தொடர்ந்து வர்த்தக சரிவை சந்தித்து வந்த மும்பை பங்குச்சந்தை விநாயகர் சதுர்த்தி முன்னீட்டு 3 நாள் விடுமுறைக்கு பின் திங்கட்கிழமை துவங்கிய வர்த்தகத்தில் சமீபத்தில் பார்க்க முடியாத அளவிற்கு நிலையான வர்த்தகத்தை பெற்றது.
இதனால் இன்றைய வர்த்தகம் நிலையான வர்த்தக உயர்வில் 180 புள்ளிகள் வரை உயர்வடைந்தது.

இன்போசிஸ்
நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறவனமான இன்போசிஸில் நிர்வாக இயக்குனராக நந்தன் நீலகேனி பொறுப்பேற்றது மட்டுமல்லாமல் புதிய சிஇஓ தேடும் பணியும் துவங்கியுள்ளது.
இதன் காரணமாக மிகப்பெரிய சரிவில் இருந்த இன்போசிஸ் இன்று 3.14 சதவீதம் வரையில் உயர்ந்து இதன் பங்கு விலை 941.15 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகத்தில் நிலையான வர்த்தகத்தை பெற்ற மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 154.76 புள்ளிகள் உயர்ந்து 31,750.82 புள்ளிகளை அடைந்தது திங்கட்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.

நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிலையான வர்த்தக உயர்வை பெற்ற நிஃப்டி குறியீடு திங்கட்கிழமை வர்த்தக முடிவில் 55.75 புள்ளிகள் உயர்ந்து 9,912.80 புள்ளிகளை அடைந்தது.

முக்கிய நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையின் எஸ் அண்ட் பி குறியீட்டில் இருக்கும் டாப் 30 நிறுவனங்களின் பட்டியலில் இன்று இன்போசிஸ் நிறுவனம் அதிகளவிலான உயர்வை அடைந்தது.
இதன தொடர்ந்து என்டிபிசி, சன் பார்மா, ஹீரோ மோட்டோகார்ப், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஆதானி போர்ட்ஸ் ஆகியவை அதிகளவிலான உயர்வை கண்டுள்ளது.