆட்டோமொபைல் இண்டெக்ஸ் சரிவு
Mar 3, 2022 12:44 PM
கச்சா எண்ணெய் விலை 125 டாலர் வரையில் உயர அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது
Mar 3, 2022 12:44 PM
WTI கச்சா எண்ணெய் விலை 114.99 டாலராக உயர்வு, செப்டம்பர் 2008க்கு பின் புதிய உச்சம்
Mar 3, 2022 12:44 PM
விப்ரோ, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் பங்குகள் 3 சதவீதம் வரையில் உயர்வு
Mar 3, 2022 12:44 PM
எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்காக ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் சான்மானியா உடனான கூட்டணி நிறுவனத்தில் 200 மில்லியன் டாலர் முதலீடு
Mar 3, 2022 12:44 PM
ஐடி மற்றும் உலோக பங்குகளில் அதிகப்படியான முதலீடு
Mar 3, 2022 12:43 PM
வங்கி மற்றும் ஆட்டோ பங்குகள் சரிவு
Mar 3, 2022 12:43 PM
எல்ஐசி ஐபிஓ அடுத்த நிதியாண்டுக்கு ஒத்திவைக்கப்படலாம்
Mar 3, 2022 12:43 PM
AGS Transact பங்குகள் 20 சதவீதம் உயர்வு
Mar 3, 2022 11:00 AM
சென்செக்ஸ் குறியீடு வெறும் 67.48 புள்ளிகள் உயர்ந்து 55,536.38 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 3, 2022 10:59 AM
நிஃப்டி குறியீடு 13.60 புள்ளிகள் உயர்ந்து 16,619.55 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 3, 2022 10:58 AM
கோல் இந்தியா பங்குகள் 7 சதவீதம் வரையில் உயர்வு
Mar 3, 2022 10:58 AM
இன்போசிஸ் பங்குகள் 1 சதவீதம் வரையில் உயர்வு
Mar 3, 2022 10:58 AM
கரூர் வைஸ்யா வங்கி பங்குகள் 2.39 சதவீதம் சரிவு
Mar 3, 2022 10:58 AM
ஈவுத்தொகை வெளியிடும் காரணத்தால் வேதாந்தா பங்குகள் 3.5 சதவீதம் உயர்வு
Mar 3, 2022 10:57 AM
மார்ச் மாத இறுதிக்குள் அமெரிக்க பெடரல் வங்கி 0.25 சதவீதம் வட்டியை உயர்த்தும்
Mar 3, 2022 10:57 AM
அமெரிக்க பெடரல் வங்கி 0.50 சதவீதம் வரையிலான வட்டியை உயர்த்த திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது
Mar 3, 2022 10:55 AM
நிஃப்டி வங்கி குறியீடு 0.6 சதவீதம் சரிவு
Mar 3, 2022 10:55 AM
பிட்காயின் விலை 2.2 சதவீதம் சரிவு, எதிரியம் 3.5 சதவீதம் சரிவு
Mar 3, 2022 10:55 AM
கச்சா எண்ணெய் விலை 117 டாலரை தாண்டியது
Mar 3, 2022 10:55 AM
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 75.75 ஆக உள்ளது
Mar 3, 2022 10:54 AM
ஐடி பங்குகள் திடீர் உயர்வு, அசத்தும் டெக் மஹிந்திரா
Mar 3, 2022 10:54 AM
பங்குச்சந்தை முதலீட்டில் ரஷ்யா -உக்ரைன் போர் பதற்றம் அதிகமாக உள்ளது
Mar 2, 2022 3:40 PM
சென்செக்ஸ் குறியீடு 778.38 புள்ளிகள் சரிந்து 55,468.90 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 2, 2022 3:40 PM
நிஃப்டி குறியீடு 187.95 புள்ளிகள் சரிந்து 16,605.95 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 2, 2022 3:40 PM
கோல் இந்தியா பங்குகள் 10 சதவீதம் வரையில் உயர்வு
Mar 2, 2022 3:39 PM
3வது நாளாக கோல் இந்தியா பங்குகள் உயர்வு
Mar 2, 2022 3:39 PM
எல்ஐசி ஐபிஓ எதிரொலியாக இன்சூரன்ஸ் நிறுவன பங்குகள் 2-6 சதவீதம் உயர்வு
Mar 2, 2022 3:39 PM
51 ரஷ்ய நிறுவனங்களின் தரத்தை மூடிஸ் குறைத்துள்ளது
Mar 2, 2022 3:39 PM
ஆட்டோமொபைல் துறையில் சிப் தட்டுப்பாடு தொடர்கிறது
Mar 2, 2022 3:38 PM
அமெரிக்க டாலருக்கு எதிரான ரஷ்ய ரூபிள் மதிப்பு 109.55 ஆக சரிவு
Mar 2, 2022 3:38 PM
ரஷ்ய ரூபிள் மதிப்பு இன்று ஒரு நாளில் மட்டும் 7 சதவீதம் உயர்வு
Mar 2, 2022 2:27 PM
மெக்சிகோ CEMEX நிறுவனத்தின் 7 வருட வர்த்தகத்தை டிசிஎஸ் கைப்பற்றியது
Mar 2, 2022 2:27 PM
பணவீக்க உயர்வால் ஆட்டோமொபைல் விற்பனை சரிவு
Mar 2, 2022 2:27 PM
இந்தியா VIX குறியீடு 8 சதவீதம் உயர்வு
Mar 2, 2022 2:26 PM
ஐரோப்பிய பிளே ஸ்டோரில் இருந்து RT, ஸ்புட்நிக் செயலிகளை கூகுள் தடை செய்துள்ளது.
Mar 2, 2022 2:26 PM
நிஃப்டி வங்கி குறியீடு 3.5 சதவீதம் வரையில் சரிவு
Mar 2, 2022 2:26 PM
பயோகான் பங்குகள் 1 சதவீதம் வரையில் சரிவு
Mar 2, 2022 12:57 PM
சென்செக்ஸ் குறியீடு 1153.9 புள்ளிகள் சரிந்து 55,093.38 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 2, 2022 12:57 PM
நிஃப்டி குறியீடு 301.20 புள்ளிகள் சரிந்து 16,492.70 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 2, 2022 12:57 PM
சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு தொடர்ந்து சரிந்து வருகிறது
Mar 2, 2022 12:57 PM
வங்கி பங்குகள் அதிகப்படியான சரிவை பதிவு செய்துள்ளது
Mar 2, 2022 12:57 PM
ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி 4 சதவீதத்திற்கு மேல் சரிவு
Mar 2, 2022 12:56 PM
காலை வர்த்தக சரிவு மூலம் முதலீட்டாளர்கள் சுமார் 76,808 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டு மதிப்பை இழந்துள்ளனர்
Mar 2, 2022 12:56 PM
மாஸ்கோ எக்ஸ்சேஞ்ச் புதன்கிழமையும் முடங்கியது
Mar 2, 2022 12:56 PM
டாடா ஸ்டீல் பங்குகள் 4 சதவீதம் வரையில் உயர்வு
Mar 2, 2022 12:56 PM
கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை மூலம் ஆசிய சந்தையும் மொத்தமும் சரிவை சந்தித்துள்ளது
Mar 2, 2022 12:54 PM
சென்செக்ஸ் குறியீடு இன்று அதிகப்படியாக 1150 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது
Mar 2, 2022 12:41 PM
கச்சா எண்ணெய் விலை 110 டாலரை தாண்டியது
Mar 2, 2022 12:40 PM
இந்திய பொருளாதார வளர்ச்சிக்குக் கச்சா எண்ணெய் விலை உயர்வு பெரும் முட்டுக்கட்டை
Mar 2, 2022 12:40 PM
2030க்குள் டிசிஎஸ் நிறுவனம் வருடத்திற்கு 50 பில்லியன் டாலர் வருமானத்தைப் பெறும் - ராஜேஷ் கோபிநாதன்
Mar 2, 2022 12:40 PM
தங்கம் விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 1945 டாலரில் இருந்து 1933 டாலருக்கு சரிவு
Mar 2, 2022 12:40 PM
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிப்ரவரி மாத விற்பனை 16 சதவீதம் சரிவு
Mar 2, 2022 12:40 PM
அசோக் லேலண்ட் விற்பனை 7 சதவீதம் வரையில் உயர்வு
Mar 2, 2022 12:40 PM
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா விற்பனை 89 சதவீதம் உயர்வு
Mar 2, 2022 12:40 PM
மஹிந்திரா-வின் டிராக்டர் விற்பனை 27 சதவீதம் சரிவு
Mar 2, 2022 12:39 PM
ஆட்டோமொபைல் பங்குகள் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது
Feb 28, 2022 4:01 PM
ஜெனிராலி நிறுவனத்தில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்ய பியூச்சர் எண்டர்பிரைசர்ஸ்-க்கு தடை விதித்துள்ளது மும்பை நீதிமன்றம்
Feb 28, 2022 4:01 PM
மெட்டல் பங்குகள் தொடர் உயர்வு
Feb 28, 2022 4:01 PM
பயோகான் பங்குகள் 8 சதவீதம் வரையில் சரிவு
Feb 28, 2022 4:00 PM
பிட்காயின், எதிரியம் விலை 4 சதவீதம் வரையில் சரிவு
Feb 28, 2022 4:00 PM
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களில் 18 நிறுவனங்கள் சரிவு
Feb 28, 2022 4:00 PM
டாடா ஸ்டீல் பங்குகள் 6.45 சதவீதம் உயர்வு
Feb 28, 2022 4:00 PM
NCD வாயிலாக 500 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட பிராமல் எண்டர்பிரைசர்ஸ் முடிவு
Feb 28, 2022 4:00 PM
சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 388.76 புள்ளிகள் உயர்ந்து 56,247.28 புள்ளிகளை எட்டியுள்ளது
Feb 28, 2022 3:59 PM
நிஃப்டி குறியீடு 135.50 புள்ளிகள் உயர்வில் 16,793.90 புள்ளிகளை எட்டியுள்ளது
Feb 28, 2022 3:38 PM
லண்டன், ஜெர்மனி சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ரஷ்ய ஈக்விட்டி ETF-கள் 35 சதவீதம் வரையில் சரிவு
Feb 28, 2022 3:38 PM
வெஸ்ட் லைப், சபையர் புட்ஸ் 2 சதவீதத்திற்கு மேல் சரிவு
Feb 28, 2022 3:37 PM
சரிவில் தத்தளித்த தானி சரிவீசஸ் 7.93 சதவீதம் உயர்வு
Feb 28, 2022 3:37 PM
பியூச்சர் ரீடைல் பங்குகள் 7.86 சதவீதம் உயர்வு
Feb 28, 2022 3:37 PM
செபி அமைப்பின் புதிய சேர்பர்சனாக மாதவி பூரி நியமனம்
Feb 28, 2022 3:37 PM
சென்செக்ஸ் குறியீடு 377.81 புள்ளிகள் உயர்ந்து 56,210.69 புள்ளிகளை எட்டியுள்ளது
Feb 28, 2022 3:36 PM
நிஃப்டி குறியீடு 124.30 புள்ளிகள் உயர்ந்து 16,782.70 புள்ளிகளை எட்டியுள்ளது
Feb 28, 2022 3:24 PM
13.50 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தைப் பெற்றது ஜென் டெக்னாலஜிஸ்
Feb 28, 2022 3:24 PM
Endurance டெக்னாலஜிஸ் பங்குகள் 6 சதவீதம் வரையில் சரிவு
Feb 28, 2022 3:24 PM
சரிவில் துவங்கிய ஐரோப்பியச் சந்தை
Feb 28, 2022 3:24 PM
ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான பேச்சுவார்த்தை துவங்கும் வேளையில், உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் குறைந்தது, போர் ஓலி நிறுத்தப்பட்டது
Feb 28, 2022 3:24 PM
நிஃப்டி மெட்டல் 4.4 சதவீதம் வரையில் உயர்வு
Feb 28, 2022 3:24 PM
அமெரிக்க டெக் நிறுவனங்களான ஆப்பிள், கூகுள், நெட்பிளிக்ஸ், மெட்டா, ரஷ்யாவில் சேவையை முடக்கியுள்ளது
Feb 28, 2022 3:23 PM
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபிள் நாணயம் 26 சதவீதம் சரிவு
Feb 28, 2022 1:52 PM
பெலாரஸ் நாட்டின் வர்த்தக நேரத்தை ஒரு மணிநேரம் தாமதமாக துவங்க உள்ளது
Feb 28, 2022 1:51 PM
ரஷ்ய பத்திரங்களை விற்பனை செய்ய வந்துள்ள அனைத்து வெளிநாட்டு கோரிக்கைகளையும் ரத்து செய்துள்ளதாக ரஷ்ய மத்திய வங்கி தெரிவித்துள்ளது
Feb 28, 2022 12:01 PM
1000 புள்ளிகள் சரிவில் இருந்து மீண்ட மும்பை பங்குச்சந்தை
Feb 28, 2022 12:00 PM
சென்செக்ஸ் குறியீடு 25.27 புள்ளிகள் மட்டும் சரிந்து 55,833.25 புள்ளிகளை எட்டியுள்ளது
Feb 28, 2022 12:00 PM
நிஃப்டி குறியீடு 10.90 புள்ளிகள் உயர்ந்து 16,669.30 புள்ளிகளை எட்டியுள்ளது
Feb 28, 2022 12:00 PM
ஜெப்ரீஸ் அறிவிப்புக்குப் பின் கெயில் பங்குகள் 6 சதவீதம் வரையில் உயர்வு
Feb 28, 2022 12:00 PM
கெயில் நிறுவன பங்குகளுக்கு "buy" என்ற தகுதியை அளித்துள்ளது ஜெப்ரீஸ்
Feb 28, 2022 12:00 PM
ரஷ்ய வங்கிகள் மீது அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா அடுத்தடுத்து தடை
Feb 28, 2022 12:00 PM
ரிலையன்ஸ் ரீடைல், பியூச்சர் ரீடைல் கடைகளையும், ஊழியர்களையும் கைப்பற்றும் காரணத்தால் பியூச்சர் குரூப் பங்குகள் 6-14 சதவீதம் வரையில் உயர்வு
Feb 28, 2022 11:59 AM
ரஷ்ய நாணயமாக ரூபிள் மதிப்பு 30 சதவீதம் வரையில் சரிவு
Feb 28, 2022 10:48 AM
சென்செக்ஸ் குறியீடு 468.46 புள்ளிகள் சரிந்து 55,390.06 புள்ளிகளை எட்டியுள்ளது
Feb 28, 2022 10:48 AM
நிஃப்டி குறியீடு 121.75 புள்ளிகள் சரிந்து 16,536.65 புள்ளிகளை எட்டியுள்ளது
Feb 28, 2022 10:48 AM
பார்தி ஏர்டெல் பங்குகள் 3 சதவீதம் சரிவு
Feb 28, 2022 10:47 AM
இண்டஸ் டவர்ஸ், வோடபோன் ஐடியா பங்குகள் 2 சதவீதம் வரையில் உயர்வு
Feb 28, 2022 10:47 AM
ஹெச்டிஎப்சி லைப், பேடிஎம், ஐசிஐசிஐ லாம்பார்ட், பினோ பேமெண்ட்ஸ் பங்குகள் 52 வார சரிவை எட்டியுள்ளது
Feb 28, 2022 10:47 AM
பயோகான் பங்குகள் 6.5 சதவீதம் வரையில் சரிவு
Feb 28, 2022 10:46 AM
மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை
Feb 28, 2022 10:46 AM
உலோக துறை தவிர அனைத்து துறைகளும் இன்று சரிவு
Feb 28, 2022 10:46 AM
இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வரையில் சரிவு
Feb 28, 2022 10:46 AM
கச்சா எண்ணெய் விலை இன்று 6 சதவீதம் வரையில் உயர்வு
Feb 28, 2022 10:46 AM
ரெயின் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 10.82 சதவீதம் வரையில் சரிவு
Feb 28, 2022 10:46 AM
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 40 பைசா சரிந்து 75.73 ரூபாயாக உள்ளது
Feb 28, 2022 10:45 AM
பிட்காயின், எதிரியம் பங்குகள் சுமார் 4 சதவீதம் வரையில் சரிவு
Feb 28, 2022 10:45 AM
பியூச்சர் ரீடைல் பங்குகள் 10.59 சதவீதம் வரையில் உயர்வு
Feb 25, 2022 3:53 PM
73 நிறுவனங்கள் 52 வார உயர்வை எட்டியுள்ளது
Feb 25, 2022 3:53 PM
52 நிறுவனங்கள் 52 வார சரிவை எட்டியுள்ளது
Feb 25, 2022 3:53 PM
308 நிறுவனங்கள் அப்பர் சர்கியூட் அளவீட்டை எட்டியுள்ளது
Feb 25, 2022 3:53 PM
297 நிறுவனங்கள் லோவர் சர்கியூட் அளவீட்டை எட்டியுள்ளது
Feb 25, 2022 3:53 PM
297 நிறுவனங்கள் லோவர் சர்கியூட் அளவீட்டை எட்டியுள்ளது
Feb 25, 2022 3:53 PM
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களில் 29 நிறுவனங்கள் உயர்வுடன் இந்த வார வர்த்தகத்தை முடித்துள்ளது
Feb 25, 2022 3:52 PM
மும்பை பங்குச்சந்தை 7 நாள் தொடர் சரிவில் இருந்து இன்று மீண்டுள்ளது
Feb 25, 2022 3:52 PM
சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 1328.61 புள்ளிகள் உயர்ந்து 55,858.52 புள்ளிகளை எட்டியுள்ளது
Feb 25, 2022 3:52 PM
நிஃப்டி குறியீடு 410.45 புள்ளிகள் உயர்ந்து 16,658.40 புள்ளிகளை எட்டியுள்ளது
Feb 25, 2022 3:17 PM
சர்வதேச நிதியியல் தளத்தில் இருந்து ரஷ்யாவின் இணைப்பை மொத்தமாக நீக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் முடிவு
Feb 25, 2022 3:17 PM
ஐரோப்பிய சந்தை உயர்வுடன் துவங்கியுள்ளது
Feb 25, 2022 3:16 PM
நிஃப்டி எப்எப்சிஜி குறியீடு 1.6 சதவீதம் வரையில் உயர்வு
Feb 25, 2022 3:16 PM
பாமாயில் விலை தொடர் உயர்வு
Feb 25, 2022 3:16 PM
சென்செக்ஸ் குறியீடு 1341.62 புள்ளிகள் உயர்ந்து 55,871.53 புள்ளிகளை எட்டியுள்ளது
Feb 25, 2022 3:16 PM
நிஃப்டி குறியீடு 411.60 புள்ளிகள் உயர்ந்து 16,659.55 புள்ளிகளை எட்டியுள்ளது
Feb 25, 2022 1:20 PM
கச்சா எண்ணெய் விலை கட்டாயம் இந்தியாவின் பணவீக்கத்தை அதிகரிக்கும்
Feb 25, 2022 1:19 PM
நிஃப்ட் பேங்க் குறியீடு 4 சதவீதம் உயர்வு
Feb 25, 2022 1:19 PM
நிஃப்டி மெட்டல் குறியீடு 6 சதவீதம் வரையில் உயர்வு
Feb 25, 2022 1:19 PM
பிப்ரவரி ஆட்டோமொபைல் துறை வர்த்தகம் சரிவில் இருந்து மீண்டது
Feb 25, 2022 1:19 PM
IRCTC பங்குகள் 7.26 சதவீதம் வரையில் உயர்வு
Feb 25, 2022 1:19 PM
சென்செக்ஸ் குறியீடு 1355.91 புள்ளிகள் உயர்ந்து 55,885.82 புள்ளிகளை எட்டியுள்ளது
Feb 25, 2022 1:19 PM
நிஃப்டி குறியீடு 419.30 புள்ளிகள் உயர்ந்து 16,667.25 புள்ளிகளை எட்டியுள்ளது
Feb 25, 2022 1:15 PM
ஸ்மால் கேப் பங்குகள் சரிவில் இருந்து மீண்டு வருகிறது
Feb 25, 2022 1:15 PM
நேற்று 50 சதவீதம் வரையில் சரிந்த ரஷ்ய பங்குச்சந்தை இன்று 25 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது
Feb 25, 2022 1:15 PM
ரஷ்ய பங்குச்சந்தையின் RTS குறியீடு 25 சதவீதமும், MOEX குறியீடு 20 சதவீதம் வரையில் உயர்வு
Feb 25, 2022 1:15 PM
ஆசிய சந்தையைப் போலவே ரஷ்ய பங்குச்சந்தையும் இன்று உயர்வுடன் துவங்கியுள்ளது
Feb 25, 2022 1:14 PM
NMDC பங்கு மதிப்பு 5.3 சதவீதம் வரையில் உயர்ந்து 141.5 ரூபாயாக உள்ளது
Feb 25, 2022 1:14 PM
கிரிப்டோகரன்சியை அதிகாரப்பூர்வ முதலீடாக அறிவிப்பதில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன - சுப்ரீம் கோர்ட் கேள்வி
Feb 25, 2022 10:52 AM
இண்டஸ்இந்த் வங்கி, டாடா ஸ்டீல் பங்குகள் 5 சதவீதம் மேல் உயர்வு
Feb 25, 2022 10:52 AM
டெக் மஹிந்திரா பங்குகள் 4.93 சதவீதம் வரையில் உயர்வு
Feb 25, 2022 10:52 AM
பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ், என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி பங்குகள் 4 சதவீதத்திற்கு மேல் உயர்வு
Feb 25, 2022 10:52 AM
உணவுப் பொருட்களின் விலை உயரும் என கணிக்கப்பட்டு உள்ளதால் FMCG துறை நிறுவனங்களான ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே ஆகிய நிறுவன பங்குகள் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது
Feb 25, 2022 10:49 AM
சென்செக்ஸ் குறியீடு 1615.6 புள்ளிகள் உயர்ந்து 56,145.51 புள்ளிகளை எட்டியுள்ளது
Feb 25, 2022 10:49 AM
நிஃப்டி குறியீடு 494 புள்ளிகள் உயர்ந்து 16,741.95 புள்ளிகளை எட்டியுள்ளது
Feb 25, 2022 10:49 AM
என்எஸ்ஈ ரியல் எஸ்டேட் குறியீடு 5 சதவீதம் வரையில் உயர்வு
Feb 25, 2022 10:49 AM
பேடிஎம் பங்குகள் 2.75 சதவீதம் உயர்வு
Feb 25, 2022 10:49 AM
நைகா பங்குகள் 1.09 சதவீதம் உயர்வு
Feb 25, 2022 10:49 AM
சோமேட்டோ பங்குகள் 4.08 சதவீதம் உயர்வு
Feb 25, 2022 10:49 AM
நிப்டி 50 குறியீட்டில் இந்தியன் ஆயில் நிறுவனத்தை வெளியேற்றி அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் நுழைந்துள்ளது
Feb 25, 2022 10:48 AM
பிட்காயின், எதிரியம், டெரா ஆகியவை 17 சதவீதம் வரையில் உயர்வு
Feb 25, 2022 10:48 AM
இன்றைய கிரிப்டோ சந்தை வர்த்தகத்தில் டோஜ் காயின் மதிப்பு சரிவு
Feb 25, 2022 10:48 AM
ரஷ்யா -உக்ரைன் போர் மூலம் ஆசியாவில் சமையல் எண்ணெய், உணவு விலைகள் அதிகரிக்கும்
Feb 25, 2022 10:48 AM
வேதாந்தா ரேட்டிங்கை கிரிசில் அமைப்பு AA- ல் இருந்து AA வாக உயர்த்தியுள்ளது
Feb 25, 2022 10:48 AM
எல்ஐசி 74 வங்கிக் காப்பீட்டுக் கூட்டாளிகளைக் கொண்டுள்ளது, நாட்டின் மிகப்பெரிய நெட்வொர்க்
Feb 25, 2022 10:47 AM
74 வங்கிக் காப்பீட்டுக் கூட்டாளிகளிடம் இருந்து வெறும் 3 சதவீத ப்ரீமியம் மட்டுமே எல்ஐசி பெறுகிறது
Feb 25, 2022 10:47 AM
ரஷ்யா -உக்ரைன் போர் மூலம் ஏற்பட்டு உள்ள கச்சா எண்ணெய் விலை பாதிப்பு சில காலம் நீடிக்கும்
Feb 25, 2022 10:47 AM
ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ் பைனான்ஸ், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் பைனான்ஸ் நிறுவனங்கள் பத்திரங்களை வெளியிட்டு முதலீட்டைத் திரட்ட உள்ளது
Feb 25, 2022 10:47 AM
18 மாத உயர்வில் தங்கம் விலை
Feb 25, 2022 10:47 AM
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலருக்கு சரிந்துள்ளது
Feb 24, 2022 4:25 PM
கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க வளைகுடா நாடுகள் உற்பத்தியை அதிகரிக்குமா என்பது தான் தற்போது முக்கிய கேள்வியாக உள்ளது
Feb 24, 2022 4:25 PM
மும்பை பங்குச்சந்தையில் 3002 நிறுவனப் பங்குகள் இன்று சரிவு
Feb 24, 2022 4:02 PM
சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 2702.15 புள்ளிகள் சரிவில் 54,529.91 புள்ளிகளை அடைந்தது
Feb 24, 2022 4:02 PM
சென்செக்ஸ் வரலாற்றில் 4வது மோசமான வர்த்தகத்தை இன்று பதிவு செய்துள்ளது
Feb 24, 2022 4:02 PM
நிஃப்டி குறியீடு 815.30 புள்ளிகள் சரிந்து 16,247.95 புள்ளிகளை அடைந்தது
Feb 24, 2022 4:02 PM
டாடா மோட்டார்ஸ் பங்குகள் 9.59 சதவீதம் சரிவு
Feb 24, 2022 4:01 PM
ஆட்டோமொபைல் பங்குகள் அனைத்தும் சரிவு
Feb 24, 2022 4:01 PM
வியாழக்கிழமை மாலையில் வர்த்தகத்தை துவங்கிய மாஸ்கோ எக்ஸ்சேஞ்ச் ரஷ்ய பங்குகள் 50% சதவீதம் சரிவு
Feb 24, 2022 3:53 PM
நிஃப்டி பார்மா பங்குகள் 3.7 சதவீதம் சரிவு
Feb 24, 2022 3:53 PM
உக்ரைன் நாட்டின் 3வது மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது
Feb 24, 2022 3:53 PM
ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ளதால் இந்திய பார்மா நிறுவனங்களின் வர்த்தகம் பாதிப்பு
Feb 24, 2022 3:53 PM
கச்சா எண்ணெய் விலை 8 வருட உச்சத்தைத் தொட்டது
Feb 24, 2022 3:53 PM
கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க வளைகுடா நாடுகள் உற்பத்தியை அதிகரிக்குமா என்பது தான் தற்போது முக்கிய கேள்வியாக உள்ளது
Feb 24, 2022 3:52 PM
மும்பை பங்குச்சந்தையில் 3002 நிறுவனப் பங்குகள் இன்று சரிவு
Feb 24, 2022 2:50 PM
சென்செக்ஸ் குறியீடு 2,198.11 புள்ளிகள் சரிந்து 55,033.95 புள்ளிகளை எட்டியுள்ளது
Feb 24, 2022 2:50 PM
நிஃப்டி குறியீடு 648.20 புள்ளிகள் சரிந்து 16,415.05 புள்ளிகளை எட்டியுள்ளது
Feb 24, 2022 2:50 PM
6 மாத சரிவில் சென்செக்ஸ் குறியீடு
Feb 24, 2022 2:50 PM
சென்செக்ஸ் குறியீடு 55,116 புள்ளிகள் வரையில் சரிவு
Feb 24, 2022 2:50 PM
நிஃப்டி குறியீடு அதிகப்படியாக 16,413.8 புள்ளிகள் வரையில் சரிவு
Feb 24, 2022 2:50 PM
பிஎஸ்ஈ 500 குறியீட்டின் கீழ் இருக்கும் 77 நிறுவனங்கள் 52 வார சரிவை பதிவு செய்துள்ளது
Feb 24, 2022 2:49 PM
GAIL, BPCL, IOC, ONGC, ரிலையன்ஸ் 3-6 சதவீதம் வரையில் சரிவு
Feb 24, 2022 2:44 PM
ஆயில், கேஸ், எனர்ஜி துறை பங்குகள் சரிவடைந்துள்ளது
Feb 24, 2022 2:42 PM
ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையின் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை 103 டாலர் வரையில் உயர்வு
Feb 24, 2022 2:42 PM
நிஃப்டி ஆட்டோமொபைல் குறியீடு 5.3 சதவீதம் வரையில் சரிவு
Feb 24, 2022 2:28 PM
ஐரோப்பிய சந்தைகள் 2 - 4 சதவீதம் வரையில் சரிவு
Feb 24, 2022 2:28 PM
ஐரோப்பிய சந்தை வீழ்ச்சியில், சென்செக்ஸ் 1700 புள்ளிகளில் இருந்து மீண்டும் 2000 புள்ளிகளுக்கு சரிவு
Feb 24, 2022 1:30 PM
ரஷ்யா - உக்ரைன் போரின் காரணமாக அமெரிக்காவின் வட்டி விகித உயர்வு ஒத்திவைக்கச் சிறிய வாய்ப்பு உள்ளது
Feb 24, 2022 1:30 PM
என்எஸ்ஈ VIX குறியீடு 38.4 சதவீதமாக உயர்ந்து ஜூன் 2020 நிலையை அடைந்துள்ளது
Feb 24, 2022 1:29 PM
6 மாதத்தில் ரியல் எஸ்டேட் வர்த்தக சந்தை பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டு வளர்ச்சிப் பாதையில் உள்ளது
Feb 24, 2022 1:29 PM
பிஎஸ்ஈ 500 குறியீட்டில் 495 நிறுவனங்கள் சரிவு
Feb 24, 2022 1:29 PM
857 நிறுவனங்கள் லோவர் சர்கியூட் அளவீட்டை அடைந்துள்ளது
Feb 24, 2022 1:29 PM
டிவி18 பிராட்காஸ்ட் நிறுவனப் பங்குகள் 8.99 சதவீதம் வரையில் சரிவு