தொடர் சரிவில் இருந்து மீண்டு 286 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

4 நாட்கள் தொடர் விடுமுறையின் காரணமாக மும்பை பங்குச்சந்தை இயங்கவில்லை, ஆசிய சந்தை முதலீட்டாளர்கள் அதிக முதலீடு செய்த காரணத்தால் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வடைந்தது.

மும்பை பங்குச்சந்தை
 

மும்பை பங்குச்சந்தை

4 நாட்கள் விடுமுறையின் காரணமாக அன்னிய முதலீட்டாளர்கள் இன்று அதிகளவில் முதலீடு செய்தனர். இதன் வாயிலாக இன்று காலை முதல் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடு தொடர் உயர்வைச் சந்தித்தது.

நாணய கொள்கை

நாணய கொள்கை

நடப்பு நிதியாண்டின் முதல் நாணய கொள்கை கூட்டம் வருகிற ஏப்ரல் 5ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தாது எனக் கணிப்புகள் கூறுகிறது. இதன் காரணமாகவும் அன்னிய முதலீட்டாளர்கள் இன்று அதிகமாக முதலீடு செய்தனர்.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 286.68 புள்ளிகள் உயர்ந்து 33,255.36 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 98.10 புள்ளிகள் உயர்ந்து 10,211.80 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

முக்கிய நிறுவனங்கள்
 

முக்கிய நிறுவனங்கள்

இன்றைய வர்த்தகத்தில் சந்தையில் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் கோட்டாக் மஹிந்திரா, அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் 4.50 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது.

ஐசிஐசிஐ வங்கி அதிகப்படியாக 5.93 சதவீதம் வரை சரிந்து அதன் முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex surges 300 points, Nifty above 10200

Sensex surges 300 points, Nifty above 10200
Story first published: Monday, April 2, 2018, 16:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?