கடந்த சில தினங்களாக மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று தான் யெஸ் பேங்க். நிதி நெருக்கடி, நிர்வாகக் சீர்கேடு உள்ளிட்ட பல பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, யெஸ் பேங்கினை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது ரிசர்வ் வங்கி.
இந்த நிலையில் யெஸ் பேங்கினை மீள்ச்சியடையவும் பல்வேறு திட்டங்கள் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி கூறியது.
இதனையடித்து எஸ்பிஐ, ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஐசிஐசிஐ உள்ளிட்ட பல வங்கிகள் யெஸ் பேங்கில் முதலீடு செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தொடர் ஏற்றம்
இந்த நிலையில் யெஸ் பேங்க் பற்றி பல பரப்பரப்பான செய்திகள் வெளியானாலும், அதில் சில நல்ல விஷயங்களும் வெளியாகின. இதன் காரணமாக கடந்த ஏழு அமர்வுகளில் மட்டும் யெஸ் பேங்கின் பங்கின் விலை 1000% ஏற்றம் கண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் எஸ்பிஐ உள்ளிட்ட எட்டு வங்கிகள் இதில் முதலீடு செய்வதாக ஒப்புக் கொண்ட பின் தான், இந்த அதிரடியான ஏற்றம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
பங்கு விலை
குறிப்பாக சொல்லவேண்டுமானால் கடந்த மார்ச் 6 அன்று யெஸ் பேங்கின் பங்கு விலை 5.50 ரூபாயாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் எஸ்பிஐயின் அறிவிப்பு பின்னர் இன்று வரை இந்த பங்கின் விலையானது 1001% ஏற்றம் கண்டுள்ளது. இன்று யெஸ் பேங்கின் அதிகபட்ச விலையாக 64.15 ரூபாயாகவும், தற்போது 61.15-க்கும் வர்த்தகமாகியும் வருகிறது. இந்த நிலையில் இந்த பங்கின் விலையானது மட்டும் 61% ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது
அதிலும் கடந்த திங்கட்கிழமையன்று ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சக்தி காந்த தாஸ் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது. ஆக இது குறித்து யாரும் கவலை பட வேண்டாம். எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை. இதனால் யாரும் தங்களது டெபாசிட் தொகையினை பயந்து எடுக்க வேண்டாம் என கூறியிருந்தார்.
மூடிஸ் என்ன சொல்கிறது
ஆர்பிஐயின் இந்த அறிக்கைக்கு பின்னர், மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் யெஸ் பேங்கின் மதிப்பினை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் யெஸ் பேங்கின் மறுசீரமைப்பு உத்தரவாதத்திற்கு பிறகு, மூடிஸ் இந்த அதிரடியான நடவடிக்கையினை எடுத்துள்ளது. இதுவும் யெஸ் பேங்கின் பங்கு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
யெஸ் பேங்கில் முதலீடு
கடந்த மார்ச் 13 அன்று எஸ்பிஐயின் யெஸ் பேங்கின் மீட்புக்கான திட்டத்தற்கு ஆர்பிஐ ஒப்புதல் கொடுத்தது. இதனையடுத்து யெஸ் பேங்கில் எஸ்பிஐ, ஹெச்சிஎஃப்சி, கோட்டக் மகேந்திரா, பந்தன் வங்கி, ஐசிஐசிஐ, ஃபெடரல் பேங்க் ஐடிஎஃப்சி வங்கி உள்ளிட்ட வங்கிகள் 11,200 கோடி ரூபாய் முதலீட்டினை செய்ய முன்வந்துள்ளன.
நஷ்டம் தான்
முடிவடைந்த டிசம்பர் காலாண்டில் மட்டும் 18,564 கோடி ரூபாய் இழப்பினை கண்டுள்ளது. இதே மொத்த வாராக்கடன் விகிதமானது 7.39% இருந்து 18.87 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மொத்த கடன்களின் நிகர வாராக்கடன் 5.97% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த காலாண்டில் 4.35% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் யெஸ் பேங்கின் மறுமலர்ச்சி திட்டத்தினை அடுத்து பங்குகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications