திங்கட்கிழமை உலக நாடுகளின் வட்டி விகித உயர்வு, சீனாவில் அதிகரிக்கும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் ஆகியவற்றினால் சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் ஆகியவை இன்று பங்குச்சந்தையை அதிகளவில் பாதித்துள்ளது.
இதன் வாயிலாக இன்று ஆசிய சந்தை வர்த்தகம் துவங்கும் போதே அதிகளவிலான சரிவைப் பதிவு செய்த காரணத்தால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 700 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் அன்னிய செலாவணி கையிருப்பு இன்றைய வர்த்தகத்தில் அதிகளவில் வெளியேறிய காரணத்தால் Forex கையிருப்பு 1 வருட சரிவைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் ரூபாய் மதிப்பு வரலாற்றுச் சரிவான 77.05-ஐ தாண்டி 77.42 ஆகச் சரிந்துள்ளது.
